Skip to main content

ٱتَّخَذُوٓا۟
எடுத்துக் கொண்டனர்
أَحْبَارَهُمْ
அறிஞர்களை தங்கள்
وَرُهْبَٰنَهُمْ
இன்னும் துறவிகளை/தங்கள்
أَرْبَابًا
(வணங்கப்படும்) கடவுள்களாக
مِّن دُونِ
அல்லாஹ்வையன்றி
وَٱلْمَسِيحَ
இன்னும் மஸீஹை
ٱبْنَ
மகன்
مَرْيَمَ
மர்யமுடைய
وَمَآ أُمِرُوٓا۟
அவர்கள் ஏவப்படவில்லை
إِلَّا
தவிர
لِيَعْبُدُوٓا۟
அவர்கள் வணங்குவதற்கு
إِلَٰهًا
வணக்கத்திற்குரிய ஒரு கடவுளை
وَٰحِدًاۖ
ஒரே
لَّآ
அறவே இல்லை
إِلَٰهَ
வணங்கப்படும் கடவுள்
إِلَّا هُوَۚ
அவனைத் தவிர
سُبْحَٰنَهُۥ
அவன் மிகத் தூயவன்
عَمَّا
எதைவிட்டு
يُشْرِكُونَ
இணைவைப்பார்கள்

ittakhazooo ahbaarahum wa ruhbaanahum arbaabammin doonil laahi wal Maseehab na Maryama wa maaa umirooo illaa liya'budooo Ilaahanw Waa hidan laaa ilaaha illaa Hoo; Subhaanahoo 'ammaa yushrikoon

இவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் பாதிரிகளையும், சந்நியாசிகளையும், மர்யமுடைய மகன் மஸீஹையும், (தங்கள்) கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். எனினும், வணக்கத்திற்குரிய ஒரே இறைவனைத் தவிர மற்றெவரையும் வணங்கக் கூடாதென்றே இவர்கள் அனைவரும் ஏவப்பட்டு இருக்கின்றனர். வணக்கத்திற்குரிய இறைவன் அவனையன்றி (வேறெவனும்) இல்லை. அவர்கள் இணை வைக்கும் இவைகளை விட்டு அவன் மிகவும் பரிசுத்தமானவன்.

Tafseer

يُرِيدُونَ
நாடுகின்றனர்
أَن يُطْفِـُٔوا۟
அவர்கள் அணைப்பதற்கு
نُورَ
ஒளியை
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
بِأَفْوَٰهِهِمْ
தங்கள் வாய்களைக் கொண்டு
وَيَأْبَى
மறுக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
إِلَّآ
தவிர
أَن يُتِمَّ
(அவன்) முழுமைப்படுத்துவதை
نُورَهُۥ
தன் ஒளியை
وَلَوْ كَرِهَ
அவர்(கள்) வெறுத்தாலும்
ٱلْكَٰفِرُونَ
நிராகரிப்பவர்கள்

Yureedoona ai yutfi'oo nooral laahi bi'afwaahihim wa yaaballaahu illaaa ai yutimma noorahoo wa law karihal kaafiroon

இவர்கள் தங்கள் வாய்களைக் கொண்டே (ஊதி) அல்லாஹ்வுடைய பிரகாசத்தை அணைத்துவிட விரும்புகின்றனர். எனினும், இந்நிராகரிப்பவர்கள் வெறுத்தபோதிலும் அல்லாஹ் தனது பிரகாசத்தை முழுமைபடுத்தி வைக்காமல் இருக்கப்போவதில்லை.

Tafseer

هُوَ
அவன்
ٱلَّذِىٓ
எவன்
أَرْسَلَ
அனுப்பினான்
رَسُولَهُۥ
தன் தூதரை
بِٱلْهُدَىٰ
நேர்வழியைக் கொண்டு
وَدِينِ
இன்னும் மார்க்கம்
ٱلْحَقِّ
உண்மை
لِيُظْهِرَهُۥ
அவன் ஓங்க வைப்பதற்காக/அதை
عَلَى ٱلدِّينِ
எல்லா மார்க்கங்களை பார்க்கிலும்
وَلَوْ كَرِهَ
அவர்(கள்) வெறுத்தாலும்
ٱلْمُشْرِكُونَ
இணைவைப்பவர்கள்

huwal lazeee ar sala Rasoolahoo bilhudaa wa deenil haqqi liyuzhirahoo 'alad deeni kullihee wa law karihal mushrikoon

