Skip to main content

وَأَمَّا
ஆக
ٱلَّذِينَ كَفَرُوٓا۟
நிராகரித்தவர்கள்
أَفَلَمْ تَكُنْ
இருக்கவில்லையா?
ءَايَٰتِى
எனது வசனங்கள்
تُتْلَىٰ
ஓதப்படுகின்றன
عَلَيْكُمْ
உங்கள் மீது
فَٱسْتَكْبَرْتُمْ
நீங்கள் பெருமை அடித்தீர்கள்
وَكُنتُمْ
இன்னும் நீங்கள் இருந்தீர்கள்
قَوْمًا
மக்களாக
مُّجْرِمِينَ
குற்றம் புரிகின்றவர்கள்

Wa ammal lazeena kafarooo afalam takun Aayaatee tutlaa 'alaikum fastakbartum wa kuntum qawmam mujrimeen

எவர்கள் (நம்முடைய வசனங்களை) நிராகரித்தார்களோ (அவர்களை நோக்கி) உங்களுக்கு நம்முடைய வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அச்சமயம் நீங்கள் பெருமைகொண்டு (அதனைப் புறக்கணித்து) விட்டீர்கள். அதனால் நீங்கள் குற்றவாளிகளாகி விட்டீர்கள்" (என்றும் கூறப்படும்).

Tafseer

وَإِذَا قِيلَ
கூறப்பட்டால்
إِنَّ وَعْدَ
நிச்சயமாக வாக்கு
ٱللَّهِ
அல்லாஹ்வின்
حَقٌّ
உண்மையானது
وَٱلسَّاعَةُ
இன்னும் மறுமை
لَا رَيْبَ
அறவே சந்தேகம் இல்லை
فِيهَا
அதில்
قُلْتُم
நீங்கள் கூறுவீர்கள்
مَّا نَدْرِى
அறியமாட்டோம்
مَا ٱلسَّاعَةُ
மறுமை என்றால் என்ன?
إِن نَّظُنُّ
நாங்கள் எண்ணவில்லை
إِلَّا
தவிர
ظَنًّا
ஒரு எண்ணமாகவே
وَمَا نَحْنُ
நாங்கள் உறுதிசெய்பவர்களாக இல்லை

Wa izaa qeela inna wa'dallaahi haqqunw was Saa'atu laa raiba feehaa qultum maa nadree mas Saa'atu in nazunnu illaa zannanw wa maa nahnu bimustaiqineen

அன்றி, "நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது. மறுமை வருவதில் யாதொரு சந்தேகமுமில்லை" என்று (உங்களுக்குக்) கூறப்பட்டால் அதற்கு, "மறுமை இன்னதென்றே நாங்கள் அறியோம். அது (வீணான) வெறும் எண்ணத்தைத் தவிர வேறில்லை என்றே எண்ணுகிறோம். அதனை (மெய்யென்று) நாங்கள் நம்பவுமில்லை" என்று நீங்கள் கூறினீர்கள் (அல்லவா?) என்று (அவர்களிடம்) கேட்கப்படும்.

Tafseer

وَبَدَا
வெளிப்படும்
لَهُمْ
அவர்களுக்கு
سَيِّـَٔاتُ
தீமைகள்
مَا عَمِلُوا۟
அவர்கள் செய்தவற்றின்
وَحَاقَ
இன்னும் சூழ்ந்துகொள்ளும்
بِهِم
அவர்களை
مَّا كَانُوا۟
எது/ இருந்தார்களோ/அதை
يَسْتَهْزِءُونَ
பரிகாசம் செய்பவர்களாக

Wa badaa lahum saiyiaatu maa 'amiloo wa haaqa bihim maa kaanoo bihee yastahzi'oon

அவர்கள் செய்து கொண்டிருந்த தீய செயல்கள் அனைத்தும், அவர்களுக்கு வெளிப்பட்டுவிடும். அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தவைகளே அவர்களைச் சூழ்ந்துகொள்ளும்.

