Skip to main content

قَالَ
அவர் கூறினார்
فَمَا خَطْبُكُمْ
உங்கள் காரியம்தான் என்ன?
أَيُّهَا ٱلْمُرْسَلُونَ
தூதர்களே!

Qaala famaa khatbukum ayyuhal mursaloon

(பின்னர் இப்ராஹீம் மலக்குகளை நோக்கி) "தூதர்களே! உங்கள் காரியமென்ன? (எதற்காக நீங்கள் இங்கு வந்தீர்கள்?)" என்று கேட்டார்.

Tafseer

قَالُوٓا۟
கூறினார்கள்
إِنَّآ
நிச்சயமாக நாங்கள்
أُرْسِلْنَآ
அனுப்பப்பட்டுள்ளோம்
إِلَىٰ قَوْمٍ
மக்கள் பக்கம்
مُّجْرِمِينَ
குற்றவாளிகளான

Qaalooo innaaa ursilnaaa ilaa qawmim mujrimeen

அதற்கவர்கள் "நிச்சயமாக நாங்கள் (பெரும்) குற்றம் செய்யும் (லூத்தின்) மக்களிடம் அனுப்பப்பட்டுள்ளோம்" என்று கூறினர்,

Tafseer

لِنُرْسِلَ
நாங்கள் எறிவதற்காக
عَلَيْهِمْ
அவர்கள் மீது
حِجَارَةً
கல்லை
مِّن طِينٍ
களிமண்ணினால்ஆன

Linursila 'alaihim hijaa ratam min teen

"நாங்கள், அவர்கள் மீது களி மண்ணால் செய்த (சுட்ட) கற்களை எறிவதற்காக (அனுப்பப்பட்டுள்ளோம்")

Tafseer

مُّسَوَّمَةً
அடையாளமிடப்பட்ட
عِندَ رَبِّكَ
உமது இறைவனிடம்
لِلْمُسْرِفِينَ
பாவிகளுக்காக

Musawwamatan 'inda rabbika lilmusrifeen

"அது உங்களது இறைவனிடமே வரம்பு மீறியவர்களின் (பெயர்கள் எழுதப்பட்டு) அடையாளமிடப்பட்ட கற்கள்" (என்றும் கூறினார்கள்.)

Tafseer

فَأَخْرَجْنَا
ஆக, நாம் வெளியேற்றி விட்டோம்
مَن كَانَ
இருந்தவர்களை
فِيهَا
அதில்
مِنَ ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக

Fa akhrajnaa man kaana feehaa minal mu'mineen

ஆகவே, (அவர்கள் அழிவதற்கு முன்னதாகவே அவ்வூரில் இருந்த) நம்பிக்கை கொண்டவர்களை அதிலிருந்து நாம் வெளிப்படுத்தி விட்டோம்.

Tafseer

فَمَا وَجَدْنَا
ஆனால் நாம் காணவில்லை
فِيهَا
அதில்
غَيْرَ بَيْتٍ
ஒரு வீட்டைத் தவிர
مِّنَ ٱلْمُسْلِمِينَ
முஸ்லிம்களுடைய

Famaa wajadnaa feehaa ghaira baitim minal muslimeen

எனினும், அதில் (லூத்துடைய) ஒரு வீட்டாரைத் தவிர, நம்பிக்கை கொண்ட ஒருவரையும் நாங்கள் காணவில்லை.

Tafseer

وَتَرَكْنَا
நாம் விட்டுள்ளோம்
فِيهَآ
அதில்
ءَايَةً
ஓர் அத்தாட்சியை
لِّلَّذِينَ يَخَافُونَ
பயப்படுகின்றவர்களுக்கு
ٱلْعَذَابَ
தண்டனையை
ٱلْأَلِيمَ
வலி தரக்கூடிய(து)

Wa taraknaa feehaaa aayatal lillazeena yakhaafoonal 'azaabal aleem

துன்புறுத்தும் வேதனைக்குப் பயப்படுபவர்களுக்கு அதில் ஒரு படிப்பினையை விட்டு வைத்தோம்.

Tafseer

وَفِى مُوسَىٰٓ
இன்னும் மூஸாவிலும்
إِذْ أَرْسَلْنَٰهُ
நாம் அவரை அனுப்பிய போது
إِلَىٰ فِرْعَوْنَ
ஃபிர்அவ்னிடம்
بِسُلْطَٰنٍ
ஆதாரத்தைக் கொண்டு
مُّبِينٍ
தெளிவான(து)

Wa fee Moosaaa iz arsalnaahu ilaa Fir'wna bisultaa nim mubeen

மூஸாவுடைய (சரித்திரத்)திலும் (ஒரு படிப்பினை) இருக்கின்றது. தெளிவான அத்தாட்சிகளுடன் அவரை ஃபிர்அவ்னிடம் நாம் அனுப்பிய சமயத்தில்,

Tafseer

فَتَوَلَّىٰ
விலகினான்
بِرُكْنِهِۦ
தனது பலத்தினால்
وَقَالَ
இன்னும் கூறினான்
سَٰحِرٌ
ஒரு சூனியக்காரர்(தான்)
أَوْ
அல்லது
مَجْنُونٌ
ஒரு பைத்தியக்காரர்(தான்)

Fatawalla biruknihee wa qaala saahirun aw majnoon

அவன் வலுவான தன் ஆட்சியின் கர்வத்தால் அவரைப் புறக்கணித்து, "இவரொரு சூனியக்காரர்; அல்லது பைத்தியக்காரர்" என்று கூறினான்.

Tafseer

فَأَخَذْنَٰهُ
அவனையும் நாம் பிடித்தோம்
وَجُنُودَهُۥ
அவனுடைய ராணுவங்களையும்
فَنَبَذْنَٰهُمْ فِى
அவர்களை எறிந்தோம்/கடலில்
وَهُوَ
அவனோ
مُلِيمٌ
பழிப்புக்குள்ளானவன்

Fa akhaznaahu wa junoo dahoo fanabaznaahum fil yammi wa huwa muleem

ஆதலால், அவனையும் அவனுடைய படைகளையும் நாம் பிடித்துக் கடலில் எறிந்துவிட்டோம். அவன் என்றென்றுமே நிந்தனைக்குள்ளாகி விட்டான்.

Tafseer