Skip to main content

هَلْ أُنَبِّئُكُمْ
உங்களுக்கு நான் அறிவிக்கவா?
عَلَىٰ
மீது
مَن
யார்
تَنَزَّلُ
இறங்குகிறார்கள்
ٱلشَّيَٰطِينُ
ஷைத்தான்கள்

Hal unabbi'ukum 'alaa man tanazzalush Shayaateen

(நம்பிக்கையாளர்களே!) ஷைத்தான்கள் யார் மீது இறங்குகின்றனர் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கவா?

Tafseer

تَنَزَّلُ
இறங்குகின்றனர்
عَلَىٰ كُلِّ
எல்லோர் மீதும்
أَفَّاكٍ
பெரும் பொய்யர்கள்
أَثِيمٍ
பெரும் பாவிகள்

Tanazzalu 'alaa kulli affaakin aseem

பொய் சொல்லும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர்.

Tafseer

يُلْقُونَ
கூறுகின்றனர்
ٱلسَّمْعَ
கேட்டதை
وَأَكْثَرُهُمْ
அவர்களில் அதிகமானவர்கள்
كَٰذِبُونَ
பொய்யர்கள்

Yulqoonas sam'a wa aksaruhum aaziboon

தாங்கள் கேள்விப்பட்டதை எல்லாம் அவர்களுக்குக் கூறுகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் (பெரும்) பொய்யர்களே!

Tafseer

وَٱلشُّعَرَآءُ
கவிஞர்கள்
يَتَّبِعُهُمُ
அவர்களை பின்பற்றுவார்கள்
ٱلْغَاوُۥنَ
வழிகேடர்கள்தான்

Washshu 'araaa'u yattabi 'uhumul ghaawoon

கவிஞர்களை வழிகெட்டவர்கள்தாம் பின்பற்றுகின்றனர்.

Tafseer

أَلَمْ تَرَ
நீர் பார்க்கவில்லையா?
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
فِى كُلِّ
ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும்
يَهِيمُونَ
அலைகின்றனர்

Alam tara annahum fee kulli waadiny yaheemoon

நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு திடலிலும் தட்டழிந்து திரிகிறார்கள் என்பதை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா?

Tafseer

وَأَنَّهُمْ
இன்னும் , நிச்சயமாக அவர்கள்
يَقُولُونَ
கூறுகின்றனர்
مَا لَا
தாங்கள் செய்யாததை

Wa annahum yaqooloona ma laa yaf'aloon

நிச்சயமாக அவர்கள் செய்யாத காரியங்களை(ச் செய்ததாக)க் கூறுகிறார்கள்.

Tafseer

إِلَّا
தவிர
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்கள்
وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை செய்தனர்
وَذَكَرُوا۟
நினைவு கூர்ந்தனர்
ٱللَّهَ
அல்லாஹ்வை
كَثِيرًا
அதிகம்
وَٱنتَصَرُوا۟
இன்னும் பழிவாங்கினார்கள்
مِنۢ بَعْدِ
தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட பின்னர்
وَسَيَعْلَمُ
விரைவில் அறிவார்கள்
ٱلَّذِينَ ظَلَمُوٓا۟
அநியாயம் செய்தவர்கள்/எந்த
مُنقَلَبٍ
திரும்பும் இடத்திற்கு
يَنقَلِبُونَ
திரும்புவார்கள்

Illal lazeena aamanoo w a'amilus saalihaati wa zakarul laaha kaseeranw wantasaroo mim ba'di maa zulimoo; wa saya'lamul lazeena zalamooo aiya munqalbiny yanqaliboon

(ஆயினும்,) அவர்களில் எவர் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, (தங்கள் கவிதைகளில்) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்து (பிறர் நிந்தனையால்) அநியாயத்திற்கு உள்ளானதன் பின்னர், பழி வாங்கினாரோ அவரைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தாம். பிறரை நிந்தனை செய்து துன்புறுத்திய இந்த) அநியாயக்காரர்கள் தாங்கள் எங்கு திரும்பச் செல்ல வேண்டுமென்பதை அதிசீக்கிரத்தில் அறிந்துகொள்வார்கள்.

Tafseer