Skip to main content

وَإِن يُرِيدُوا۟
அவர்கள் நாடினால்
خِيَانَتَكَ
உமக்கு மோசடி செய்ய
فَقَدْ خَانُوا۟
மோசடிசெய்துள்ளனர்
ٱللَّهَ
அல்லாஹ்வுக்கு
مِن قَبْلُ
முன்னர்
فَأَمْكَنَ
ஆகவே ஆதிக்கமளித்தான்
مِنْهُمْۗ
அவர்கள் மீது
وَٱللَّهُ
அல்லாஹ்
عَلِيمٌ
நன்கறிந்தவன்
حَكِيمٌ
ஞானவான்

Wa iny-yureedoo khiyaa nataka faqad khaanullaaha min qablu fa amkana minhum; wallaahu 'aleemum Hakeem

(நபியே!) அவர்கள் உங்களுக்கு சதி செய்யக் கருதினால் (அதைப்பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்.) இதற்கு முன்னர் அவர்கள் அல்லாஹ்வுக்கும் சதி செய்யக் கருதினார்கள். ஆதலால்தான் அவர்களைச் சிறைப்படுத்த (உங்களுக்கு) வசதியளித்தான். அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
وَهَاجَرُوا۟
இன்னும் ஹிஜ்ரா சென்றனர்
وَجَٰهَدُوا۟
இன்னும் போர் புரிந்தனர்
بِأَمْوَٰلِهِمْ
தங்கள் பொருள்களாலும்
وَأَنفُسِهِمْ
இன்னும் தங்கள் உயிர்களாலும்
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
ءَاوَوا۟
அரவணைத்தனர்
وَّنَصَرُوٓا۟
இன்னும் உதவினர்
أُو۟لَٰٓئِكَ
இவர்கள்
بَعْضُهُمْ
இவர்களில் சிலர்
أَوْلِيَآءُ
பொறுப்பாளர்கள்
بَعْضٍۚ
சிலருக்கு
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
وَلَمْ يُهَاجِرُوا۟
ஆனால் ஹிஜ்ரா செல்லவில்லை
مَا لَكُم
உங்களுக்கு ஆகுமானதல்ல
مِّن وَلَٰيَتِهِم
இருந்து/அவர்களுக்கு பொறுப்பு
مِّن شَىْءٍ
எந்த ஒன்றுக்கும்
حَتَّىٰ
வரை
يُهَاجِرُوا۟ۚ
ஹிஜ்ரா செல்வார்கள்
وَإِنِ
அவர்கள் உதவி தேடினால்
ٱسْتَنصَرُوكُمْ
அவர்கள் உதவி தேடினால் உங்களிடம்
فِى ٱلدِّينِ
மார்க்கத்தில்
فَعَلَيْكُمُ
உங்கள் மீது கடமை
ٱلنَّصْرُ
உதவுவது
إِلَّا
தவிர
عَلَىٰ
எதிராக
قَوْمٍۭ
ஒரு சமுதாயம்
بَيْنَكُمْ
உங்களுக்கிடையில்
وَبَيْنَهُم
இன்னும் அவர்களுக்கு இடையில்
مِّيثَٰقٌۗ
உடன்படிக்கை
وَٱللَّهُ
அல்லாஹ்
بِمَا
எவற்றை
تَعْمَلُونَ
செய்கிறீர்கள்
بَصِيرٌ
உற்று நோக்குபவன்

Innal lazeena aamanoo wa haajaroo wa jaahadoo bi amwaalihim wa anfusihim fee sabeelil laahi wallazeena aawaw wa nasarooo ulaaa'ika ba'duhum awliyaaa'u ba'd; wallazeena aamanoo wa lam yuhaajiroo maa lakum minw walaayatihim min shai'in hatta yuhaajiroo; wa inistan sarookum fid deeni fa'alaiku munnasru illaa 'alaa qawmim bainakum wa bainahum meesaaq; wallaahu bimaa ta'maloona Baseer

நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊரை விட்டுப் புறப்பட்டு, அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் உயிர்களையும் பொருள்களையும் தியாகம் செய்து போர் புரிந்தார்களோ அவர்களும், எவர்கள் அவர்களை (தங்கள் இல்லங்களில்) அரவணைத்து (மற்றும் பல) உதவி புரிந்தார்களோ அவர்களும் ஆகிய இவ்விரு வகுப்பாரும் ஒருவருக்கொருவர் பொறுப்பு வகிக்கும் உற்ற நண்பர்களாக இருக்கின்றனர். ஆயினும், நம்பிக்கை கொண்டவர்களில் எவர்கள் இன்னும் (தங்கள்) ஊரை விட்டுப் புறப்படாமல் இருக்கின்றனரோ அவர்கள் (தங்கள்) ஊரை விட்டுப் புறப்படும் வரையில் நீங்கள் அவர்களுடைய எவ்விஷயத்திற்கும் பொறுப்பாளிகளல்லர். எனினும், அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினாலோ (அவர்களுக்கு) உதவி செய்வது உங்கள் மீது கடமையாகும். ஆயினும், உங்களிடம் உடன்படிக்கை செய்து கொண்டிருக்கும் ஒரு வகுப்பினருக்கு எதிராக (அவர்களுக்கு உதவி செய்வது) கூடாது. அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான்.

Tafseer

وَٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தனர்
بَعْضُهُمْ
அவர்களில் சிலர்
أَوْلِيَآءُ
பொறுப்பாளர்கள்
بَعْضٍۚ
சிலருக்கு
إِلَّا تَفْعَلُوهُ
நீங்கள் செய்யவில்லையென்றால்/அதை
تَكُن
ஆகிவிடும்
فِتْنَةٌ
குழப்பம்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
وَفَسَادٌ
இன்னும் கலகம்
كَبِيرٌ
பெரியது

Wallazeena kafaroo ba'duhum awliyaaa'u ba'd; illaa taf'aloohu takun fitnatun fil ardi wa fasaadun kabeer

நிராகரிப்பவர்களில் சிலர், அவர்களில் சிலருக்கு நண்பர்களே! (ஆகவே அவர்களில் சிலர் சிலருடைய பொருளை சுதந்தரமாக அடைய விட்டுவிடுங்கள்.) இவ்வாறு நீங்கள் செய்யாவிடில், பூமியில் பெரும் கலகமும் குழப்பமும் ஏற்பட்டுவிடும்.

Tafseer

وَٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
وَهَاجَرُوا۟
இன்னும் ஹிஜ்ரா சென்றனர்
وَجَٰهَدُوا۟
இன்னும் போர் புரிந்தனர்
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
ءَاوَوا۟
அரவணைத்தனர்
وَّنَصَرُوٓا۟
இன்னும் உதவினர்
أُو۟لَٰٓئِكَ هُمُ
இவர்கள்தான்
ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள்
حَقًّاۚ
உண்மையில்
لَّهُم
இவர்களுக்கு
مَّغْفِرَةٌ
மன்னிப்பு
وَرِزْقٌ
இன்னும் உணவு
كَرِيمٌ
கண்ணியமானது

Wallazeena aamanoo wa haajaroo wa jaahadoo fee sabeelil laahi wallazeena aawaw wa nasarooo ulaaa'ika humul mu'minoona haqqaa; lahum maghfiratunw wa rizqun kareem

எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊரைவிட்டுப் புறப்பட்டு அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிகின்றார்களோ அவர்களும், எவர்கள் அவர்களை (தங்கள் இல்லங்களில்) அரவணைத்து (மேலும் பல) உதவியும் செய்கின்றார்களோ அவர்களும் தான் உண்மையான நம்பிக்கையாளர்கள். அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; கண்ணியமான உணவும் உண்டு.

Tafseer

وَٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
مِنۢ بَعْدُ
பின்னர்
وَهَاجَرُوا۟
இன்னும் ஹிஜ்ரா சென்றனர்
وَجَٰهَدُوا۟
இன்னும் போர் புரிந்தனர்
مَعَكُمْ
உங்களுடன்
فَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்
مِنكُمْۚ
உங்களைச் சேர்ந்தவர்கள்தான்
وَأُو۟لُوا۟ ٱلْأَرْحَامِ
இரத்த பந்தங்கள்
بَعْضُهُمْ
அவர்களில் சிலர்
أَوْلَىٰ
நெருக்கமானவர்
بِبَعْضٍ
சிலருக்கு
فِى كِتَٰبِ
வேதத்தில்
ٱللَّهِۗ
அல்லாஹ்வின்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்

Wallazeena aamanoo mim ba'du wa haajaroo wa jaahadoo ma;akum faulaaa'ika minkum; wa ulul arhaami baduhum awlaa biba'din fee Kitaabil laah; innal laaha bikulli shai'in 'Aleem

(இதன் பின்னரும் மக்காவாசிகளில்) எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊரை விட்டுப் புறப்பட்டு உங்களுடன் சேர்ந்து (எதிரியை எதிர்த்து) போர்புரிகின்றார்களோ அவர்களும் உங்களைச் சேர்ந்தவர்களே! இனி அல்லாஹ்வுடைய வேதக் கட்டளைப்படி உங்கள் உறவினர்களில் உள்ளவர்களே, ஒருவர் மற்றவருக்கு பொறுப்பு வகிப்பார்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

Tafseer