Skip to main content
bismillah

حمٓ
ஹா மீம்

Haa-Meeem

ஹாமீம்.

Tafseer

تَنزِيلُ
இறக்கப்பட்டது
ٱلْكِتَٰبِ
இந்த வேதம்
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
ٱلْعَزِيزِ
மிகைத்தவன்
ٱلْحَكِيمِ
மகா ஞானவான்

Tanzeelul Kitaabi minal laahil 'Azeezil Hakeem

(அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனுமாகிய அல்லாஹ்வினால் இவ்வேதம் இறக்கப்பட்டது.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
وَٱلْأَرْضِ
இன்னும் பூமியில்
لَءَايَٰتٍ
பல அத்தாட்சிகள்
لِّلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு

Innaa fis samaawaati wal ardi la Aayaatil lilmu'mineen

நம்பிக்கை கொண்டவர்களுக்கு, வானங்களிலும் பூமியிலும் நிச்சயமாக பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

Tafseer

وَفِى خَلْقِكُمْ
உங்களைப் படைத்திருப்பதிலும்
وَمَا يَبُثُّ
பரப்பி இருப்பதிலும்
مِن دَآبَّةٍ
உயிரினங்களை
ءَايَٰتٌ
பல அத்தாட்சிகள்
لِّقَوْمٍ
மக்களுக்கு
يُوقِنُونَ
உறுதியாக நம்பிக்கை கொள்கின்றனர்

Wa fee khalaqikum wa maa yabussu min daaabbatin Aayaatul liqawminy-yooqinoon

உங்களை படைத்திருப்பதிலும், (பூமியில்) பல ஜீவராசிகளை(ப் பல பாகங்களிலும்) பரப்பி வைத்திருப்பதிலும், (நம்பிக்கையில்) உறுதியான (நல்ல) மக்களுக்குப் பல அத்தாட்சிகளிருக்கின்றன.

Tafseer

وَٱخْتِلَٰفِ
மாறிமாறிவருவதிலும்
ٱلَّيْلِ وَٱلنَّهَارِ
இரவு, பகல்
وَمَآ أَنزَلَ
இன்னும் எது/இறக்கினான்
ٱللَّهُ
அல்லாஹ்
مِنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
مِن رِّزْقٍ
மழையை
فَأَحْيَا
உயிர்ப்பித்தான்
بِهِ
அதன் மூலம்
ٱلْأَرْضَ
பூமியை
بَعْدَ
பின்னர்
مَوْتِهَا
அது இறந்த
وَتَصْرِيفِ
திருப்புவதிலும்
ٱلرِّيَٰحِ
காற்றுகளை
ءَايَٰتٌ
பல அத்தாட்சிகள்
لِّقَوْمٍ
மக்களுக்கு
يَعْقِلُونَ
சிந்தித்து புரிகின்றனர்

Wakhtilaafil laili wannahaari wa maaa anzalal laahu minas samaaa'i mir rizqin fa ahyaa bihil arda ba'da mawtihaa wa tasreefir riyaahi Aayaatul liqawminy ya'qiloon

இரவு, பகல் மாறிமாறி வரும்படி அல்லாஹ் செய்திருப்பதிலும், வானத்திலிருந்து மழையை இறக்கி வைத்து, அதனைக்கொண்டு (வரண்டு) இறந்துபோன பூமியை உயிர்ப்பிப்பதிலும், (பல திசைகளுக்கும்) காற்றுகளை திருப்பிவிடுவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

Tafseer

تِلْكَ
இவை
ءَايَٰتُ
வசனங்களாகும்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
نَتْلُوهَا
இவற்றை ஓதுகிறோம்
عَلَيْكَ
உம்மீது
بِٱلْحَقِّۖ
உண்மையாகவே
فَبِأَىِّ حَدِيثٍۭ
எந்த செய்தியை
بَعْدَ ٱللَّهِ
பின்னர்/அல்லாஹ்
وَءَايَٰتِهِۦ
இன்னும் அவனது அத்தாட்சிகளுக்கு
يُؤْمِنُونَ
இவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்

Tilka Aayatul laahi natloohaa 'alika bilhaqq, fabiayyi hadeesim ba'dal laahi wa Aayaatihee yu'minoon

(நபியே!) இவை அல்லாஹ்வுடைய வசனங்களாகும். மெய்யாகவே உங்கள் மீது நாம் இவைகளை ஓதிக் காண்பிக்கிறோம். அல்லாஹ்வுக்கும் அவனுடைய வசனங்களுக்கும் பின்னர் இவர்கள் எவ்விஷயத்தை நம்புவார்கள்?

Tafseer

وَيْلٌ
நாசம்தான்
لِّكُلِّ
எல்லோருக்கும்
أَفَّاكٍ
பாவிகள்
أَثِيمٍ
பொய் பேசுகின்ற

Wailul likulli affaakin aseem

(இவ்வாறு நிராகரித்துவிட்டுப் பொய்யான தெய்வங்களைக்) கற்பனையாகக் கூறும் பாவிகளுக்கெல்லாம் கேடுதான்!

Tafseer

يَسْمَعُ
செவியுறுகின்றான்
ءَايَٰتِ
வசனங்கள்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
تُتْلَىٰ
ஓதப்படுவதை
عَلَيْهِ
தன் மீது
ثُمَّ
பிறகு
يُصِرُّ
பிடிவாதம் காட்டுகின்றான்
مُسْتَكْبِرًا
பெருமை பிடித்தவனாக
كَأَن لَّمْ
அவனோ அவற்றை செவியுறாதவனைப் போல
فَبَشِّرْهُ
அவனுக்கு நற்செய்தி கூறுங்கள்!
بِعَذَابٍ
வேதனையைக் கொண்டு
أَلِيمٍ
வலி தரக்கூடிய(து)

Yasma'u Aayaatil laahi tutlaa 'alaihi summa yusirru mustakbiran ka-al lam yasma'haa fabashshirhu bi'azaabin aleem

எவன், தனக்கு ஓதிக் காண்பிக்கப்பட்ட அல்லாஹ்வின் வசனங்களைக் கேட்டபின்னர், அதனைத் தன் காதால் கேட்காதவனைப்போல் கர்வம்கொண்டு (நிராகரிப்பின் மீதே) பிடிவாதமாக இருக்கின்றானோ அவனுக்குத் துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு (நபியே!) நீங்கள் நற்செய்தி கூறுங்கள்.

Tafseer

وَإِذَا عَلِمَ
அவன் அறிந்து கொண்டால்
مِنْ ءَايَٰتِنَا
நமது வசனங்களில்
شَيْـًٔا
எதையும்
ٱتَّخَذَهَا
அதை எடுத்துக்கொள்கிறான்
هُزُوًاۚ
கேலியாக
أُو۟لَٰٓئِكَ لَهُمْ
இவர்களுக்கு உண்டு
عَذَابٌ
வேதனை
مُّهِينٌ
இழிவுதரும்

Wa izaa 'alima min Aayaatinaa shai'anit takhazahaa huzuwaa; ulaaa'ika lahum 'azaabum muheen

நம்முடைய வசனங்களில் எதனை அவன் கேள்விப்பட்ட போதிலும், அதனை அவன் பரிகாசமாகவே எடுத்துக் கொள்கின்றான். இத்தகையவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.

Tafseer

مِّن وَرَآئِهِمْ
இவர்களுக்கு முன்னால் இருக்கின்றது
جَهَنَّمُۖ
நரகம்
وَلَا يُغْنِى
எதையும் தடுக்காது
عَنْهُم
அவர்களை விட்டும்
مَّا كَسَبُوا۟
அவர்கள் சம்பாதித்தது
شَيْـًٔا
எதையும்
وَلَا مَا
இன்னும் எவற்றை/அவர்கள் எடுத்துக் கொண்டார்களோ
مِن دُونِ
அல்லாஹ்வையன்றி
أَوْلِيَآءَۖ
பாதுகாவலர்களாக
وَلَهُمْ
அவர்களுக்கு உண்டு
عَذَابٌ
வேதனை
عَظِيمٌ
பெரிய(து)

Minw waraaa'ihim Jahannamu wa laa yughnee 'anhum maa kasaboo shai'anw wa laa mat takhazoo min doonil laahi awliyaaa'a wa lahum 'azaabun 'azeem

இத்தகையவர்களுக்கு பின்புறம் நரகம்தான் இருக்கின்றது. அவர்கள் சேகரித்திருப்பவைகளோ அல்லது தங்களுக்குப் பாதுகாப்பாளர்கள் என்று அவர்கள் எடுத்துக்கொண்ட அல்லாஹ் அல்லாதவைகளோ, அவர்களுக்கு யாதொரு பயனும் அளிக்காது. அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் ஜாஸியா
القرآن الكريم:الجاثية
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-Jasiyah
ஸூரா:45
வசனம்:37
Total Words:488
Total Characters:2191
Number of Rukūʿs:4
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:65
Starting from verse:4473