Skip to main content

قَالَ
கூறினார்
نُوحٌ
நூஹ்
رَّبِّ
என் இறைவா!
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
عَصَوْنِى
எனக்கு மாறுசெய்தனர்
وَٱتَّبَعُوا۟
இன்னும் பின்பற்றினர்
مَن لَّمْ
எவன்/அதிகப்படுத்தவில்லையோ/அவனுக்கு
مَالُهُۥ
அவனுடைய செல்வமும்
وَوَلَدُهُۥٓ
இன்னும் அவனுடைய பிள்ளையும்
إِلَّا خَسَارًا
நஷ்டத்தைத் தவிர

Qaala Noohur Robbi innahum 'asawnee wattaba'oo mal lam yazid hu maaluhoo wa waladuhooo illaa khasaara

(பின்னும் நூஹ் நபி தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறு செய்கின்றனர். தவிர, பொருள்களும் சந்ததிகளும் எவர்களுக்கு நஷ்டத்தை தவிர வேறு எதையும் அதிகப்படுத்தவில்லையோ, அவர்களையே பின்பற்றுகின்றனர்.

Tafseer

وَمَكَرُوا۟
இன்னும் சூழ்ச்சி செய்தார்கள்
مَكْرًا
சூழ்ச்சி
كُبَّارًا
மிகப் பெரிய

Wa makaroo makran kubbaaraa

பெரும் பெரும் சூழ்ச்சிகளையும் (எனக்குச்) செய்கின்றனர்.

Tafseer

وَقَالُوا۟
இன்னும் கூறினார்கள்
لَا تَذَرُنَّ
நீங்கள் விட்டுவிடாதீர்கள்
ءَالِهَتَكُمْ
உங்கள் தெய்வங்களை
وَلَا تَذَرُنَّ
இன்னும் விட்டுவிடாதீர்கள்
وَدًّا وَلَا
வத்து/இன்னும் சுவாஃ
وَلَا يَغُوثَ
இன்னும் யகூஸ்
وَيَعُوقَ
இன்னும் யவூக்
وَنَسْرًا
இன்னும் நஸ்ர்

Wa qaaloo laa tazarunna aalihatakum wa laa tazarunna Waddanw wa laa Suwaa'anw wa laa Yaghoosa wa Ya'ooqa wa Nasraa

(மற்றவர்களை நோக்கி) நீங்கள் உங்கள் தெய்வங்களை விட்டு விடாதீர்கள். "வத்" (என்னும் விக்கிரகத்)தையும் விடாதீர்கள். "ஸுவாஉ" "எகூஸ்" "யஊக்" "நஸ்ர்" (ஆகிய விக்கிரகங்)களையும் விட்டுவிடாதீர்கள்" என்று கூறி,

Tafseer

وَقَدْ
திட்டமாக
أَضَلُّوا۟
அவர்கள் வழி கெடுத்தனர்
كَثِيرًاۖ
பலரை
وَلَا تَزِدِ
நீ அதிகப்படுத்தாதே!
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களுக்கு
إِلَّا ضَلَٰلًا
வழிகேட்டைத் தவிர

Wa qad adalloo kasee ranw wa laa tazidiz zaalimeena illaa dalaalaa

நிச்சயமாக பலரை வழிகெடுத்துவிட்டனர். (ஆகவே, என் இறைவனே!) இந்த அநியாயக்காரர்களுக்கு வழிகேட்டையன்றி நீ அதிகப்படுத்திவிடாதே!" (என்றும் பிரார்த்தித்தார்).

Tafseer

مِّمَّا خَطِيٓـَٰٔتِهِمْ
அவர்களுடைய பாவங்களால்
أُغْرِقُوا۟
அவர்கள் மூழ்கடிக்கப்பட்டார்கள்
فَأُدْخِلُوا۟
பிறகு, நுழைக்கப்பட்டார்கள்
نَارًا
நரகத்தில்
فَلَمْ يَجِدُوا۟
அவர்கள் காணவில்லை
لَهُم
தங்களுக்கு
مِّن دُونِ
அல்லாஹ்வையன்றி
أَنصَارًا
உதவியாளர்களை

Mimmaa khateee' aatihim ughriqoo fa udkhiloo Naaran falam yajidoo lahum min doonil laahi ansaaraa

ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக, (வெள்ளப்பிரளயத்தில்) மூழ்கடிக்கப்பட்டுப், பின்னர் நரகத்திலும் புகுத்தப்பட்டனர். அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு உதவி செய்பவர்களை அவர்கள் காணவில்லை.

Tafseer

وَقَالَ
கூறினார்
نُوحٌ
நூஹ்
رَّبِّ
என் இறைவா!
لَا تَذَرْ
நீ விட்டு விடாதே!
عَلَى ٱلْأَرْضِ
பூமியில்
مِنَ ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களில்
دَيَّارًا
வசிக்கின்ற எவரையும்

Wa qaala Noohur Rabbi laa tazar 'alal ardi minal kaafireena daiyaaraa

பின்னும், நூஹ் (தன் இறைவனை நோக்கி,) "என் இறைவனே! பூமியில் இந்நிராகரிப்பவர்களில் ஒருவரையும் நீ வசித்திருக்க விட்டு வைக்காதே!

Tafseer

إِنَّكَ
நிச்சயமாக நீ
إِن تَذَرْهُمْ
அவர்களை விட்டு விட்டால்
يُضِلُّوا۟
வழிகெடுத்து விடுவார்கள்
عِبَادَكَ
உனது அடியார்களை
وَلَا يَلِدُوٓا۟
இன்னும் பெற்றெடுக்க மாட்டார்கள்
إِلَّا
தவிர
فَاجِرًا
பாவியை
كَفَّارًا
மிகப் பெரிய நிராகரிப்பாளனை

Innaka in tazarhum yudil loo 'ibaadaka wa laa yalidooo illaa faajiran kaffaaraa

நீ அவர்களை விட்டு வைப்பாயானால், உன்னுடைய (மற்ற) அடியார்களையும் நிச்சயமாக வழிகெடுத்தே விடுவார்கள். பாவிகளையும் நிராகரிப்பவர்களையும் அன்றி, (வேறெவரையும் குழந்தையாக) அவர்கள் பெற்றெடுக்கவும் மாட்டார்கள்.

Tafseer

رَّبِّ
என் இறைவா!
ٱغْفِرْ لِى
என்னை(யும்) மன்னிப்பாயாக!
وَلِوَٰلِدَىَّ
என் பெற்றோரையும்
وَلِمَن دَخَلَ
நுழைந்து விட்டவரையும்
بَيْتِىَ
என் வீட்டில்
مُؤْمِنًا
நம்பிக்கையாளராக
وَلِلْمُؤْمِنِينَ
நம்பிக்கை கொண்ட ஆண்களையும்
وَٱلْمُؤْمِنَٰتِ
நம்பிக்கை கொண்ட பெண்களையும்
وَلَا تَزِدِ
அதிகப்படுத்தாதே!
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களுக்கு
إِلَّا تَبَارًۢا
அழிவைத் தவிர

Rabbigh fir lee wa liwaa lidaiya wa liman dakhala baitiya mu'minanw wa lil mu'mineena wal mu'minaati wa laa tazidiz zaalimeena illaa tabaaraa

என் இறைவனே! எனக்கும் என்னுடைய தாய் தந்தைக்கும், நம்பிக்கைக் கொண்டவனாக என்னுடைய வீட்டில் நுழைந்த வனுக்கும், (வீட்டில் நுழையாத மற்ற) நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் நீ மன்னித்தருள் புரிவாயாக! இந்த அநியாயக்காரர்களுக்கும் அழிவை தவிர நீ அதிகப்படுத்தாதே!" (என்றும் பிரார்த்தித்தார்).

Tafseer