Skip to main content

وَيَتَجَنَّبُهَا
இன்னும் அதைத் தவிர்த்துவிடுவான்
ٱلْأَشْقَى
பெரும் துர்ப்பாக்கியவான்

Wa yatajannabuhal ashqaa

துர்ப்பாக்கியமுடையவனோ, இதிலிருந்து விலகிக்கொள்வான்.

Tafseer

ٱلَّذِى
எவன்
يَصْلَى
பற்றி எரிவான்
ٱلنَّارَ
நெருப்பில்
ٱلْكُبْرَىٰ
மாபெரும்

Allazee yaslan Naaral kubraa

(எனினும்,) அவன் (நரகத்தின்) பெரிய நெருப்பை அடைவான்.

Tafseer

ثُمَّ
பிறகு
لَا يَمُوتُ
மரணிக்கவும் மாட்டான்
فِيهَا
அதில்
وَلَا يَحْيَىٰ
இன்னும் வாழவும் மாட்டான்

Summa laa yamootu feehaa wa laa yahyaa

பின்னர், அதில் அவன் மரணிக்கவுமாட்டான்; (சுகமாக) வாழவும் மாட்டான்.

Tafseer

قَدْ
திட்டமாக
أَفْلَحَ
வெற்றி பெற்றார்
مَن
எவர்
تَزَكَّىٰ
பரிசுத்தமடைந்தார்

Qad aflaha man tazakkaa

எவர் (பாவங்களை விட்டு விலகிப்) பரிசுத்தவானாக ஆனாரோ அவர், நிச்சயமாக வெற்றி பெற்றார்.

Tafseer

وَذَكَرَ
இன்னும் நினைவு கூர்ந்தார்
ٱسْمَ
பெயரை
رَبِّهِۦ
தன் இறைவனின்
فَصَلَّىٰ
இன்னும் தொழுதார்

Wa zakaras ma Rabbihee fasallaa

அவன் தன் இறைவனின் திருப்பெயரை நினைவு செய்து கொண்டும், தொழுது கொண்டுமிருப்பார்.

Tafseer

بَلْ
மாறாக
تُؤْثِرُونَ
தேர்ந்தெடுக்கிறீர்கள்
ٱلْحَيَوٰةَ
வாழ்வை
ٱلدُّنْيَا
உலக(ம்)

Bal tu'siroonal hayaatad dunyaa

எனினும், நீங்களோ (மறுமையை விட்டுவிட்டு) இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றீர்கள்.

Tafseer

وَٱلْءَاخِرَةُ
மறுமையோ
خَيْرٌ
மிகச் சிறந்தது
وَأَبْقَىٰٓ
இன்னும் என்றும் நிலையானது

Wal Aakhiratu khairunw wa abqaa

மறுமையின் வாழ்க்கைத்தான் மிக்க மேலானதும் நிலையானதுமாகும்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
هَٰذَا
இது
لَفِى ٱلصُّحُفِ
வேதங்களிலும்
ٱلْأُولَىٰ
முந்திய

Inna haazaa lafis suhu fil oolaa

நிச்சயமாக இது முன்னுள்ள வேதங்களிலும்,

Tafseer

صُحُفِ
வேதங்களாகிய
إِبْرَٰهِيمَ
இப்றாஹீமுடைய
وَمُوسَىٰ
இன்னும் மூஸாவுடைய

Suhufi Ibraaheema wa Moosaa

இப்ராஹீம், மூஸாவுடைய வேதங்களிலும் இருக்கின்றது.

Tafseer