Skip to main content

وَإِذْ نَتَقْنَا
சமயம்/பிடுங்கினோம்
ٱلْجَبَلَ
மலையை
فَوْقَهُمْ
அவர்களுக்கு மேல்
كَأَنَّهُۥ
போன்று/அது
ظُلَّةٌ
நிழலிடும் மேகம்
وَظَنُّوٓا۟
இன்னும் எண்ணினர்
أَنَّهُۥ
நிச்சயமாக அது
وَاقِعٌۢ
விழுந்துவிடும்
بِهِمْ
அவர்கள் மீது
خُذُوا۟
பிடியுங்கள்
مَآ ءَاتَيْنَٰكُم
எதை/கொடுத்தோம்/உங்களுக்கு
بِقُوَّةٍ
பலமாக
وَٱذْكُرُوا۟
இன்னும் நினைவு கூருங்கள்
مَا فِيهِ
எது/அதில்
لَعَلَّكُمْ تَتَّقُونَ
நீங்கள் அஞ்சுவதற்காக

Wa iz nataqnal jabala fawqahum ka annahoo zullatunw wa zannooo annahoo waaqi'um bihim khuzoo maaa aatainaakum biquwwatinw wazkuroo maa feehi la'allakum tattaqoon

தங்கள் மீது விழுந்து விடுமென்று அவர்கள் எண்ணக் கூடியவாறு (சீனாய்) மலையை அவர்களுக்கு மேல் முகட்டைப் போல் நிறுத்தி (அவர்களை நோக்கி) "நாம் உங்களுக்குக் கொடுத்த (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றை (எப்பொழுதும்) கவனத்தில் வையுங்கள்; (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாகி விடலாம்" (என்று நாம் அவர்களுக்குக் கூறியதை நபியே! நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள்.)

Tafseer

وَإِذْ
சமயம்
أَخَذَ
எடுத்தான்
رَبُّكَ
உம் இறைவன்
مِنۢ بَنِىٓ
ஆதமின் சந்ததிகளில்
مِن ظُهُورِهِمْ
இருந்து/முதுகுகள்/அவர்களுடைய
ذُرِّيَّتَهُمْ
அவர்களின் சந்ததிகளை
وَأَشْهَدَهُمْ
இன்னும் சாட்சியாக்கினான்/அவர்களை
عَلَىٰٓ
மீதே
أَنفُسِهِمْ
அவர்கள்
أَلَسْتُ
நான் இல்லையா?
بِرَبِّكُمْۖ
உங்கள் இறைவனாக
قَالُوا۟
கூறினர்
بَلَىٰۛ
ஏன் இல்லை
شَهِدْنَآۛ
நாங்கள் சாட்சி கூறினோம்
أَن تَقُولُوا۟
நீங்கள் கூறாமல் இருப்பதற்காக
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
كُنَّا
இருந்தோம்
عَنْ هَٰذَا
இதை விட்டு
غَٰفِلِينَ
கவனமற்றவர்களாக

Wa iz akhaza Rabbuka mim Baneee Aadama min zuhoorihim zurriyyatahum wa ash hadahum 'alaa anfusihim alastu bi Rabbikum qaaloo balaa shahidnaaa; an taqooloo Yawmal Qiyaamati innaa kunnaa 'an haazaa ghaafileen

(நபியே!) உங்களது இறைவன் ஆதமுடைய மக்களை அவர்களுடைய (தந்தைகளின்) முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளாக வெளியாக்கி, அவர்களையே அவர்களுக்கு சாட்சியமாகவும் வைத்து (அவர்களை நோக்கி) "நான் உங்கள் இறைவனாக இல்லையா?" என்று கேட்டதற்கு, "ஏன் இல்லை (நீதான் எங்கள் இறைவன்! என்று) நாங்கள் சாட்சியம் கூறுகிறோம்" என்று அவர்கள் கூறியதை (நீங்கள் அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள். ஏனென்றால் (இதனை ஒருவரும் எங்களுக்கு ஞாபகமூட்டாததால்) நிச்சயமாக நாங்கள் இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாகி இருந்தோம்" என்று மறுமை நாளில் சொல்லாமல் இருப்பதற்காகவும்,

Tafseer

أَوْ
அல்லது
تَقُولُوٓا۟
நீங்கள் கூறாதிருப்பதற்காக
إِنَّمَآ
எல்லாம்
أَشْرَكَ
இணைவைத்தார்(கள்)
ءَابَآؤُنَا
எங்கள் மூதாதைகள்
مِن قَبْلُ
முன்னர்
وَكُنَّا
இருக்கிறோம்
ذُرِّيَّةً
சந்ததிகளாக
مِّنۢ بَعْدِهِمْۖ
பின்னர்/அவர்களுக்கு
أَفَتُهْلِكُنَا
அழிப்பாயா?/எங்களை
بِمَا فَعَلَ
செய்ததற்காக
ٱلْمُبْطِلُونَ
பொய்யர்கள்

Aw taqoolooo innamaaa ashraka aabaaa 'unaa min qablu wa kunnaa zurriyyatam mim ba'dihim afatuhlikunna bimaa fa'alal mubtiloon

அல்லது (பொய்யான தெய்வங்களை) இணையாக்கிய தெல்லாம் (நாங்களல்ல;) எங்களுக்கு முன் சென்றுபோன எங்கள் மூதாதைகள்தான். நாங்களோ அவர்களுக்குப் பின்னர் வந்த அவர்களுடைய சந்ததிகள். ஆகவே (அவர்களை நாங்கள் பின்பற்றினோம்.) அவர்கள் செய்த தகாத காரியங்களுக்காக நீ எங்களை அழித்துவிடலாமா?" என்று கூறாதிருப்பதற்காகவே (இதனை நாம் ஞாபகமூட்டுகிறோம் என்று நபியே! நீங்கள் கூறுங்கள்.)

Tafseer

وَكَذَٰلِكَ
இவ்வாறே
نُفَصِّلُ
விவரிக்கிறோம்
ٱلْءَايَٰتِ
வசனங்களை
وَلَعَلَّهُمْ يَرْجِعُونَ
இன்னும் அவர்கள் திரும்புவதற்காக

Wa kazaalika nufassihul Aayaati wa la'allahum yarji'oon

அவர்கள் (பாவங்களிலிருந்து) மீள்வதற்காக (நம்முடைய) வசனங்களை இவ்வாறு (தெளிவாக) விவரித்துக் கூறுகிறோம்.

Tafseer

وَٱتْلُ
ஓதிக் காட்டுவீராக
عَلَيْهِمْ
அவர்கள் மீது
نَبَأَ
செய்தியை
ٱلَّذِىٓ
எவன்
ءَاتَيْنَٰهُ
கொடுத்தோம்/அவனுக்கு
ءَايَٰتِنَا
நம் அத்தாட்சிகளை
فَٱنسَلَخَ
கழண்டான்
مِنْهَا
அதிலிருந்து
فَأَتْبَعَهُ
பின்தொடர்ந்தான்/அவனை
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
فَكَانَ
ஆகிவிட்டான்
مِنَ ٱلْغَاوِينَ
வழிகெட்டவர்களில்

Watlu 'alaihim naba allazeee aatainaahu Aayaatinaa fansalakha minhaa fa atba'a hush Shaytaano fakaana minal ghaaween

(நபியே!) நீங்கள் அவர்களுக்கு ("பல்ஆம் இப்னு பாஊர்" என்னும்) ஒருவனுடைய சரித்திரத்தை ஓதிக் காண்பியுங்கள். அவனுக்கு நாம் நம்முடைய அத்தாட்சிகளைக் கொடுத்(து கண்ணியமாக்கி வைத்)திருந்தோம். எனினும் அவன் "(பாம்பு தன் சட்டையை விட்டு வெளியேறுவதைப் போல) அதிலிருந்து முற்றிலும் வெளியேறிவிட்டான். ஆகவே, ஷைத்தான் அவனைப் பின்தொடர்ந்து சென்றான்; (அவனுடைய சூழ்ச்சிக்குள் சிக்கி) அவன் வழிதவறி விட்டான்.

Tafseer

وَلَوْ شِئْنَا
நாம் நாடியிருந்தால்
لَرَفَعْنَٰهُ
உயர்த்தியிருப்போம்/அவனை
بِهَا
அவற்றைக் கொண்டு
وَلَٰكِنَّهُۥٓ
என்றாலும்/நிச்சயமாக அவன்
أَخْلَدَ
நிரந்தரம் தேடினான்
إِلَى ٱلْأَرْضِ
பூமியில்
وَٱتَّبَعَ
இன்னும் பின்பற்றினான்
هَوَىٰهُۚ
தன் ஆசையை
فَمَثَلُهُۥ
ஆகவே அவனுடைய உதாரணம்
كَمَثَلِ
உதாரணத்தைப் போன்று
ٱلْكَلْبِ
நாய்
إِن تَحْمِلْ
நீர் துரத்தினால்
عَلَيْهِ
அதை
يَلْهَثْ
அது நாக்கைத் தொங்கவிடும்
أَوْ
அல்லது
تَتْرُكْهُ
நீர் விட்டு விட்டால்/அதை
يَلْهَثۚ
அது நாக்கைத் தொங்கவிடும்
ذَّٰلِكَ مَثَلُ
இது/உதாரணம்
ٱلْقَوْمِ ٱلَّذِينَ
மக்கள்/எவர்கள்
كَذَّبُوا۟
பொய்ப்பித்தனர்
بِـَٔايَٰتِنَاۚ
நம் வசனங்களை
فَٱقْصُصِ
விவரிப்பீராக
ٱلْقَصَصَ
சரித்திரத்தை
لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ
அவர்கள் சிந்திப்பதற்காக

Wa law shi'naa larafa'naahu bihaa wa laakin nahooo akhlada ilal ardi watta ba'a hawaah; famasaluhoo kamasalil kalb; in tahmil 'alaihi yalhas aw tatruk hu yalhas; zaalika masalul qawmil lazeena kazzaboo bi Aayaatinaa; faqsusil qasasa la'allahum yatafakkaroon

நாம் எண்ணியிருந்தால் (நம்) அத்தாட்சிகளின் காரணமாக அவனை நாம் உயர்த்தியிருப்போம். எனினும், அவன் இவ்வுலக வாழ்க்கையை நிரந்தரம் என எண்ணி தன் (சரீர) இச்சையைப் பின்பற்றிவிட்டான். அவனுடைய உதாரணம் ஒரு நாயின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. நீங்கள் அதனைத் துரத்தினாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்கிறது. அதனை(த் துரத்தாது) விட்டுவிட்டாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்கிறது. இதுவே, நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கும் (மற்ற) மக்களுக்கும் உதாரணமாகும். ஆகவே, அவர்கள் சிந்தித்து நல்லுணர்ச்சி பெறுவதற்காக இச்சரித்திரத்தை (அடிக்கடி) ஓதிக் காண்பியுங்கள்.

Tafseer

سَآءَ
கெட்டு விட்டனர்
مَثَلًا
உதாரணமாக
ٱلْقَوْمُ ٱلَّذِينَ
மக்கள்/எவர்கள்
كَذَّبُوا۟
பொய்ப்பித்தனர்
بِـَٔايَٰتِنَا
நம் வசனங்களை
وَأَنفُسَهُمْ
தங்களுக்கே
كَانُوا۟
இருந்தனர்
يَظْلِمُونَ
அநீதியிழைக்கிறார்கள்

Saaa'a masalanil qawmul lazeena kazzaboo bi Aayaatinaa wa anfusahum kaanoo yazlimoon

நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கிய மக்களின் இவ்வுதாரணம் மிகக் கேவலமானது; அவர்கள் தங்களுக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.

Tafseer

مَن يَهْدِ
எவரை/நேர்வழி செலுத்துகிறான்
ٱللَّهُ فَهُوَ
அவர்தான்/அல்லாஹ்
ٱلْمُهْتَدِىۖ
நேர்வழிபெற்றவர்
وَمَن
இன்னும் எவர்(களை)
يُضْلِلْ
வழிகெடுக்கிறான்
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
ٱلْخَٰسِرُونَ
நஷ்டவாளிகள்

mai yahdil laahu fa huwal muhtadee wa mai yudlil fa ulaaa'ika humul khaasiroon

அல்லாஹ் எவர்களை நேரான வழியில் செலுத்து கின்றானோ அவர்களே நேரான வழியை அடைந்தவர்கள்; எவர்களைத் தவறான வழியில் விட்டுவிட்டானோ அவர்கள் முற்றிலும் நஷ்டமடைந்தவர்களே!

Tafseer

وَلَقَدْ ذَرَأْنَا
படைத்து விட்டோம்
لِجَهَنَّمَ
நரகத்திற்காக
كَثِيرًا
அதிகமானோரை
مِّنَ ٱلْجِنِّ
ஜின்களில்
وَٱلْإِنسِۖ
இன்னும் மனிதர்கள்
لَهُمْ
அவர்களுக்கு
قُلُوبٌ
உள்ளங்கள்
لَّا يَفْقَهُونَ
சிந்தித்து விளங்க மாட்டார்கள்
بِهَا
அவற்றைக் கொண்டு
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
أَعْيُنٌ
கண்கள்
لَّا يُبْصِرُونَ
பார்க்க மாட்டார்கள்
بِهَا
அவற்றைக் கொண்டு
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
ءَاذَانٌ
காதுகள்
لَّا يَسْمَعُونَ
செவிசாய்க்க மாட்டார்கள்
بِهَآۚ
அவற்றைக் கொண்டு
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
كَٱلْأَنْعَٰمِ
கால்நடைகளைப் போன்று
بَلْ هُمْ
மாறாக/அவர்கள்
أَضَلُّۚ
அதிகம் வழிகெட்டவர்(கள்)
أُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
ٱلْغَٰفِلُونَ
கவனமற்றவர்கள்

Wa laqad zaraanaa li jahannama kaseeram minal jinni wal insi lahum quloobul laa yafqahoona bihaa wa lahum a'yunul laa yubisiroona bihaa wa lahum aazaanul laa yasma'oona bihaa; ulaaa'ika kal an'aami bal hum adall; ulaaa'ika humul ghaafiloon

நிச்சயமாக மனிதர்களிலும், ஜின்களிலும் பலரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கிறோம். (அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களுக்கு உள்ளங்கள் இருக்கின்றன; எனினும் அவற்றைக் கொண்டு (நல்லுபதேசங்களை) அவர்கள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு கண்களுமுண்டு; எனினும், அவற்றைக்கொண்டு (இவ்வுலகிலுள்ள இறைவனின் அத்தாட்சிகளை) அவர்கள் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு செவிகளுமுண்டு; எனினும், அவற்றைக்கொண்டு அவர்கள் (நல்லுபதேசங்களுக்கு) செவிசாய்க்க மாட்டார்கள். இத்தகையவர்கள் மிருகங்களைப் போல் அல்லது அவற்றைவிட அதிகமாக வழிகெட்டவர்களாகவே இருக்கின்றனர். இத்தகையவர்கள்தான் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவர்.

Tafseer

وَلِلَّهِ
அல்லாஹ்வுக்கே
ٱلْأَسْمَآءُ
பெயர்கள்
ٱلْحُسْنَىٰ
மிக அழகிய(வை)
فَٱدْعُوهُ
ஆகவே அழையுங்கள்/அவனை
بِهَاۖ
அவற்றைக் கொண்டு
وَذَرُوا۟
விட்டு விடுங்கள்
ٱلَّذِينَ
எவர்களை
يُلْحِدُونَ
தவறிழைப்பார்கள்
فِىٓ أَسْمَٰٓئِهِۦۚ
அவனுடைய பெயர்களில்
سَيُجْزَوْنَ
கூலி கொடுக்கப்படுவார்கள்
مَا كَانُوا۟
எதற்கு/இருந்தனர்
يَعْمَلُونَ
செய்வார்கள்

Wa lillaahil Asmaaa 'ul Husnaa fad'oohu bihaa wa zarul lazeena yulhidoona feee Asmaaa'ih; sa yujzawna maa kaanoo ya'maloon

அல்லாஹ்வுக்கு மிக அழகான பெயர்கள் இருக்கின்றன. ஆகவே, அவற்றைக்கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள். (அவனிடம் துஆ கேளுங்கள்.) அவனுடைய திருப்பெயர்களில் தவறிழைப்பவர்களை நீங்கள் விட்டுவிடுங்கள்; இவர்கள் தங்கள் செயலுக்குத் தக்க கூலியை விரைவில் அடைவார்கள்.

Tafseer