அவன்தான் தன்னுடைய தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தான். இணைவைத்து வணங்குபவர்கள் (அதனை) வெறுத்தபோதிலும் (உலகிலுள்ள) எல்லா மார்க்கங்களையும் அந்த சத்திய மார்க்க(மான இஸ்லா)ம் வென்றுவிடும்படி அவன் செய்வான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே!
إِنَّ
நிச்சயமாக
كَثِيرًا
அதிகமானோர்
مِّنَ
இருந்து
ٱلْأَحْبَارِ وَٱلرُّهْبَانِ
யூத, கிறித்துவ அறிஞர்கள்/இன்னும் துறவிகள்
لَيَأْكُلُونَ
புசிக்கின்றனர், அனுபவிக்கின்றனர்
أَمْوَٰلَ
செல்வங்களை
ٱلنَّاسِ
மக்களின்
بِٱلْبَٰطِلِ
தவறாக
وَيَصُدُّونَ
இன்னும் தடுக்கின்றனர்
عَن سَبِيلِ
பாதையை விட்டு
ٱللَّهِۗ
அல்லாஹ்வின்
وَٱلَّذِينَ
எவர்கள்
يَكْنِزُونَ
சேமிக்கின்றனர்
ٱلذَّهَبَ
தங்கத்தை
وَٱلْفِضَّةَ
இன்னும் வெள்ளியை
وَلَا يُنفِقُونَهَا
தர்மம் செய்யமாட்டார்கள்/அவற்றை
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
فَبَشِّرْهُم
நற்செய்தி கூறுவீராக அவர்களுக்கு
بِعَذَابٍ
வேதனையைக் கொண்டு
أَلِيمٍ
துன்புறுத்தக் கூடியது

Yaaa aiyuhal lazeena aamanooo inna kaseeramminal ahbaari warruhbaani la yaakuloona amwaalan naasi bil baatili wa yasuddoona 'an sabeelil laah; wallazeena yaknizoonaz zahaba wal fiddata wa laayunfiqoonahaa fee sabeelil laahi fabashshirhum bi'azaabin aleem

நம்பிக்கையாளர்களே! (அவர்களுடைய) பாதிரிகளிலும், சந்நியாசிகளிலும் பலர் மக்களின் பொருள்களைத் தப்பான முறையில் விழுங்கி வருவதுடன் அல்லாஹ்வுடைய பாதையில் (மக்கள்) செல்வதையும் தடை செய்கின்றனர். ஆகவே, (இவர்களுக்கும் இன்னும் எவர்கள்) தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக்கொண்டு, அதனை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாதிருக்கின்றனரோ அவர்களுக்கும் (நபியே!) நீங்கள் துன்புறுத்தும் வேதனையை நற்செய்தியாகக் கூறுங்கள்.

Tafseer

يَوْمَ
நாளில்
يُحْمَىٰ
பழுக்கக்காய்ச்சப்படும்
عَلَيْهَا
அவற்றின் மீது
فِى نَارِ
நெருப்பில்
جَهَنَّمَ
நரகம்
فَتُكْوَىٰ
சூடிடப்படும்
بِهَا
அவற்றைக் கொண்டு
جِبَاهُهُمْ
நெற்றிகள்/அவர்களுடைய
وَجُنُوبُهُمْ
இன்னும் விலாக்கள்/அவர்களுடைய
وَظُهُورُهُمْۖ
இன்னும் முதுகுகள்/அவர்களுடைய
هَٰذَا
இவை
مَا كَنَزْتُمْ
எவை/சேமித்தீர்கள்
لِأَنفُسِكُمْ
உங்களுக்காக
فَذُوقُوا۟
ஆகவே சுவையுங்கள்
مَا كُنتُمْ
எவற்றை/இருந்தீர்கள்
تَكْنِزُونَ
சேமிப்பீர்கள்

Yawma yuhmaa 'alaihaa fee naari jahannama fatukwaa bihaa jibaahuhum haazaa maa kanaztum li anfusikum fazooqoo maa kuntum taknizoon

(தங்கம், வெள்ளியாகிய) அவற்றை நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சி அவற்றைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், அவர்களுடைய விலாக்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் சூடிட்டு "உங்களுக்காக நீங்கள் சேகரித்து வைத்திருந்தவை இவைகள்தான். ஆகவே, நீங்கள் சேகரித்து வைத்திருந்த இவற்றை சுவைத்துப் பாருங்கள்" என்று கூறப்படும் நாளை (நபியே! நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள்.)

