Sa ala saaa'ilum bi'azaa binw-waaqi'
(நபியே! நிராகரிப்பவர்களுக்குச்) சம்பவிக்கக்கூடிய வேதனையைப் பற்றி ஒருவன் (உங்களிடம் அது) எப்பொழுது வருமென(ப் பரிகாசமாக)க் கேட்கின்றான்.
Lilkaafireen laisa lahoo daafi'
நிராகரிப்பவர்களுக்கு (அது சம்பவிக்கும் சமயத்தில்) அதனைத் தடுத்துவிடக்கூடியவன் ஒருவனுமில்லை.
Minal laahi zil ma'aarij
உயர்ப்பாதைகளையுடைய அல்லாஹ்வினால் (அது சம்பவிக்கும்).
Ta'rujul malaaa'ikatu war Roohu ilaihi fee yawmin kaana miqdaaruhoo khamseena alfa sanah
அந்நாளில் மலக்குகளும், ஜிப்ரயீலும் அவனிடம் போய்ச் சேருவார்கள். (அந்நாள்) ஐம்பதினாயிரம் வருடங்களுக்குச் சமமாக இருக்கும்.
Fasbir ssabran jameelaa
(நபியே!) நீங்கள் நேர்த்தியான சாந்தத்தோடு பொறுத்திருங்கள்.
Inaahum yarawnahoo ba'eedaa
(எனினும்,) நிச்சயமாக அவர்கள் அதனை வெகு தூரமாக எண்ணுகின்றனர்.
Wa naraahu qareebaa
நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கின்றோம்.
Yawma takoonus samaaa'u kalmuhl
அந்நாளில் வானம் பழுக்கக் காய்ந்த செம்பைப்போல் ஆகிவிடும்.
Wa takoonul jibaalu kal'ihn
மலைகள் பஞ்சைப் போல் பறந்துவிடும்.
Wa laa yas'alu hameemun hameemaa
ஒரு நண்பன் மற்றொரு நண்பனை(ப் பார்த்தபோதிலும்) அவனுடைய சுகத்தை விசாரிக்கமாட்டான்.
القرآن الكريم: | المعارج |
---|---|
ஸஜ்தா (سجدة): | - |
ஸூரா (latin): | Al-Ma'arij |
ஸூரா: | 70 |
வசனம்: | 44 |
Total Words: | 224 |
Total Characters: | 920 |
Number of Rukūʿs: | 2 |
Classification (Revelation Location): | மக்கீ |
Revelation Order: | 79 |
Starting from verse: | 5375 |