Fa in taaboo wa aqaamus Salaata wa aatawuz Zakaata fa ikhwaanukum fid deen; wa nufassilul Aayaati liqawminy ya'lamoon
அவர்கள் (தங்கள் நிராகரிப்பிலிருந்து விலகி அல்லாஹ்விடம்) மன்னிப்புக்கோரி, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வந்தால் (அவர்கள்) உங்கள் மார்க்க சகோதரர்களே. அறிவுள்ள மக்களுக்கு (நம்முடைய) வசனங்களை (இவ்வாறு) விவரிக்கின்றோம்.
Wa in nakasooo aimaanahum mim ba'di 'ahdihim wa ta'anoo fee deenikum faqaatilooo a'immatal kufri innahum laaa aimaana lahum la'allahum yantahoon
(சத்தியம் செய்து) உடன்படிக்கை செய்து கொண்டதன் பின்னரும், அவர்கள் தங்களுடைய சத்தியங்களை முறித்து உங்களுடைய மார்க்கத்தைப் பற்றியும் தவறான குற்றங்குறைகள் கூறிக்கொண்டிருந்தால், நிச்சயமாக நிராகரிக்கும் (இத்தகைய) மக்களின் வாக்குறுதிகள் முறிந்துவிட்டன. ஆகவே, (இத்தகைய விஷமத்திலிருந்து) அவர்கள் விலகிக்கொள்வதற்காக நீங்கள் போர் புரியுங்கள்.
Alaa tuqaatiloona qawman nakasooo aimaanahum wa hammoo bi ikhraajir Rasooli wa hum bada'ookum awwala marrah; atakhshawnahum; fallaahu ahaqqu an takhshawhu in kuntum mu'mineen
தங்களுடைய சத்திய உடன்படிக்கைகளை முறித்து (நம்முடைய) தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றவும் விரும்பி முயற்சித்த மக்களுடன் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்கள்தான் (இத்தகைய விஷமத்தை) உங்களிடம் முதலில் ஆரம்பித்தனர். அவர்களுக்கு நீங்கள் பயப்படுகிறீர்களா? உண்மையாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாயின் நீங்கள் பயப்படத் தகுதியானவன் அல்லாஹ் (ஒருவன்)தான்.
Qaatiloohum yu'az zibhumul laahu bi aideekum wa yukhzihim wa yansurkum 'alaihim wa yashfi sudoora qawmim mu 'mineen
நீங்கள் அவர்களுடன் போர் புரியுங்கள். உங்கள் கைகளைக் கொண்டே அல்லாஹ் அவர்களுக்கு வேதனை கொடுத்து, அவர்களை இழிவுபடுத்தி, அவர்களை நீங்கள் வெற்றிபெற உங்களுக்கு உதவியும் புரிந்து, நம்பிக்கை கொண்ட மக்களின் உள்ளங்களுக்குத் திருப்தியுமளிப்பான்.
Wa yuzhib ghaiza quloobihim; wa yatoobullaahu 'alaa mai yashaaa'; wallaahu 'Aleemun Hakeem
(அவர்கள் மீது) இவர்கள் உள்ளங்களில் (குமுறிக் கொண்டு) உள்ள கோபங்களையும் போக்கிவிடுவான். அல்லாஹ் (அவர்களிலும்) தான் விரும்பியவர்களின் மன்னிப்புக்கோருதலை அங்கீகரிக் கின்றான். ஏனென்றால், அல்லாஹ் மிக அறிந்தவனும் ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான்.
Am hasibtum an turakoo wa lammaa ya'lamil laahul lazeena jaahadoo minkum wa lam yattakhizoo min doonil laahi wa laa Rasoolihee wa lalmu'mineena waleejah; wallaahu khabeerum bimaa ta'maloon
(நம்பிக்கையாளர்களே!) உங்களில் (உண்மையாகவே மனம் விரும்பி) போர் புரிந்தவர்கள் யாரென்பதையும் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், நம்பிக்கையாளர்களையும் தவிர (மற்றெவரையும் தங்களுடைய) அந்தரங்க நண்பர்களாக (உங்களில்) எவரும் எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும், அல்லாஹ் உங்களைச் சோதித்து அறிவிக்காமல், நீங்கள் விட்டு விடப்படுவீர்கள் என்று எண்ணிக் கொண்டீர்களா? அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாகவே இருக்கிறான்.
maa kaana lilmushrikeena ai ya'muroo masaajidal laahi shaahideena 'alaaa anfusihim bilkufr; ulaaa'ika habitat a'maaluhum wa fin naari hum khaalidoon
இணைவைத்து வணங்கும் இவர்கள், தாங்கள் நிராகரிப்பவர்கள்தாம் என்று (பகிரங்கமாக) கூறிக்கொண்டிருக்கும் வரையில், அல்லாஹ்வுடைய பள்ளிகளைப் பரிபாலனம் செய்ய அவர்களுக்கு உரிமையில்லை. இவர்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்துவிட்டன. அவர்கள் என்றென்றும் நரகத்திலேயே தங்கிவிடுவார்கள்.
Innamaa ya'muru masaa jidal laahi man aamana billaahi wal Yawmil Aakhiri wa aqaamas Salaata wa aataz Zakaata wa lam yakkhsa illal laaha fa'asaaa ulaaa'ika ai yakoonoo minal muhtadeen
எவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருவதுடன், அல்லாஹ்வை அன்றி மற்றெவருக்கும் பயப்படாமலும் இருக்கிறார்களோ, அவர்கள்தான் அல்லாஹ்வுடைய பள்ளிகளைப் பராமரிக்கத் தகுதியுடையவர்கள். இத்தகையவர்கள்தாம் நேரான வழியில் இருப்பவர்கள்.
Aja'altum siqaayatal haaajji wa 'imaaratal masjidil haraami kamman aamana billaahi wal Yawmil Aakhiri wa jaahada fee sabeelil laah; laa yastawoona 'indal laah; wallaahu laa yahdil qawmaz zaalimeen
(நம்பிக்கை கொள்ளாமல் இருந்துகொண்டு) ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுபவர்களையும், சிறப்புற்ற அப்பள்ளிக்கு ஊழியம் செய்பவர்களையும் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிபவர்களுக்குச் சமமாக நீங்கள் ஆக்கிவிட்டீர்களா? அல்லாஹ்வின் சமூகத்தில் (இவ்விருவரும்) சமமாக மாட்டார்கள். அல்லாஹ், அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை.
Allazeena aamanoo wa haajaroo wa jaahadoo fee sabeelil laahi bi amwaalihim wa anufsihim a'zamu darajatan 'indal laah; wa ulaaa'ika humul faaa'izoon
எவர்கள், நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊர்களிலிருந்து வெளியேறி, அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர் புரிகின்றனரோ அவர்கள் அல்லாஹ்விடத்தில் மகத்தான பெரும் பதவி பெற்றவர்கள். இத்தகையவர்கள்தான் நிச்சயமாக வெற்றி அடைந்தவர்கள்.