Tafseer

إِنَّ
நிச்சயமாக
عِدَّةَ
எண்ணிக்கை
ٱلشُّهُورِ
மாதங்களின்
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
ٱثْنَا عَشَرَ
பனிரெண்டு
شَهْرًا
மாதங்களாகும்
فِى كِتَٰبِ
புத்தகத்தில், விதியில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
يَوْمَ
நாள்
خَلَقَ
படைத்தான்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை
وَٱلْأَرْضَ
இன்னும் பூமியை
مِنْهَآ
அவற்றில்
أَرْبَعَةٌ
நான்கு
حُرُمٌۚ
புனிதமானவை
ذَٰلِكَ ٱلدِّينُ
இது/மார்க்கம்
ٱلْقَيِّمُۚ
நேரானது
فَلَا تَظْلِمُوا۟
ஆகவே அநீதி இழைக்காதீர்கள்
فِيهِنَّ
அவற்றில்
أَنفُسَكُمْۚ
உங்களுக்கு
وَقَٰتِلُوا۟
போர் புரியுங்கள்
ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்கள்
كَآفَّةً
ஒன்றிணைந்து
كَمَا
போன்று
يُقَٰتِلُونَكُمْ
போர் புரிகின்றனர்/உங்களிடம்
كَآفَّةًۚ
ஒன்றிணைந்து
وَٱعْلَمُوٓا۟
அறிந்து கொள்ளுங்கள்
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
مَعَ ٱلْمُتَّقِينَ
அஞ்சுபவர்களுடன்

Inna 'iddatash shuhoori 'indal laahis naa 'ashara shahran fee Kitaabil laahi yawma khalaqas samaawaati wal arda minhaaa arba'atun hurum; zaalikad deenul qaiyim; falaa tazlimoo feehinna anfusakum; wa qaatilul mushrikeena kaaaf fattan kamaa yuqaati loonakum kaaaffah; wa'lamooo annal laaha ma'al muttaqeen

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஓர் ஆண்டுக்கு) பன்னிரண்டுதான். (இவ்வாறே) வானங்களையும், பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு (மாதங்கள்) சிறப்புற்றவை. இதுதான் நேரான மார்க்கமாகும். ஆகவே, இவற்றில் நீங்கள் (போர் புரிந்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ள வேண்டாம். எனினும், இணைவைத்து வணங்குபவர்களில் எவரேனும் (அம்மாதங்களில்) உங்களுடன் போர் புரிந்தால் அவ்வாறே நீங்களும் அவர்கள் அனைவருடனும் (அம்மாதங்களிலும்) போர் புரியுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் இறை அச்சமுடையவர்களுடன் இருக்கின்றான் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.

Tafseer

إِنَّمَا ٱلنَّسِىٓءُ
பிற்படுத்துவதெல்லாம்
زِيَادَةٌ
அதிகப்படுத்துவது
فِى ٱلْكُفْرِۖ
நிராகரிப்பில்
يُضَلُّ
வழி கெடுக்கப்படுகின்றனர்
بِهِ
இதன் மூலம்
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தனர்
يُحِلُّونَهُۥ
ஆகுமாக்குகின்றனர்/அதை
عَامًا
ஓர் ஆண்டில்
وَيُحَرِّمُونَهُۥ
இன்னும் அதைத் தடை செய்கின்றனர்
عَامًا
ஓர் ஆண்டில்
لِّيُوَاطِـُٔوا۟
அவர்கள் ஒத்து வருவதற்காக
عِدَّةَ
எண்ணிக்கைக்கு
مَا حَرَّمَ
எதை/தடை செய்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
فَيُحِلُّوا۟
ஆகுமாக்குவார்கள்
مَا حَرَّمَ
எதை/தடை செய்தான்
ٱللَّهُۚ
அல்லாஹ்
زُيِّنَ
அலங்கரிக்கப்பட்டன
لَهُمْ
அவர்களுக்கு
سُوٓءُ
தீய(வை)
أَعْمَٰلِهِمْۗ
அவர்களுடைய செயல்கள்
وَٱللَّهُ
அல்லாஹ்
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
ٱلْقَوْمَ
மக்களை
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்களான

Innamma naseee'u ziyaadatun filkufri yudallu bihillazeena kafaroo yuhil loonahoo 'aamanw wa yuhar rimoonahoo 'aamalliyu watti'oo 'iddata maa harramal laah; zuyyina lahum sooo'u a'maalihim; wallaahu laa yahdil qawmal kaafireen

(போர் செய்யக்கூடாதென்று தடுக்கப்பட்டுள்ள மாதங்களை அவர்கள் தங்கள் இஷ்டப்படி) முன் பின்னாக்குவதெல்லாம் நிச்சயமாக நிராகரிப்பையே அதிகப்படுத்துகின்றது. இதனால் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப்படுகின்றனர். ஏனென்றால், (அவர்கள் தங்கள் இஷ்டப்படி மாதங்களை முன் பின்னாக்கி) ஓர் ஆண்டில் (அம்மாதங்களில் போர் புரிவதை) ஆகுமாக்கிக் கொள்கின்றனர். மற்றொரு ஆண்டில் (அதே மாதங்களில் போர் புரிவது கூடாது என்று) தடுத்து விடுகின்றனர். (இவ்வாறு அவர்கள் செய்வதன் நோக்கமெல்லாம் தாங்கள் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கையை) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களையும் தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்குத்தான். அவர்களுடைய இத்தீயச் செயல்கள், (ஷைத்தானால்) அவர்களுக்கு அழகாக்கப்பட்டு விட்டன. நிராகரிக்கும் (இந்த) மக்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
مَا
என்ன?
لَكُمْ
உங்களுக்கு
إِذَا قِيلَ
கூறப்பட்டால்
لَكُمُ
உங்களுக்கு
ٱنفِرُوا۟
புறப்படுங்கள்
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ٱثَّاقَلْتُمْ
சாய்ந்து விட்டீர்கள்
إِلَى
பக்கம்
ٱلْأَرْضِۚ
பூமி, உலகம்
أَرَضِيتُم
திருப்தியடைந்தீர்களா
بِٱلْحَيَوٰةِ
வாழ்க்கையைக் கொண்டு
ٱلدُّنْيَا
உலக
مِنَ
விட
ٱلْءَاخِرَةِۚ
மறுமை
فَمَا
இல்லை
مَتَٰعُ
இன்பம்
ٱلْحَيَوٰةِ
வாழ்க்கை
ٱلدُّنْيَا
உலகம்
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
إِلَّا
தவிர
قَلِيلٌ
அற்பமானதே

Yaaa aiyuhal lazeena aamanoo maa lakum izaa qeela lakumun firoo fee sabeelil laahis saaqaltum ilal ard; aradeetum bilhayaatid dunyaa minal Aakhirah; famaa ma taaul hayaatiddunyaa fil Aakhirati illaa qaleel

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போர் புரிய) நீங்கள் புறப்படுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால் (அவ்வாறு புறப்படாமல்) நீங்கள் ஊரில் தங்கிவிடுவதன் காரணம் என்ன? மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டு நீங்கள் திருப்தியடைந்து விட்டீர்களா? மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பாக இவ்வுலக வாழ்க்கை வெகு அற்பமானதே!

Tafseer

إِلَّا تَنفِرُوا۟
நீங்கள் புறப்படாவிட்டால்
يُعَذِّبْكُمْ
வேதனை செய்வான்/உங்களை
عَذَابًا
வேதனையால்
أَلِيمًا
துன்புறுத்தக்கூடியது
وَيَسْتَبْدِلْ
இன்னும் மாற்றி விடுவான்
قَوْمًا
ஒரு சமுதாயத்தை
غَيْرَكُمْ
உங்களை அன்றி
وَلَا
நீங்கள் தீங்கிழைக்க முடியாது
تَضُرُّوهُ
நீங்கள் தீங்கிழைக்க முடியாது அவனுக்கு
شَيْـًٔاۗ
எதையும்
وَٱللَّهُ
அல்லாஹ்
عَلَىٰ
மீதும்
كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின்
قَدِيرٌ
பேராற்றலுடையவன்

Illaa tanfiroo yu'az zibkum 'azaaban aleemanw wa yastabdil qawman ghairakum wa laa tadurroohu shai'aa; wal laahu 'alaa kulli shai'in Qadeer

(உங்களை போருக்கு அழைக்கப்பட்டு) நீங்கள் செல்லா விட்டால், உங்களை மிகத் துன்புறுத்தும் வேதனையால் வேதனை செய்வான். (அன்றி, உங்களைப் போக்கி) உங்கள் இடத்தில் மற்றவர்களை ஏற்படுத்தி விடுவான். (இதற்காக) நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் இழைக்க முடியாது. ஏனென்றால், அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக ஆற்றலுடையவன்.

