Skip to main content

قُل
கூறுவீராக
لَّن يُصِيبَنَآ
அறவே அடையாது/எங்களை
إِلَّا
தவிர
مَا كَتَبَ
எதை/விதித்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
لَنَا
எங்களுக்கு
هُوَ
அவன்தான்
مَوْلَىٰنَاۚ
எங்கள் இறைவன்
وَعَلَى ٱللَّهِ
இன்னும் மீது/அல்லாஹ்
فَلْيَتَوَكَّلِ
நம்பிக்கை வைக்கவும்
ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள்

Qul lany-yuseebanaaa illaa maa katabal laahu lanaa Huwa mawlaanaa; wa 'alal laahi falyatawak kalimu 'minoon

(ஆகவே நபியே! அவர்களை நோக்கி) "அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறொன்றும் நிச்சயமாக எங்களை அணுகாது. அவன்தான் எங்களுடைய இறைவன்" என்று நீங்கள் கூறுங்கள். நம்பிக்கையாளர்கள் அனைவரும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைக்கவும்.

Tafseer

قُلْ
கூறுவீராக
هَلْ تَرَبَّصُونَ
எதிர்பார்க்கிறீர்களா?
بِنَآ
எங்களுக்கு
إِلَّآ
தவிர
إِحْدَى
ஒன்றை
ٱلْحُسْنَيَيْنِۖ
(இரு) சிறப்பானவற்றில்
وَنَحْنُ
நாங்கள்
نَتَرَبَّصُ
எதிர்பார்க்கிறோம்
بِكُمْ
உங்களுக்கு
أَن يُصِيبَكُمُ
சோதிப்பதை/உங்களை
ٱللَّهُ
அல்லாஹ்
بِعَذَابٍ مِّنْ
ஒரு வேதனையைக் கொண்டு/தன்னிடமிருந்து
أَوْ
அல்லது
بِأَيْدِينَاۖ
எங்கள் கரங்களால்
فَتَرَبَّصُوٓا۟
ஆகவே எதிர்பாருங்கள்
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
مَعَكُم
உங்களுடன்
مُّتَرَبِّصُونَ
எதிர்பார்ப்பவர்கள்

Qul hal tarabbasoona binaaa illaaa ihdal husnayayni wa nahnu natrabbasu bikum ai yus eebakumul laahu bi'azaa bim min 'indiheee aw biaidee naa fatarabbasooo innaa ma'akum mutarabbisoon

அன்றி, (நபியே!) நீங்கள் கூறுங்கள்: (வெற்றி அல்லது வீர சுவர்க்கம் ஆகிய) மிகச் சிறந்த இவ்விரண்டு நன்மைகளில் ஒன்றைத்தவிர (வேறெந்தத் தீங்கையும்) நீங்கள் எங்களுக்கு எதிர்பார்க்க முடியுமா? (ஆகவே, இந்த இரண்டில் எது கிடைத்த போதிலும் எங்களுக்கு நன்றே.) எனினும், உங்களுக்கோ அல்லாஹ் தன் வேதனையைக் கொண்டோ அல்லது எங்கள் கைகளைக் கொண்டோ உங்களுக்குக் கஷ்டம் உண்டாக்குவதையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஆகவே, நீங்கள் (எங்களுக்கு வர வேண்டியதை) எதிர்பார்த்திருங்கள்; நாங்களும் (உங்களுக்கு வர வேண்டியதை) உங்களுடன் எதிர்பார்க்கின்றோம்.

Tafseer

قُلْ
கூறுவீராக
أَنفِقُوا۟
தர்மம் செய்யுங்கள்
طَوْعًا
விருப்பமாக
أَوْ
அல்லது
كَرْهًا
வெறுப்பாக
لَّن يُتَقَبَّلَ
அறவே அங்கீகரிக்கப்படாது
مِنكُمْۖ
உங்களிடமிருந்து
إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
كُنتُمْ
ஆகிவிட்டீர்கள்
قَوْمًا
மக்களாக
فَٰسِقِينَ
பாவிகளான

Qul anfiqoo taw'an aw karhal lany yutaqabbala min kum innakum kuntum qawman faasiqeen

(அன்றி) "நீங்கள் விருப்பத்துடனோ அல்லது வெறுப்புடனோ (எதைத்) தானம் செய்தபோதிலும் (அது) உங்களிடமிருந்து அங்கீகரிக்கப்படவே மாட்டாது. ஏனென்றால், நிச்சயமாக நீங்கள் பாவிகளாகவே இருக்கின்றீர்கள்" என்றும் (நபியே!) நீங்கள் கூறிவிடுங்கள்.

