Skip to main content

إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக எவர்கள்
ٱتَّقَوْا۟
அஞ்சினார்கள்
إِذَا مَسَّهُمْ
ஏற்பட்டால்/அவர்களுக்கு
طَٰٓئِفٌ
ஓர் எண்ணம்
مِّنَ
இருந்து
ٱلشَّيْطَٰنِ
ஷைத்தான்
تَذَكَّرُوا۟
நினைவுகூருகிறார்கள்
فَإِذَا هُم
அப்போது அவர்கள்
مُّبْصِرُونَ
பார்த்துக் கொள்கிறார்கள்

Innal lazeenat taqaw izaa massahum taaa'ifum minash Shaitaani tazakkaroo fa izaa hum mubsiroon

நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படு கிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானுடைய (தவறான) எண்ணம் ஊசலாடினால் அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கிறார்கள்; அது சமயம் அவர்களுடைய (அறிவுக்) கண் திறந்து விழிப்படைந்து விடுகிறார்கள்.

Tafseer

وَإِخْوَٰنُهُمْ
அவர்களுடைய சகோதரர்கள்
يَمُدُّونَهُمْ
அதிகப்படுத்துகிறார்கள்/அவர்களை
فِى ٱلْغَىِّ
வழிகேட்டில்
ثُمَّ
பிறகு
لَا يُقْصِرُونَ
அவர்கள் குறைவு செய்வதில்லை

Wa ikhwaanuhum yamuddoonahum fil ghaiyi summa laa yuqsiroon

எனினும் ஷைத்தானுடைய சகோதரர்களோ அவர்களை வழிகேட்டிலேயே இழுத்துச் செல்வார்கள். (அவர்களுக்குத் தீங்கிழைப்பதில்) யாதொரு குறைவும் செய்வதில்லை.

Tafseer

وَإِذَا لَمْ
நீர் வரவில்லையென்றால்/அவர்களிடம்
بِـَٔايَةٍ
ஒரு வசனத்தைக் கொண்டு
قَالُوا۟
கூறுகின்றனர்
لَوْلَا ٱجْتَبَيْتَهَاۚ
நீர் அதை தேர்ந்தெடுத்திருக்க வேண்டாமா?
قُلْ
கூறுவீராக
إِنَّمَآ أَتَّبِعُ
நான் பின்பற்றுவதெல்லாம்
مَا يُوحَىٰٓ
எதை/வஹீ அறிவிக்கப்படுகிறது
إِلَىَّ
எனக்கு
مِن رَّبِّىۚ
என் இறைவனிடமிருந்து
هَٰذَا
இவை
بَصَآئِرُ
தெளிவான ஆதாரங்கள், விளக்கங்கள்
مِن
இருந்து
رَّبِّكُمْ
உங்கள் இறைவன்
وَهُدًى
இன்னும் நேர்வழி
وَرَحْمَةٌ
இன்னும் கருணை
لِّقَوْمٍ يُؤْمِنُونَ
மக்களுக்கு/நம்பிக்கை கொள்கிறார்கள்

Wa izaa lam taatihim bi aayatin qaaloo law lajtabai tahaa; qul innamaaa attabi'u maa yoohaaa ilaiya mir Rabbee; haazaa basaaa'iru mir Rabbikum wa hudanw wa rahmatul liqawminy yu'minoon

(அவர்கள் விருப்பப்படி) யாதொரு வசனத்தை நீங்கள் அவர்களிடம் கொண்டு வராவிட்டால் (அதற்குப் பதிலாகத் தங்கள் விருப்பப்படி கற்பனையாக ஒரு வசனத்தை அமைத்து) "இதனை நீங்கள் வசனமாக எடுத்துக்கொள்ள வேண்டாமா?" என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர். அதற்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "என் இறைவனால் எனக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டவை களையே நான் பின்பற்றுகிறேன். இதுவோ உங்கள் இறைவனால் (உங்களுக்கு) அளிக்கப்பட்ட நல்லறிவாகவும், நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நேர்வழியாகவும், (இறைவனின்) அருளாகவும் இருக்கின்றது.

Tafseer

وَإِذَا قُرِئَ
ஓதப்பட்டால்
ٱلْقُرْءَانُ
குர்ஆன்
فَٱسْتَمِعُوا۟
செவி தாழ்த்துங்கள்
لَهُۥ
அதற்கு
وَأَنصِتُوا۟
இன்னும் வாய்மூடுங்கள்
لَعَلَّكُمْ تُرْحَمُونَ
நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக

Wa izaa quri'al Quraanu fastami'oo lahoo wa ansitoo la 'allakum turhamoon

(மனிதர்களே!) திருக்குர்ஆன் ஓதப்பட்டால் வாய்மூடி, செவி தாழ்த்தி அதனைக் கேளுங்கள். (அதனால்) நீங்கள் (இறைவனின்) அருளை அடைவீர்கள்.

Tafseer

وَٱذْكُر
நினைவு கூருவீராக
رَّبَّكَ
உம் இறைவனை
فِى نَفْسِكَ
உம் மனதில்
تَضَرُّعًا
பணிந்து
وَخِيفَةً
இன்னும் பயந்து
وَدُونَ
இன்றி
ٱلْجَهْرِ
சப்தம்
مِنَ ٱلْقَوْلِ
சொல்லில்
بِٱلْغُدُوِّ
காலையில்
وَٱلْءَاصَالِ
இன்னும் மாலையில்
وَلَا تَكُن
ஆகிவிடாதீர்
مِّنَ ٱلْغَٰفِلِينَ
கவனமற்றவர்களில்

Wazkur Rabbaka fee nafsika tadarru'anw wa kheefatanw wa doonal jahri minal qawli bilghuduwwi wal aasali wa laa takum minal ghaafileen

(நபியே!) உங்கள் மனதிற்குள் மிகப் பணிவோடும், உரத்த சப்தமின்றி பயத்தோடும் மெதுவாகவும் காலையிலும், மாலையிலும் உங்கள் இறைவனை நினைவு செய்து கொண்டிருங்கள்! அவனை மறந்தவர்களில் நீங்கள் ஆகிவிடாதீர்கள்!

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
عِندَ
இடம்
رَبِّكَ
உம் இறைவன்
لَا يَسْتَكْبِرُونَ
பெருமையடிக்க மாட்டார்கள்
عَنْ عِبَادَتِهِۦ
அவனை வணங்குவதைவிட்டு
وَيُسَبِّحُونَهُۥ
இன்னும் துதிப்பார்கள்/அவனை
وَلَهُۥ
அவனுக்கே
يَسْجُدُونَ۩
சிரம் பணிவார்கள்

Innal lazeena 'inda Rabbika laa yastakbiroona 'an 'ibaadatihee wa yusabbihoonahoo wa lahoo yasjudoon

எவர்கள் நிச்சயமாக உங்கள் இறைவனிடத்தில் இருக்கின்றார்களோ அவர்கள் ( மலக்குகள்) இறுமாப்பு கொண்டு அவனை வணங்காதிருப்பதில்லை. எனினும் "(நீ மிகப் பரிசுத்தமானவன்; நீ மிகப் பரிசுத்தமானவன்" என்று) அவனை (எப்பொழுதும்) நினைவு செய்துகொண்டும், அவனுக்கு சிரம் பணிந்து (வணங்கிக்) கொண்டும் இருக்கின்றனர்.

Tafseer