Tafseer

إِلَّا
நீங்கள் உதவவில்லையெனில்
تَنصُرُوهُ
நீங்கள் உதவவில்லையெனில் அவருக்கு
فَقَدْ
உதவிசெய்துவிட்டான்
نَصَرَهُ
உதவிசெய்துவிட்டான் அவருக்கு
ٱللَّهُ
அல்லாஹ்
إِذْ أَخْرَجَهُ
போது/வெளியேற்றினார்(கள்)/அவரை
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தனர்
ثَانِىَ
ஒருவராக
ٱثْنَيْنِ
இருவரில்
إِذْ
போது
هُمَا
அவ்விருவரும்
فِى ٱلْغَارِ
குகையில்
إِذْ
போது
يَقُولُ
கூறுகிறார்
لِصَٰحِبِهِۦ
தன் தோழருக்கு
لَا تَحْزَنْ
கவலைப்படாதே
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
مَعَنَاۖ
நம்முடன்
فَأَنزَلَ
ஆகவே, இறக்கினான்
ٱللَّهُ
அல்லாஹ்
سَكِينَتَهُۥ
தன் அமைதியை
عَلَيْهِ
அவர் மீது
وَأَيَّدَهُۥ
இன்னும் பலப்படுத்தினான்/அவரை
بِجُنُودٍ
படைகளைக்கொண்டு
لَّمْ تَرَوْهَا
நீங்கள் பார்க்கவில்லை/அவற்றை
وَجَعَلَ
இன்னும் ஆக்கினான்
كَلِمَةَ
வார்த்தையை
ٱلَّذِينَ
எவர்களின்
كَفَرُوا۟
நிராகரித்தனர்
ٱلسُّفْلَىٰۗ
மிகத் தாழ்ந்ததாக
وَكَلِمَةُ
வார்த்தை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
هِىَ
அதுதான்
ٱلْعُلْيَاۗ
மிக உயர்வானது
وَٱللَّهُ
அல்லாஹ்
عَزِيزٌ
மிகைத்தவன்
حَكِيمٌ
ஞானவான்

Illaa tansuroohu faqad nasarahul laahu iz akhrajahul lazeena kafaroo saaniyasnaini iz humaa filghaari iz yaqoolu lisaahibihee la tahzan innnal laaha ma'anaa fa anzalallaahu sakeenatahoo 'alaihi wa aiyadahoo bijunoodil lam tarawhaa wa ja'ala kalimatal lazeena kafarus suflaa; wa Kalimatul laahi hiyal 'ulyaa; wallaahu 'Azeezun Hakeem;

(நம் தூதருக்கு) நீங்கள் உதவி செய்யாவிட்டால் (அதனால் அவருக்கொன்றும் நஷ்டம் ஏற்பட்டுவிடாது. ஏனென்றால்) நிராகரிப்பவர்கள் அவரை (ஊரைவிட்டு) வெளியேற்றிய சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவிசெய்தே இருக்கின்றான். (மலைக்) குகையில் இருந்த இருவரில் ஒருவராக அவர் இருந்த (போது எதிரிகள் வந்து சூழ்ந்துகொண்ட) சமயத்தில் தன்னுடன் (குகையில்) இருந்த தோழ(ராகிய அபூபக்)ரை நோக்கி "நீங்கள் கவலைப்படாதீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்" என்று கூறியபோதும் அல்லாஹ் அவருக்குத் தன்னுடைய மனநிம்மதியை அளித்தான். (மற்ற போர் சமயங் களிலும்) நீங்கள் காணமுடியாத படைகளைக் கொண்டு அவருக்கு உதவி செய்து நிராகரிப்பவர்களின் வார்த்தையை (மார்க்கத்தை) தாழ்த்தினான். ஏனென்றால், அல்லாஹ்வின் வார்த்தை (மார்க்கம்) தான் மிக உயர்வானது. அன்றி, அல்லாஹ் (அனைத்தையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer