Waz-zaariyaati zarwaa
(கடல் நீரை ஆவியாக்கிச் சிதறடிக்கும்) சூறாவளிகள் மீதும்,
Falhaamilaati wiqraa
(அந்த நீராவியை) சுமந்து செல்லும் மேகத்தின் மீதும்,
Faljaariyaati yusraa
(பல பாகத்திற்கு அதனை) எளிதாகத் தாங்கிச் செல்லும் மேகத்தின் மீதும்,
Falmuqassimaati amraa
அதனைப் (பூமியின் பல பாகங்களில்) பிரித்துவிடும் மலக்குகளின் மீதும் சத்தியமாக!
Innamaa too'adoona la-saadiq
(செயலுக்குத் தக்க கூலி கொடுக்கப்படுமென்று) உங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி நிச்சயமாக உண்மையானதே.
Wa innad deena la waaqi'
நிச்சயமாக (செயல்களுக்குரிய) கூலி கொடுக்கப்பட்டே தீரும்.
Wassamaaa'i zaatil hubuk
(நட்சத்திரங்களின்) அழகிய பாதைகளுடைய வானத்தின் மீது சத்தியமாக!
Innakum lafee qawlim mukhtalif
நீங்கள் (சத்தியத்திற்கு) மாறாகப் பேசுவதில் நிலைத்து விட்டீர்கள்.
Yu'faku 'anhu man ufik
ஏற்கனவே, அல்லாஹ்வுடைய விதியின்படி திருப்பப் பட்டவனே சத்தியத்தை விட்டும் திருப்பப்படுவான்.
Qutilal kharraasoon
பொய் சொல்பவர்கள் அழிந்தே போவர்.
القرآن الكريم: | الذاريات |
---|---|
ஸஜ்தா (سجدة): | - |
ஸூரா (latin): | Az-Zariyat |
ஸூரா: | 51 |
வசனம்: | 60 |
Total Words: | 360 |
Total Characters: | 1239 |
Number of Rukūʿs: | 3 |
Classification (Revelation Location): | மக்கீ |
Revelation Order: | 67 |
Starting from verse: | 4675 |