Skip to main content

ٱلَّذِينَ
எவர்கள்
هُمْ
அவர்கள்
فِى غَمْرَةٍ
மயக்கத்தில்
سَاهُونَ
மறதியாளர்களாக

Allazeena hum fee ghamratin saahoon

அவர்கள் தங்கள் மடமையால் (மறுமையையே) மறந்து விட்டனர்.

Tafseer

يَسْـَٔلُونَ
அவர்கள் கேட்கின்றனர்
أَيَّانَ
எப்போது
يَوْمُ
நாள்
ٱلدِّينِ
கூலி கொடுக்கப்படும்

Yas'aloona ayyaana yawmud Deen

அவர்கள், "கூலி கொடுக்கும் நாள் எப்பொழுது வரும்?" என்று (பரிகாசமாகக்) கேட்கின்றனர்.

Tafseer

يَوْمَ
நாளில்...
هُمْ
அவர்கள்
عَلَى ٱلنَّارِ
நெருப்பின் மீது
يُفْتَنُونَ
வேதனை செய்யப்படுகின்றனர்

Yawma hum 'alan naari yuftanoon

அந்நாளில் அவர்கள், நெருப்பில் பொசுக்கி வேதனை செய்யப்படுவார்கள்.

Tafseer

ذُوقُوا۟
சுவையுங்கள்!
فِتْنَتَكُمْ
உங்கள் வேதனையை
هَٰذَا ٱلَّذِى
இது நீங்கள் அவசரமாகத் தேடிக்கொண்டிருந்தது

Zooqoo fitnatakum haa zal lazee kuntum bihee tas ta'jiloon

(அவர்களை நோக்கி) "உங்கள் வேதனையை சுவைத்துப் பாருங்கள். நீங்கள் (எப்பொழுது வருமென்று) அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அது இதுதான்" (என்றும் கூறப்படும்).

Tafseer

إِنَّ ٱلْمُتَّقِينَ
நிச்சயமாக இறையச்சமுள்ளவர்கள்
فِى جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
وَعُيُونٍ
இன்னும் நீரூற்றுகளில்

Innal muttaqeena fee jannaatinw wa 'uyoon

நிச்சயமாக இறை அச்சமுடையவர்கள் சுவனபதியிலும், நீரருவிகளுக்கு அருகிலும் இருப்பார்கள்.

Tafseer

ءَاخِذِينَ
பெற்றுக்கொள்வார்கள்
مَآ ءَاتَىٰهُمْ
அவர்களுக்கு கொடுத்ததை
رَبُّهُمْۚ
அவர்களின் இறைவன்
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
كَانُوا۟
இருந்தார்கள்
قَبْلَ ذَٰلِكَ
இதற்கு முன்னர்
مُحْسِنِينَ
நல்லவர்களாக

Aakhizeena maaa aataahum Rabbuhum; innahum kaanoo qabla zaalika muhsineen

அவர்கள் தங்கள் இறைவன் கொடுப்பதை(த் திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மையே செய்து கொண்டிருந்தார்கள்.

Tafseer

كَانُوا۟
இருந்தார்கள்
قَلِيلًا
மிகக் குறைவாக
مِّنَ ٱلَّيْلِ
இரவில்
مَا يَهْجَعُونَ
தூங்குபவர்களாக

kaanoo qaleelam minal laili maa yahja'oon

அவர்கள் இரவில் வெகு சொற்ப (நேர)மே நித்திரை செய்வார்கள்.

Tafseer

وَبِٱلْأَسْحَارِ
அதிகாலையில்
هُمْ يَسْتَغْفِرُونَ
அவர்கள் பாவமன்னிப்புத் தேடுவார்கள்

Wa bilashaari hum yastaghfiroon

அவர்கள் விடியற்காலை நேரத்தில் (எழுந்து இறைவனை வணங்கி, தங்கள் இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள்.

Tafseer

وَفِىٓ أَمْوَٰلِهِمْ
இன்னும் அவர்களது செல்வங்களில்
حَقٌّ
உரிமை
لِّلسَّآئِلِ
யாசிப்பவருக்கு(ம்)
وَٱلْمَحْرُومِ
இல்லாதவருக்கும்

Wa feee amwaalihim haqqul lissaaa'ili walmahroom

அவர்களுடைய பொருள்களில் (வாய் திறந்து யாசகம்) கேட்பவர்களுக்கும், கேட்காதவர்களுக்கும் பாகமுண்டு.

Tafseer

وَفِى ٱلْأَرْضِ
இன்னும் பூமியில்
ءَايَٰتٌ
பல அத்தாட்சிகள்
لِّلْمُوقِنِينَ
உறுதியாக நம்பிக்கை கொள்பவர்களுக்கு

Wa fil ardi aayaatul lilmooqineen

(அனைவருக்கும் தானம் செய்வார்கள்.) உறுதி(யாக நம்பிக்கை) கொண்டவர்களுக்குப் பூமியில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

Tafseer