Lam ya kunil lazeena kafaru min ahlil kitaabi wal mushri keena mun fak keena hattaa ta-tiya humul bayyinah
இதனை நிராகரிக்கும் வேதத்தையுடையவர்களிலும், இணை வைத்து வணங்குபவர்களிலும் பலர், தங்களிடம் தெளிவான அத்தாட்சி வரும் வரையில் (யாதொரு தெளிவான அத்தாட்சி வந்தால், இதனைப் பின்பற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இருந்து) விலகாது (உறுதியாகவே) இருந்தனர்.
Rasoolum minal laahi yatlu suhufam mutahharah
(அவர்களிடம் வந்திருக்கும் தெளிவான அத்தாட்சி என்னவென்றால், அவர்களுக்குப்) பரிசுத்தமான வேதங்களை ஓதிக் காண்பிக்கக்கூடிய அல்லாஹ்வினுடைய (இந்தத்) தூதர்தான்.
Feeha kutubun qaiyimah
(அவர் ஓதிக் காண்பிக்கும்) அதில் நிலையான சட்ட திட்டங்களே வரையப்பட்டிருக்கின்றன.
Wa maa tafarraqal lazeena ootul kitaaba il-la mim b'adi ma jaa-at humul baiyyinah
(அவர்களின் வரவை எதிர்பார்த்து, அவர்களைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டிருந்த) வேதத்தையுடையவர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சி(யாகிய நமது தூதர்) வந்ததன் பின்னர் (அவருக்கு) மாறுசெய்து பிளவுபட்டு விட்டனர்.
Wa maa umiroo il-la liy'abu dul laaha mukhliseena lahud-deena huna faa-a wa yuqeemus salaahta wa yu-tuz zakaata; wa zaalika deenul qaiyimah
(எனினும், அவர்களுக்கோ) இறைவனுடைய கலப்பற்ற மார்க்கத்தையே பின்பற்றி, (மற்ற மார்க்கங்களைப்) புறக்கணித்து, அல்லாஹ் ஒருவனையே வணங்கி, தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருமாறே அன்றி, (வேறெதுவும் இத்தூதர் மூலம்) ஏவப்படவில்லை. (இது, அவர்களுடைய வேதத்திலும் ஏவப்பட்ட விஷயம்தான்.) இதுதான் நிலையான சட்டங்களுடைய மார்க்கம்.
Innal lazeena kafaru min ahlil kitaabi wal mushri keena fee nari jahan nama khaali deena feeha; ulaa-ika hum shar rul ba reeyah
ஆகவே, வேதத்தையுடையவர்களிலும், இணைவைத்து வணங்குபவர்களிலும், (இந்த நபியின் வரவை எதிர்பார்த்திருந்த வர்களில்) எவர்கள் (அவர்களை) நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நிச்சயமாக நரகத்தின் நெருப்பில்தான் இருப்பார்கள். அதில், அவர்கள் என்றென்றுமே தங்கிவிடுவார்கள். இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மகா கெட்டவர்கள்.
Innal lazeena aamanu wa 'amilus saalihaati ula-ika hum khairul bareey yah
ஆயினும், (இந்த நபியின் வரவை எதிர்பார்த்திருந்தவர்களில்) எவர்கள் (அவரை) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின் றார்களோ அவர்களே, நிச்சயமாக படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள்.
Jazaa-uhum inda rabbihim jan naatu 'adnin tajree min tahtihal an haaru khalideena feeha abada; radiy-yallaahu 'anhum wa ra du 'an zaalika liman khashiya rabbah.
அவர்களுடைய கூலி அவர்களின் இறைவனிடத்தில் உள்ள "அத்ன்" என்னும் நிலையான சுவனபதியாகும். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். என்றென்றுமே அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி திருப்தியடைவான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தி அடைவார்கள். எவர் தன் இறைவனுக்குப் பயப்படுகின்றாரோ, அவருக்குத்தான் இத்தகைய பாக்கியம் கிடைக்கும்.
القرآن الكريم: | البينة |
---|---|
ஸஜ்தா (سجدة): | - |
ஸூரா (latin): | Al-Bayyinah |
ஸூரா: | 98 |
வசனம்: | 8 |
Total Words: | 94 |
Total Characters: | 399 |
Number of Rukūʿs: | 1 |
Classification (Revelation Location): | மதனீ |
Revelation Order: | 100 |
Starting from verse: | 6130 |