Tanzeelul Kitaabi 'laaraiba feehi mir rabbil 'aalameen
(நபியே! உங்கள்மீது) அருளப்பட்ட இவ்வேதம் உலகத்தாரின் இறைவனிடமிருந்தே வந்ததென்பதில் யாதொரு சந்தேகமுமில்லை.
Am yaqooloonaf taraahu bal huwal haqqu mir rabbika litunzira qawma maaa ataahum min nazeerim min qablika la'allahum yahtadoon
(நமது நபி) "இதனை(த் தாமாகவே) கற்பனை செய்து கொண்டார்" என்று (உங்களைப் பற்றி) அவர்கள் கூறுகின்றனரா? அவ்வாறன்று. இது உங்களது இறைவனால் உங்களுக்கு அருளப்பட்ட உண்மையான வேதமாகும். உங்களுக்கு முன்னர் இதுவரையில் யாதொரு தூதருமே வராதிருந்த (இந்த அரபி) மக்களுக்கு நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவே (இவ்வேதம் அருளப்பட்டுள்ளது. இதனைப் பின்பற்றி) அவர்கள் நேரான வழியில் செல்வார்களாக!
Allaahul lazee khalaqas samaawaati wal arda wa maa bainahumaa fee sittati ayyaam;Thummas tawaa 'alal 'arsh; maa lakum min doonihee minw-wwaliyyinw-wala shafee'; afala tatazakkaroon
அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும், இவைகளுக்கு மத்தியில் உள்ளவைகளையும் ஆறே நாள்களில் படைத்து அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். (உங்களை) பாதுகாப்பவனோ அல்லது (உங்களுக்குப்) பரிந்து பேசுபவனோ அவனைத் தவிர (வேறொருவரும்) உங்களுக்கு இல்லை. (இதனை அறிந்து) நீங்கள் நல்லுணர்ச்சி பெறவேண்டாமா?
Yudabbirul amra minas samaaa'i ilal ardi Thumma ya'ruju ilai Thumma ya'ruju ilaihi fee yawmin kaana miqdaaruhoooo alfa sanatim mimmaa ta'uddoon
வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள எல்லா காரியங்களையும் அவனே ஒழுங்கு படுத்துகின்றான். (ஒவ்வொன்றின் முடிவும்) ஒரு நாளன்று அவனிடமே சென்றுவிடும். அந்த (ஒரு) நாள் நீங்கள் எண்ணுகின்ற உங்கள் கணக்கின்படி ஆயிரம் ஆண்டுகளுக்குச் சமமாகும்.
Zaalika 'aalimul ghaybi wa shahaadatil 'azeezur raheem
அவனே (வானம் பூமியிலுள்ள) மறைவானதையும் வெளிப்படையானதையும் (உள்ளது உள்ளபடி) நன்கறிந்தவன். அன்றி, (அனைத்தையும்) மிகைத்தவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
Allazee ahsana kulla shai in khalaqa; wa bada a khalqal insaani min teen
அவனே ஒவ்வொரு பொருளையும் (படைத்து) அவற்றின் கோலத்தையும் மிக்க அழகாக அமைத்தான். ஆரம்பத்தில் மனிதனை களிமண்ணைக் கொண்டே படைத்தான்.
Thumma ja'ala naslahoo min sulaalatim mim maaa'immaheen
பின்னர், ஓர் அற்பத் துளியாகிய (இந்திரியச்) சத்திலிருந்து அவனுடைய சந்ததியை படைக்கின்றான்.
Thumma sawwaahu wa nafakha feehi mir roohihih; wa ja'ala lakumus sam'a wal-absaara wal-af'idah; taqaleelam maa tashkuroon
பின்னர், (படைப்பாகிய) அதனைச் செப்பனிட்டுத் தன்னுடைய "ரூஹை" அதில் புகுத்தி (உங்களை உற்பத்தி செய்கிறான்.) உங்களுக்குக் காதுகள், கண்கள், உள்ளங்கள் ஆகியவற்றையும் அவனே அமைக்கிறான். இவ்வாறு இருந்தும் உங்களில் நன்றி செலுத்துபவர்கள் வெகு சிலரே!
Wa qaalooo 'a-izaa dalalnaa fil ardi 'a-innaa lafee khalqin jadeed; bal hum biliqaaa'i rabbihim kaafirroon
"(நாங்கள் இறந்து) பூமியில் அழிந்து போனதன் பின்னர் மெய்யாகவே நாங்கள் புதிய படைப்பாக அமைக்கப்பட்டு விடுவோமா?" என்று அவர்கள் கூறுகின்றனர். (இதனால்) அவர்கள் தங்களுடைய இறைவனைச் சந்திப்பதையும் நிராகரிக்கின்றனர்.
القرآن الكريم: | السجدة |
---|---|
ஸஜ்தா (سجدة): | 15 |
ஸூரா (latin): | As-Sajdah |
ஸூரா: | 32 |
வசனம்: | 30 |
Total Words: | 380 |
Total Characters: | 1580 |
Number of Rukūʿs: | 3 |
Classification (Revelation Location): | மக்கீ |
Revelation Order: | 75 |
Starting from verse: | 3503 |