Illaa 'ajoozan filghaabireen
எனினும், அவருடைய ஒரு கிழ (மனை)வியைத் தவிர அவள் (லூத்துடன்) வராது பின் தங்கியவர்களுடன் தங்கி (அழிந்து) விட்டாள்.
Summa dammarnal aa khareen
பின்னர், நாம் மற்ற அனைவரையும் அழித்துவிட்டோம்.
Wa amtarnaa 'alaihim mataran fasaaa'a matarul munzareen
அவர்கள் மீது நாம் (கல்) மழையை பொழியச் செய்தோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட அவர்களின் (மீது பொழிந்த கல்) மழை மகா கெட்டது.
Inna fee zaalika la Aayah; wa maa kaana aksaruhum mu'mineen
நிச்சயமாக இதிலோர் நல்ல அத்தாட்சியிருந்தது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.
Wa inna Rabbaka la Huwal 'Azeezur Raheem
(நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன்தான் மிகைத்தவனும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
Kazzaba As haabul Aykatil mursaleen
("மத்யன்" என்னும் ஊரில்) சோலையில் வசித்திருந்தவர்களும் நம்முடைய தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.
Iz qaala lahum Shu'aybun alaa tattaqoon
ஷுஐப் (நபி) அவர்களை நோக்கி "நீங்கள் (அல்லாஹ்வுக்கு அஞ்சி பாவத்திலிருந்து) விலகிக்கொள்ள வேண்டாமா?
Innee lakum Rasoolun ameen
நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட நம்பிக்கையுள்ள ஒரு தூதனாக இருக்கிறேன்.
Fattaqul laaha wa atee'oon
அல்லாஹ்வை அஞ்சி எனக்கு கட்டுப்படுங்கள்.
Wa maaa as'alukum 'alaihi min ajrin in ajriya illaa 'alaa Rabbil 'aalameen
இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை. என்னுடைய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.