Skip to main content
bismillah

طسٓمٓ
தா சீம் மீம்

Taa-Seeen-Meeem

தா; ஸீம்; மீம்.

Tafseer

تِلْكَ ءَايَٰتُ
இவை/வசனங்கள்
ٱلْكِتَٰبِ
வேதத்தின்
ٱلْمُبِينِ
தெளிவான

Tilka Aayaatul Kitaabil Mubeen

(நபியே!) இது தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும்.

Tafseer

لَعَلَّكَ بَٰخِعٌ
நீர் அழித்துக் கொள்வீரோ!
نَّفْسَكَ
உம்மையே
أَلَّا يَكُونُوا۟
அவர்கள் மாறாததால்
مُؤْمِنِينَ
நம்பிக்கை கொள்பவர்களாக

La'allaka baakhi'un nafsaka allaa yakoonoo mu'mineen

(நபியே!) அவர்கள் (உங்களை) நம்பிக்கை கொள்ளாததன் காரணமாக (துக்கத்தால்) நீங்கள் தற்கொலை செய்து கொள்வீர்கள் போலும்!

Tafseer

إِن نَّشَأْ
நாம் நாடினால்
نُنَزِّلْ
நாம் இறக்குவோம்
عَلَيْهِم
அவர்கள் மீது
مِّنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
ءَايَةً
ஒரு அத்தாட்சியை
فَظَلَّتْ
ஆகிவிடும்
أَعْنَٰقُهُمْ
அவர்களது கழுத்துகள்
لَهَا
அதற்கு
خَٰضِعِينَ
பணிந்தவையாக

In nashaa nunazzil 'alaihim minas samaaa'i Aayatan fazallat a'naaquhum lahaa khaadi'een

நாம் விரும்பினால் அவர்களுடைய கழுத்துக்கள் பணிந்து குனிந்து வரும்படி (வேதனை) செய்யக்கூடிய அத்தாட்சிகளை வானத்திலிருந்து அவர்கள் மீது நாம் இறக்கியிருப்போம்.

Tafseer

وَمَا يَأْتِيهِم
அவர்களிடம் வருவதில்லை
مِّن ذِكْرٍ
அறிவுரை எதுவும்
مِّنَ ٱلرَّحْمَٰنِ
ரஹ்மானிடமிருந்து
مُحْدَثٍ
புதிதாக
إِلَّا كَانُوا۟
அவர்கள் இருந்தே தவிர
عَنْهُ
அதை
مُعْرِضِينَ
புறக்கணிப்பவர்களாக

Wa maa yaateehim min zikrim minar Rahmaani muhdasin illaa kaanoo 'anhu mu'rideen

ரஹ்மானிடமிருந்து புதிதான யாதொரு நல்லுபதேசம் வரும் போதெல்லாம் அதனை அவர்கள் (நிராகரித்து) புறக்கணிக்காமல் இருப்பதில்லை.

Tafseer

فَقَدْ
திட்டமாக
كَذَّبُوا۟
இவர்கள் பொய்ப்பித்தனர்
فَسَيَأْتِيهِمْ
ஆகவே, அவர்களிடம் விரைவில் வரும்
أَنۢبَٰٓؤُا۟
செய்திகள்
مَا كَانُوا۟
எது/இருந்தனர்/அதை
يَسْتَهْزِءُونَ
பரிகாசம் செய்பவர்களாக

Faqad kazzaboo fasa yaateehim ambaaa'u maa kaanoo bihee yastahzi'oon

(ஆகவே, இதனையும்) நிச்சயமாக அவர்கள் பொய்யாக்குகின்றனர். எனினும், அவர்கள் எதனை(ப் பொய்யாக்கிப்) பரிகசித்துக் கொண்டிருக்கின்றார்களோ அதன் (உண்மை) செய்திகள் நிச்சயமாக அவர்களிடம் வந்தே தீரும்.

Tafseer

أَوَلَمْ يَرَوْا۟
அவர்கள் பார்க்க வேண்டாமா?
إِلَى
பக்கம்
ٱلْأَرْضِ
பூமியின்
كَمْ
எத்தனை
أَنۢبَتْنَا
நாம் முளைக்க வைத்தோம்
فِيهَا
அதில்
مِن كُلِّ
எல்லாவற்றிலிருந்தும்
زَوْجٍ
ஜோடிகள்
كَرِيمٍ
அழகிய

Awa lam yaraw ilal ardi kam ambatnaa feehaa min kulli zawjin kareem

அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? அதில் ஒவ்வொரு வகையிலும் (பயனளிக்கக் கூடிய) மேலான புற்பூண்டுகளை ஜோடி ஜோடியாகவே நாம் முளைப்பித்து இருக்கின்றோம்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
فِى ذَٰلِكَ
இதில் இருக்கிறது
لَءَايَةًۖ
ஓர் அத்தாட்சி
وَمَا كَانَ
இல்லை
أَكْثَرُهُم
அதிகமானவர்கள் அவர்களில்
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக

Inn fee zaalika la Aayah; wa maa kaana aksaruhum mu'mineen

நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.

Tafseer

وَإِنَّ
நிச்சயமாக
رَبَّكَ لَهُوَ
உமது இறைவன்தான்
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
ٱلرَّحِيمُ
பெரும் கருணையாளன்

Wa inna Rabbaka la Huwal 'Azeezur Raheem

(நபியே!) உங்களுடைய இறைவன் நிச்சயமாக (அனைவரையும்) மிகைத்தவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَإِذْ نَادَىٰ
அந்நேரத்தை நினைவு கூருங்கள்!/அழைத்தான்
رَبُّكَ
உமது இறைவன்
مُوسَىٰٓ
மூசாவை
أَنِ ٱئْتِ
நீர் வருவீராக!
ٱلْقَوْمَ
மக்களிடம்
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்கள்

Wa iz naadaa Rabbuka Moosaaa ani'-til qawmaz zaalimeen

(நபியே!) உங்களுடைய இறைவன் மூஸாவை அழைத்து "நீங்கள் அநியாயக்கார (ஃபிர்அவ்னுடைய) மக்களிடம் செல்லுங்கள்" எனக் கூறியதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துஷ்ஷுஃரா
القرآن الكريم:الشعراء
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Asy-Syu'ara'
ஸூரா:26
வசனம்:227
Total Words:1279
Total Characters:5540
Number of Rukūʿs:11
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:47
Starting from verse:2932