Wan naazi 'aati gharqa
(பாவிகளின் உயிர்களைப்) பலமாகப் பறிப்பவர்கள் மீது சத்தியமாக!
Wan naa shi taati nashta
(நல்லவர்களின் ஆத்மாவை எளிதாகக்) கைப்பற்றுபவர்கள் மீது சத்தியமாக!
Wass saabi-haati sabha
(ஆகாயத்திலும், கடலிலும்) அதிவேகமாக(ப் பறந்து) நீந்திச் செல்லும் மலக்குகளின் மீது சத்தியமாக!
Fass saabi qaati sabqa
(இறைவனின் கட்டளையை நிறைவேற்ற) போட்டி போட்டுக் கொண்டு முன் செல்பவர்கள் மீதும் சத்தியமாக!
Fal mu dab-bi raati amra
எல்லா காரியங்களையும் (இறைவனின் கட்டளைப்படி) நிர்வகிப்பவர்கள் (மலக்குகள்) மீதும் சத்தியமாக!
Yawma tarjufur raajifa
(கொடிய பூகம்பத்தால் பூமி) பலமாக அதிர்ச்சியுறும் நாளில்,
Tatba'u har raadifa
(மென்மேலும்) அதனைத் தொடர்ந்து (பல பூகம்ப அதிர்ச்சிகள்) வரும் (நாளில் உலகம் முடிவுற்றே தீரும்).
Quloobuny-yau maaiziw-waaji-fa
அந்நாளில், உள்ளங்களெல்லாம் திடுக்கிட்டு நடுங்கிக் கொண்டிருக்கும்.
Absaa ruhaa khashi'ah
பார்வைகளெல்லாம் (பயத்தால்) கீழ்நோக்கி நிற்கும்.
Ya qoo loona a-inna lamar doo doona fil haafirah
(இவ்வாறிருக்க, நிராகரிப்பவர்கள் இதனை மறுத்து) "நாம் (இறந்த பின்னர்) மெய்யாகவே நாம் (உயிர்ப்பிக்கப்பட்டு) முந்திய நிலைமைக்குத் திருப்பப்படுவோமா?"
القرآن الكريم: | النازعات |
---|---|
ஸஜ்தா (سجدة): | - |
ஸூரா (latin): | An-Nazi'at |
ஸூரா: | 79 |
வசனம்: | 46 |
Total Words: | 197 |
Total Characters: | 753 |
Number of Rukūʿs: | 2 |
Classification (Revelation Location): | மக்கீ |
Revelation Order: | 81 |
Starting from verse: | 5712 |