Tafseer

وَقِيلَ
கூறப்படும்
ٱلْيَوْمَ
இன்று
نَنسَىٰكُمْ
உங்களை விட்டுவிடுவோம்
كَمَا نَسِيتُمْ
நீங்கள் விட்டதுபோன்று
لِقَآءَ
சந்திப்பை
يَوْمِكُمْ هَٰذَا
உங்களது இன்றைய தினத்தின்
وَمَأْوَىٰكُمُ
உங்கள் ஒதுங்குமிடம்
ٱلنَّارُ
நரகம்தான்
وَمَا لَكُم
உங்களுக்கு இல்லை
مِّن نَّٰصِرِينَ
உதவியாளர்கள் யாரும்

Wa qeelal yawma nansaakum kamaa naseetum liqaaa'a yawmikum haazaa wa maawaakumun Naaru wa maa lakum min naasireen

அன்றி, (அவர்களை நோக்கி) "இந்நாளை நீங்கள் சந்திப்பதை மறந்தவாறே, நாமும் இன்றைய தினம் உங்களை மறந்துவிட்டோம். நீங்கள் தங்குமிடம் நரகம்தான். (இன்றைய தினம்) உங்களுக்கு உதவி செய்பவர்கள் யாருமில்லை" என்றும் கூறப்படும்.

Tafseer

ذَٰلِكُم بِأَنَّكُمُ
இதற்கு காரணம் நிச்சயமாக நீங்கள்
ٱتَّخَذْتُمْ
எடுத்துக்கொண்டீர்கள்
ءَايَٰتِ
வசனங்களை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
هُزُوًا
கேலியாக
وَغَرَّتْكُمُ
இன்னும் உங்களை மயக்கிவிட்டது
ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَاۚ
உலக வாழ்க்கை
فَٱلْيَوْمَ
ஆகவே, இன்று
لَا يُخْرَجُونَ
வெளியேற்றப்பட மாட்டார்கள்
مِنْهَا
அதிலிருந்து
وَلَا هُمْ
இன்னும் அவர்களிடமிருந்து காரணங்கள் அங்கீகரிக்கப்படாது

Zaalikum bi annakumut takhaztum aayaatil laahi huzuwanw wa gharratkumul hayaatud dunyaa; fal yawma laa yukhrajoona minhaa wa laahum yusta'taboon

இதன் காரணமாவது: நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பரிகாசமாக எடுத்துக் கொண்டீர்கள். இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கிவிட்டது (என்றும் கூறப்படும்). இன்றைய தினம் அதிலிருந்து அவர்கள் வெளிச்செல்ல விடப்படமாட்டார்கள். அன்றி, அவர்களுடைய மன்னிப்புக்கோரலும் அங்கீகரிக்கப்பட மாட்டாது.

Tafseer

فَلِلَّهِ
அல்லாஹ்விற்கே
ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
رَبِّ
அதிபதி
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களின்
وَرَبِّ
இன்னும் அதிபதி
ٱلْأَرْضِ
பூமியின்
رَبِّ
அதிபதி
ٱلْعَٰلَمِينَ
அகிலத்தார்களின்

Falillaahil hamdu Rabbis samaawaati wa Rabbil ardi Rabbil-'aalameen

வானங்களின் இறைவனும், பூமியின் இறைவனும், இன்னும் அகிலத்தார் அனைவரின் இறைவனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகும்.

Tafseer

وَلَهُ
இன்னும் அவனுக்கே உரியது
ٱلْكِبْرِيَآءُ
பெருமை
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களிலும்
وَٱلْأَرْضِۖ
பூமியிலும்
وَهُوَ
அவன்தான்
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்

Wa lahul kibriyaaa'u fissamaawaati wal ardi wa Huwal 'Azeezul Hakeem

வானங்களிலும், பூமியிலும் உள்ள எல்லா பெருமைகளும் அவனுக்கே சொந்தமானவை. அவன் (அனைவரையும்) மிகைத்த வனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer