Skip to main content

شَاكِرًا
நன்றிசெலுத்துபவராக
لِّأَنْعُمِهِۚ
அவனுடைய அருட்கொடைகளுக்கு
ٱجْتَبَىٰهُ
தேர்ந்தெடுத்தான்/அவரை
وَهَدَىٰهُ
இன்னும் நேர்வழி செலுத்தினான்/அவரை
إِلَىٰ صِرَٰطٍ
பாதையில்
مُّسْتَقِيمٍ
நேரான

Shaakiral li an'umih; ijtabaahu wa hadaahu ilaa Siraatim Muustaqeem

அன்றி, இறைவனின் அருட்கொடைகளுக்கு (எந்நேரமும்) நன்றி செலுத்துபவராகவும் இருந்தார். ஆகவே, (இறைவனும்) அவரைத் தேர்ந்தெடுத்து நேரான வழியில் செலுத்தினான்.

Tafseer

وَءَاتَيْنَٰهُ
இன்னும் அவருக்குக் கொடுத்தோம்
فِى ٱلدُّنْيَا
இவ்வுலகில்
حَسَنَةًۖ
உயர்வை
وَإِنَّهُۥ
இன்னும் நிச்சயமாக அவர்
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
لَمِنَ ٱلصَّٰلِحِينَ
நல்லவர்களில்

Wa aatainaahu fid dunyaa hasanah; wa innahoo fil Aakhirati laminas saaliheen

(ஆகவே, அவருடைய இறைவனாகிய) நாம் இம்மையிலும் நன்மையையே அவருக்குக் கொடுத்தோம். மறுமையிலும் நிச்சயமாக அவர் நல்லடியார்களில் (ஒருவராக) இருக்கச் செய்வோம்.

Tafseer

ثُمَّ
பிறகு
أَوْحَيْنَآ
வஹீ அறிவித்தோம்
إِلَيْكَ
உமக்கு
أَنِ ٱتَّبِعْ
என்று/பின்பற்று
مِلَّةَ
மார்க்கத்தை
إِبْرَٰهِيمَ
இப்றாஹீமின்
حَنِيفًاۖ
கொள்கை உறுதியுடையவராக
وَمَا كَانَ
(அவர்) இருக்கவில்லை
مِنَ ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களில்

Summma awhainaa ilaika anit tabi' Millata Ibraaheema haneefaa; wa maa kaana minal mushrikeen

ஆகவே, (நபியே!) நீங்கள் மிக்க மேன்மையான (அந்த) இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் பின்பற்றும்படி உங்களுக்கு வஹீ அறிவித்தோம். அவர் இணைவைத்து வணங்குபவர்களில் (ஒருவராக) இருக்கவேயில்லை.

Tafseer

إِنَّمَا جُعِلَ
ஆக்கப்பட்டதெல்லாம்
ٱلسَّبْتُ
சனிக்கிழமை
عَلَى
மீது
ٱلَّذِينَ
எவர்கள்
ٱخْتَلَفُوا۟
முரண்பட்டனர் (தர்க்கித்தனர்)
فِيهِۚ
அதில்
وَإِنَّ
நிச்சயமாக
رَبَّكَ
உம் இறைவன்
لَيَحْكُمُ
திட்டமாக தீர்ப்பளிப்பான்
بَيْنَهُمْ
அவர்களுக்கிடையில்
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
فِيمَا
எதில்
كَانُوا۟
இருந்தனர்
فِيهِ
அதில்
يَخْتَلِفُونَ
முரண்படுவார்கள்

Innnamaa ju'ilas Sabtu 'alal lazeenakhtalafoo feeh; wa inna Rabbaka la yahkumu bainahum Yawmal Qiyaamati feemaa kaanoo feehi yakhtalifoon

சனிக்கிழமையை(க் கௌரவிக்கும்படி) செய்யப் பட்டதெல்லாம், அதைப் பற்றி (யூதர்களில்) தர்க்கித்துக் கொண்டிருந்தவர்களுக்குத்தான். நிச்சயமாக உங்களது இறைவன் மறுமை நாளில் அவர்களுக்கிடையில், அவர்கள் (இம்மையில்) தர்க்கித்துக் கொண்டிருந்தவைகளைப் பற்றித் தீர்ப்பளிப்பான்.

Tafseer

ٱدْعُ
அழைப்பீராக
إِلَىٰ سَبِيلِ
பக்கம்/பாதை
رَبِّكَ
உம் இறைவனுடைய
بِٱلْحِكْمَةِ
ஞானத்தைக்கொண்டு
وَٱلْمَوْعِظَةِ
இன்னும் உபதேசம்
ٱلْحَسَنَةِۖ
அழகியது
وَجَٰدِلْهُم
இன்னும் தர்க்கிப்பீராக/அவர்களிடம்
بِٱلَّتِى
எதைக் கொண்டு
هِىَ أَحْسَنُۚ
அது/மிக அழகியது
إِنَّ
நிச்சயமாக
رَبَّكَ هُوَ
உம் இறைவன்தான்
أَعْلَمُ
மிக அறிந்தவன்
بِمَن ضَلَّ
எவரை/வழிதவறினார்
عَن سَبِيلِهِۦۖ
அவனுடைய பாதையிலிருந்து
وَهُوَ
இன்னும் அவன்
أَعْلَمُ
மிக அறிந்தவன்
بِٱلْمُهْتَدِينَ
நேர்வழி செல்வோரை

Ud'u ilaa sabeeli Rabbika bilhikmati walmaw 'izatil hasanati wa jaadilhum billatee hiya ahsan; inna Rabbaka huwa a'almu biman dalla 'an sabeelihee wa Huwa a'lamu bilmuhtadeen

(நபியே!) நீங்கள் (மனிதர்களை) மதிநுட்பத்துடனும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உங்கள் இறைவனின் வழியின் பக்கம் அழைப்பீராக! அன்றி, அவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) நீங்கள் (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கம் செய்யுங்கள். உங்கள் இறைவன் வழியிலிருந்து தவறியவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அவன்தான் நன்கறிவான். நேரான வழியிலிருப்பவர்கள் யார் என்பதையும் அவன்தான் நன்கறிவான்.

Tafseer

وَإِنْ عَاقَبْتُمْ
நீங்கள் தண்டித்தால்
فَعَاقِبُوا۟
தண்டியுங்கள்
بِمِثْلِ
போன்று
مَا عُوقِبْتُم
நீங்கள் தண்டிக்கப்பட்டது
بِهِۦۖ
அதில்
وَلَئِن صَبَرْتُمْ
திட்டமாக நீங்கள் பொறுத்தால்
لَهُوَ خَيْرٌ
அதுதான்/மிக நல்லது
لِّلصَّٰبِرِينَ
பொறுமையாளர் களுக்கு

Wa in 'aaqabtum fa'aaqiboo bimisli maa 'ooqibtum bihee wa la'in sabartum lahuwa khairul lissaabireen

(நம்பிக்கையாளர்களே! உங்களைத் துன்புறுத்திய எவரையும்) நீங்கள் பதிலுக்குப் பதிலாய்த் துன்புறுத்தக் கருதினால் உங்களை அவர்கள் துன்புறுத்திய அளவே அவர்களை நீங்கள் துன்புறுத்துங்கள். (அதற்கு அதிகமாக செய்யக்கூடாது. தவிர, உங்களைத் துன்புறுத்தியதை) நீங்கள் பொறுத்துச் சகித்துக்கொண்டாலோ அது சகித்துக் கொள்பவர்களுக்கு மிக்க நன்றே!

Tafseer

وَٱصْبِرْ
பொறுப்பீராக
وَمَا
இல்லை
صَبْرُكَ
உம் பொறுமை
إِلَّا
தவிர
بِٱللَّهِۚ
அல்லாஹ்வைக் கொண்டே
وَلَا تَحْزَنْ
இன்னும் கவலைப்படாதீர்
عَلَيْهِمْ
அவர்கள் மீது
وَلَا تَكُ
இன்னும் ஆகாதீர்
فِى ضَيْقٍ
நெருக்கடியில்
مِّمَّا
எதைப் பற்றி
يَمْكُرُونَ
சூழ்ச்சி செய்வார்கள்

Wasbir wa maa sabruka illaa billaah; wa laa tahzan 'alaihim wa laa taku fee daiqim mimmaa yamkuroon

ஆகவே, (நபியே!) நீங்கள் சகித்துக்கொள்ளுங்கள். எனினும், அல்லாஹ்வின் உதவியின்றி சகித்துக்கொள்ள உங்களால் முடியாது. அவர்களுக்காக நீங்கள் (எதனைப் பற்றியும்) கவலைப்படாதீர்கள். அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளைப் பற்றி நீங்கள் நெருக்கடியிலும் ஆகாதீர்கள்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
مَعَ
உடன்
ٱلَّذِينَ
எவர்கள்
ٱتَّقَوا۟
அஞ்சினார்கள்
وَّٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
هُم
அவர்கள்
مُّحْسِنُونَ
நல்லறம் புரிபவர்கள்

Innal laaha ma'al lazeenat taqaw wal lazeena hum muhsinoon

நிச்சயமாக எவர்கள் மெய்யாகவே இறை அச்சமுடையவர்களாக இருக்கின்றார்களோ அவர்களுடனும், எவர்கள் நன்மை செய்கின்றார்களோ அவர்களுடனும்தான் அல்லாஹ் இருக்கின்றான்.

Tafseer