Tafseer

وَمَا مَنَعَهُمْ
தடையாக இருக்கவில்லை/அவர்களுக்கு
أَن تُقْبَلَ
அங்கீகரிக்கப்படுவதற்கு
مِنْهُمْ
அவர்களிடமிருந்து
نَفَقَٰتُهُمْ
அவர்களுடைய தர்மங்கள்
إِلَّآ
தவிர
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தனர்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَبِرَسُولِهِۦ
இன்னும் அவனுடைய தூதரை
وَلَا يَأْتُونَ
இன்னும் வரமாட்டார்கள்
ٱلصَّلَوٰةَ
தொழுகைக்கு
إِلَّا وَهُمْ
தவிர/அவர்கள் இருந்தே
كُسَالَىٰ
சோம்பேறிகளாக
وَلَا يُنفِقُونَ
தர்மம் புரிய மாட்டார்கள்
إِلَّا
தவிர
وَهُمْ
அவர்கள் இருந்தே
كَٰرِهُونَ
வெறுத்தவர்களாக

Wa maa mana'ahum an tuqbala minhum nafaqaatuhum illaaa annnahum kafaroo billaahi wa bi Rasoolihee wa laa yaatoonas Salaata illaa wa hum kusaalaa wa laa yunfiqoona illaa wa hum kaarihoon

அவர்கள் செய்யும் தானம் அங்கீகரிக்கப்படமாட்டாது என்று (இறைவன்) தடுத்திருப்பதற்குக் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்ததுதான். அன்றி, அவர்கள் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுவதில்லை; வெறுப்புடனே அன்றி அவர்கள் தானம் செய்வதுமில்லை.

Tafseer

فَلَا تُعْجِبْكَ
ஆச்சரியப்படுத்த வேண்டாம்/உம்மை
أَمْوَٰلُهُمْ
செல்வங்கள்/அவர்களுடைய
وَلَآ
இன்னும் பிள்ளைகள்
أَوْلَٰدُهُمْۚ
இன்னும் பிள்ளைகள் அவர்களுடைய
إِنَّمَا
எல்லாம்
يُرِيدُ
நாடுவான்
ٱللَّهُ
அல்லாஹ்
لِيُعَذِّبَهُم
வேதனை செய்வதை/அவர்களை
بِهَا
அவற்றின் மூலம்
فِى ٱلْحَيَوٰةِ
வாழ்க்கையில்
ٱلدُّنْيَا
உலகம்
وَتَزْهَقَ
இன்னும் பிரிந்து சென்று விடுவதை, அழிந்து விடுவதை
أَنفُسُهُمْ
அவர்களுடைய உயிர்கள்
وَهُمْ
அவர்கள் இருக்க
كَٰفِرُونَ
நிராகரிப்பவர்களாக

Falaa tu'jibka amwaaluhum wa laaa awlaaduhum; innamaa yureedul laahu liyu'az zibahum bihaa fil hayaatid dunyaa wa tazhaqa anfusuhum wa hum kaafiroon

(நபியே!) அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய மக்களும் (பெருகியிருப்பது) உங்களை ஆச்சரியப்படுத்த வேண்டாம். அல்லாஹ் (அவைகளை அவர்களுக்குக் கொடுத்து) அவைகளைக் கொண்டு அவர்களை இவ்வுலக வாழ்விலேயே வேதனை செய்ய நிச்சயமாக நாடுகிறான். அன்றி, அவர்கள் நிராகரிப்பவர்களாக இருக்கும் நிலைமையில் அவர்களுடைய உயிர் போவதையும் (நாடுகிறான்.)

Tafseer

وَيَحْلِفُونَ
சத்தியம்செய்கின்றனர்
بِٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
لَمِنكُمْ
உங்களைச் சேர்ந்தவர்கள்தான்
وَمَا هُم
அவர்கள் இல்லை/உங்களைச் சேர்ந்தவர்கள்
وَلَٰكِنَّهُمْ
என்றாலும் அவர்கள்
قَوْمٌ
மக்கள்
يَفْرَقُونَ
பயப்படுகிறார்கள்

Wa yahlifoona billaahi innnahum laminkum wa maa hum minkum wa laakinnahum qawmuny yafraqoon

"நிச்சயமாக நாங்களும் உங்களைச் சார்ந்தவர்கள்தான்" என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். எனினும், அவர்கள் உங்களைச் சார்ந்தவர்களன்று. அவர்கள் (தங்கள் உண்மைக் கோலத்தை வெளிப்படுத்த அஞ்சும்) கோழைகள்.

Tafseer

لَوْ يَجِدُونَ
அவர்கள் கண்டால்
مَلْجَـًٔا
ஒரு ஒதுங்குமிடத்தை
أَوْ
அல்லது
مَغَٰرَٰتٍ
குகைகளை
أَوْ
அல்லது
مُدَّخَلًا
ஒரு சுரங்கத்தை
لَّوَلَّوْا۟
திரும்பியிருப்பார்கள்
إِلَيْهِ
அதன் பக்கம்
وَهُمْ
அவர்களோ
يَجْمَحُونَ
விரைந்தவர்களாக

Law yajidoona malja'an aw maghaaraatin aw mudda khalal lawallaw ilaihi wa hum yajmahoon

தப்பித்துக்கொள்ளக்கூடிய யாதொரு இடத்தை அல்லது (மலைக்) குகைகளை அல்லது ஒரு சுரங்கத்தை அவர்கள் காண்பார்களேயானால் (உங்களிடமிருந்து விலகி) அவற்றின் பக்கம் அல்லோலமாக விரைந்து ஓடுவார்கள்.

Tafseer

وَمِنْهُم
அவர்களில்
مَّن
எவர்(கள்)
يَلْمِزُكَ
குறை கூறுகிறார்(கள்)/உம்மை
فِى ٱلصَّدَقَٰتِ
தர்மங்களில்
فَإِنْ أُعْطُوا۟
அவர்கள் கொடுக்கப்பட்டால்
مِنْهَا
அவற்றிலிருந்து
رَضُوا۟
திருப்தியடைவார்கள்
وَإِن لَّمْ
அவர்கள் கொடுக்கப்பட வில்லையென்றால்
مِنْهَآ
அவற்றிலிருந்து
إِذَا
அப்போது
هُمْ
அவர்கள்
يَسْخَطُونَ
ஆத்திரப்படுகின்றனர்

Wa minhum mai yalmizuka fis sadaqaati fa-in u'too minhaa radoo wa illam yu'taw minhaaa izaa hum yaskhatoon

(நபியே!) நீங்கள் தானங்களைப் பங்கிடுவதில் பாரபட்சமுடையவர் என்று உங்களைக் குறை கூறுபவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். (அவர்கள் விருப்பப்படி) அதிலிருந்து அவர்களுக்குக் கொடுக்கப்பட்டால் அவர்கள் திருப்தியடைகின்றனர். அதிலிருந்து (அவர்கள் விருப்பப்படி) கொடுக்கப்படாவிட்டாலோ ஆத்திரம் கொள்கின்றனர்.

Tafseer

وَلَوْ أَنَّهُمْ
நிச்சயம் அவர்கள் திருப்தியடைந்து
مَآ ءَاتَىٰهُمُ
எதை/கொடுத்தான்/அவர்களுக்கு
ٱللَّهُ
அல்லாஹ்
وَرَسُولُهُۥ
இன்னும் அவனுடைய தூதர்
وَقَالُوا۟
இன்னும் கூறவேண்டுமே
حَسْبُنَا ٱللَّهُ
எங்களுக்கு போதுமானவன்/அல்லாஹ்
سَيُؤْتِينَا
கொடுப்பார்கள்/எங்களுக்கு
ٱللَّهُ
அல்லாஹ்
مِن
இருந்து
فَضْلِهِۦ
தன் அருள்
وَرَسُولُهُۥٓ
இன்னும் அவனுடைய தூதர்
إِنَّآ
நிச்சயமாக நாங்கள்
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கம்தான்
رَٰغِبُونَ
ஆசை உள்ளவர்கள்

Wa law annahum radoo maaa aataahumul laahu wa Rasooluhoo wa qaaloo hasbunal laahu wayu'teenallaahu min fadlihee wa Rasooluhooo innaaa ilallaahi raaghiboon

அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்குக் கொடுத்ததைப் பற்றி திருப்தியடைந்து "அல்லாஹ் நமக்குப் போதுமானவன்; அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் பின்னும் நமக்கு அருள்புரியக் கூடும்; நிச்சயமாக நாம் அல்லாஹ்வையே நம்பியிருக்கின்றோம்" என்றும் அவர்கள் கூற வேண்டாமா?

Tafseer

إِنَّمَا
எல்லாம்
ٱلصَّدَقَٰتُ
ஸகாத்துகள்
لِلْفُقَرَآءِ
வரியவர்களுக்கு
وَٱلْمَسَٰكِينِ
இன்னும் ஏழைகள்
وَٱلْعَٰمِلِينَ عَلَيْهَا
இன்னும் ஊழியம் செய்பவர்கள்/அவற்றுக்கு
وَٱلْمُؤَلَّفَةِ
இன்னும் இணைக்கப்பட்டவர்கள்
قُلُوبُهُمْ
அவர்களின் உள்ளங்கள்
وَفِى ٱلرِّقَابِ
இன்னும் அடிமைகளுக்கும்
وَٱلْغَٰرِمِينَ
இன்னும் கடனாளிகள்
وَفِى سَبِيلِ
இன்னும் பாதையில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَٱبْنِ ٱلسَّبِيلِۖ
இன்னும் வழிப்போக்கர்கள்
فَرِيضَةً
கடமையாக
مِّنَ ٱللَّهِۗ
அல்லாஹ்விடமிருந்து
وَٱللَّهُ
அல்லாஹ்
عَلِيمٌ
நன்கிறந்தவன்
حَكِيمٌ
ஞானவான்

Innamas sadaqaatu lilfuqaraaa'i walmasaakeeni wal 'aamileena 'alaihaa wal mu'al lafati quloobuhum wa fir riqaabi walghaarimeena wa fee sabeelil laahi wabnis sabeeli fareedatam minal laah; wal laahu 'Aleemun Hakeem

தானமெல்லாம் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூலிப்பவர்களுக்கும், புதிதாக இஸ்லாமைத் தழுவியவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடனில் மூழ்கியவர்களுக்கும், அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்வதற்கும், வழிப்போக்கர்களுக்கும் (உரித்தானதாக) அல்லாஹ் ஏற்படுத்தியதாகும். அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer