Skip to main content

مَآ أَصَابَ
ஏற்படாது
مِن مُّصِيبَةٍ
எந்த சோதனையும்
إِلَّا بِإِذْنِ
அனுமதி இல்லாமல்
ٱللَّهِۗ
அல்லாஹ்வின்
وَمَن يُؤْمِنۢ
யார் நம்பிக்கை கொள்வாரோ
بِٱللَّهِ
அல்லாஹ்வை
يَهْدِ
நேர்வழி காட்டுவான்
قَلْبَهُۥۚ
அவரின் உள்ளத்திற்கு
وَٱللَّهُ
அல்லாஹ்
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
عَلِيمٌ
நன்கறிந்தவன்

Maaa asaaba mim musee batin illaa bi-iznil laah; wa many yu'mim billaahi yahdi qalbah; wallaahu bikulli shai;in Aleem

அல்லாஹ்வுடைய அனுமதியின்றி யாதொரு தீங்கும் (எவரையும்) வந்தடையாது. ஆகவே, எவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ, அவருடைய உள்ளத்தை(ச் சகிப்பு, பொறுமை என்ற) நேரான வழியில் நடத்துகின்றான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

Tafseer

وَأَطِيعُوا۟
இன்னும் கீழ்ப்படியுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
وَأَطِيعُوا۟
இன்னும் கீழ்ப்படியுங்கள்
ٱلرَّسُولَۚ
தூதருக்கு
فَإِن تَوَلَّيْتُمْ
நீங்கள் விலகினால் /நமது தூதர் மீதுள்ள கடமை எல்லாம்
ٱلْبَلَٰغُ
எடுத்துரைப்பதுதான்
ٱلْمُبِينُ
தெளிவாக

Wa atee'ul laaha wa atee'ur Rasool; fa in tawallaitum fa innamaa 'alaa Rasoolinal balaaghul mubeen

அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடங்கள். அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நடங்கள். நீங்கள் புறக்கணித்தால் (அது உங்களுக்குத்தான் நஷ்டம். ஏனென்றால்,) நம் தூதர் மீதுள்ள கடமையெல்லாம், அவர் தன்னுடைய தூதைப் பகிரங்கமாக எடுத்துரைப்பதுதான்.

Tafseer

ٱللَّهُ
அல்லாஹ்
لَآ
அறவே இல்லை
إِلَٰهَ
கடவுள்
إِلَّا هُوَۚ
அவனைத் தவிர
وَعَلَى
மீதே
ٱللَّهِ
அல்லாஹ்வின்
فَلْيَتَوَكَّلِ
நம்பிக்கை வைக்கவும்
ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள்

Allaahu laaa ilaaha illaa Hoo; wa 'alal laahi falyata wakkalil mu'minoon

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இல்லவே இல்லை. ஆகவே, நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் மீதே பொறுப்பை ஒப்படையுங்கள்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே!
إِنَّ
நிச்சயமாக
مِنْ أَزْوَٰجِكُمْ
உங்கள் மனைவிகளிலும்
وَأَوْلَٰدِكُمْ
உங்கள் பிள்ளைகளிலும்
عَدُوًّا
எதிரிகள்
لَّكُمْ
உங்களுக்கு
فَٱحْذَرُوهُمْۚ
ஆகவே அவர்களிடம் நீங்கள் கவனமாக இருங்கள்
وَإِن تَعْفُوا۟
நீங்கள் பிழை பொறுத்தால்
وَتَصْفَحُوا۟
இன்னும் புறக்கணித்தால்
وَتَغْفِرُوا۟
நீங்கள் மன்னித்தால்
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
رَّحِيمٌ
மகா கருணையாளன்

Yaaa ayyuhal lazeena aamanooo inna min azwaaji kum wa awlaadikum 'aduwwal lakum fahzaroohum; wa in ta'foo wa tasfahoo wa taghfiroo fa innal laaha ghafoorur Raheem

நம்பிக்கையாளர்களே! உங்கள் மனைவிகளிலும், உங்கள் சந்ததிகளிலும் நிச்சயமாக உங்களுக்கு எதிரிகள் இருக்கின்றனர். ஆகவே, அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். அவர்(களின் குற்றங்)களை நீங்கள் சகித்துப் புறக்கணித்து மன்னித்து வந்தால், நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், கிருபையுடையவனுமாக இருக்கின்றான். (உங்களுடைய குற்றங்களையும் அவ்வாறே மன்னித்துவிடுவான்.)

Tafseer

إِنَّمَآ أَمْوَٰلُكُمْ
உங்கள் செல்வங்கள் எல்லாம்
وَأَوْلَٰدُكُمْ
இன்னும் உங்கள் பிள்ளைகள்
فِتْنَةٌۚ
சோதனைதான்
وَٱللَّهُ
அல்லாஹ்
عِندَهُۥٓ
அவனிடம்தான்
أَجْرٌ عَظِيمٌ
மகத்தான கூலி

Innamaa amwaalukum wa awlaadukum fitnah; wallaahu 'indahooo ajrun 'azeem

உங்களுடைய பொருள்களும், உங்களுடைய சந்ததிகளும் (உங்களுக்கு) ஒரு சோதனையாகவே உள்ளன. (இச்சோதனையில், நீங்கள் தேர்ச்சி பெற்றால் உங்களுக்கு) அல்லாஹ்விடத்தில் மகத்தான கூலி இருக்கின்றது.

Tafseer

فَٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
مَا ٱسْتَطَعْتُمْ
உங்களுக்கு முடிந்தளவு
وَٱسْمَعُوا۟
இன்னும் செவி தாழ்த்துங்கள்
وَأَطِيعُوا۟
இன்னும் கீழ்ப்படியுங்கள்
وَأَنفِقُوا۟
இன்னும் தர்மம் செய்யுங்கள்
خَيْرًا
செல்வத்தை
لِّأَنفُسِكُمْۗ
உங்கள் நன்மைக்காக
وَمَن
எவர்(கள்)
يُوقَ
பாதுகாக்கப்படுவார்(களோ)
شُحَّ
கஞ்சத் தனத்தில் இருந்து
نَفْسِهِۦ
தமது மனதின்
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
ٱلْمُفْلِحُونَ
வெற்றியாளர்கள்

Fattaqul laaha mastat'tum wasma'oo wa atee'oo waanfiqoo khairal li anfusikum; wa many-yooqa shuha nafsihee fa-ulaaa'ika humul muflihoon

ஆதலால், உங்களால் சாத்தியமான வரையில் அல்லாஹ்வுக்குப் பயந்து, அவனுக்குச் செவிசாய்த்து வழிப்பட்டு நடந்து, தானமும் செய்யுங்கள். இது உங்களுக்குத்தான் மிக நன்று. எவர்கள் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்களோ அத்தகையவர்கள் நிச்சயமாக வெற்றியடைந்து விடுவார்கள்.

Tafseer

إِن تُقْرِضُوا۟
நீங்கள் கடன் கொடுத்தால்
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
قَرْضًا
கடனாக
حَسَنًا
அழகிய
يُضَٰعِفْهُ
அதை பன்மடங்காகப் பெருக்குவான்
لَكُمْ
உங்களுக்கு
وَيَغْفِرْ
இன்னும் மன்னிப்பான்
لَكُمْۚ
உங்களை
وَٱللَّهُ
அல்லாஹ்
شَكُورٌ
மிகவும் நன்றியுள்ளவன்
حَلِيمٌ
மகா சகிப்பாளன்

In tuqridul laaha qardan hasanany yudd'ifhu lakum wa yaghfir lakum; wallaahu Shakoorun Haleem

அழகான முறையில் அல்லாஹ்வுக்காக நீங்கள் கடன் கொடுத்தால், அதனை உங்களுக்கு இரு மடங்காக்கி வைப்பதுடன், உங்கள் குற்றங்களையும் மன்னித்து விடுகின்றான். அல்லாஹ் (சொற்ப) நன்றியையும் அங்கீகரிப்பவனாகவும் மிக்க சகிப்பவ னாகவும் இருக்கின்றான்.

Tafseer

عَٰلِمُ
நன்கறிந்தவன்
ٱلْغَيْبِ
மறைவானவற்றையும்
وَٱلشَّهَٰدَةِ
வெளிப்படையானவற்றையும்
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்

'Aalimul-Ghaibi wash-shahaadatil 'Azeezul Hakeem

அவன் மறைவானதையும், வெளிப்படையானதையும் நன்கறிந்தவன்; (அனைவரையும்) மிகைத்தவன்; ஞானமுடையவன்.

Tafseer