Skip to main content
bismillah

وَٱلْعَٰدِيَٰتِ
அதிவேகமாக ஓடும் குதிரைகள் மீது சத்தியமாக
ضَبْحًا
மூச்சிரைக்க

Wal'aadi yaati dabha

மூச்சுத் திணர அதிவேகமாகச் செல்லும் குதிரைகள் மீது சத்தியமாக!

Tafseer

فَٱلْمُورِيَٰتِ
இன்னும் (தீ) மூட்டுகின்ற குதிரைகள்
قَدْحًا
தீப்பொறிகளை

Fal moori yaati qadha

(அவை செல்லும் வேகத்தில் குளம்புகளிலிருந்து) நெருப்பைக் கக்கும்.

Tafseer

فَٱلْمُغِيرَٰتِ
இன்னும் பாய்கின்ற குதிரைகள்
صُبْحًا
அதிகாலையில்

Fal mugheeraati subha

அன்றி, அவைகள் அதிகாலையில் (எதிரிகள் மீதும்) பாய்ந்து செல்லும்.

Tafseer

فَأَثَرْنَ
இன்னும் கிளப்பின
بِهِۦ
அதில்
نَقْعًا
புழுதியை

Fa atharna bihee naq'a

(அவ்வாறு வேகமாகச் செல்லும்போது, மேகத்தைப் போல்) புழுதியைக் கிளப்பும்.

Tafseer

فَوَسَطْنَ
இன்னும் நடுவில் நுழைந்தன
بِهِۦ
அதில்
جَمْعًا
கூட்டத்திற்கு

Fawa satna bihee jam'a

பின்னர், (எதிரிகளின் படையின்) மத்தியில் நுழைந்துவிடும்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلْإِنسَٰنَ
மனிதன்
لِرَبِّهِۦ
தன் இறைவனுக்கு
لَكَنُودٌ
நன்றி கெட்டவன்

Innal-insana lirabbihee lakanood

(இத்தகைய குதிரைகள் மீது சத்தியமாக!) நிச்சயமாக மனிதன் தன் இறைவனுக்கு நன்றிகெட்டவனாக இருக்கின்றான்.

Tafseer

وَإِنَّهُۥ
இன்னும் நிச்சயமாக அவன்
عَلَىٰ ذَٰلِكَ
அதற்கு
لَشَهِيدٌ
சாட்சி

Wa innahu 'alaa zaalika la shaheed

நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَإِنَّهُۥ
இன்னும் நிச்சயமாக அவன்
لِحُبِّ
நேசிப்பதில்
ٱلْخَيْرِ
செல்வத்தை
لَشَدِيدٌ
உறுதியாக கடினமானவன்

Wa innahu lihubbil khairi la shadeed

நிச்சயமாக அவன் பொருள்களை மிக்க கடினமாகவே நேசிக்கிறான்.

Tafseer

أَفَلَا يَعْلَمُ
அவன் அறியவேண்டாமா?
إِذَا بُعْثِرَ
எழுப்பப்படும்போது
مَا فِى
புதை குழிகளில் உள்ளவர்கள்

Afala ya'lamu iza b'uthira ma filquboor

அவனைக் கப்ரிலிருந்து எழுப்பப்படும் சமயத்தில், அவனுடைய உள்ளத்தில் உள்ளவைகளெல்லாம் அறியப்பட்டுவிடும் என்பதை அவன் அறிந்துகொள்ளவில்லையா?

Tafseer

وَحُصِّلَ
இன்னும் பிரித்தறியப்படும்
مَا فِى
நெஞ்சங்களில் உள்ளவை

Wa hussila maa fis sudoor

அவனைக் கப்ரிலிருந்து எழுப்பப்படும் சமயத்தில், அவனுடைய உள்ளத்தில் உள்ளவைகளெல்லாம் அறியப்பட்டுவிடும் என்பதை அவன் அறிந்துகொள்ளவில்லையா?

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் ஆதியாத்தி
القرآن الكريم:العاديات
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-'Adiyat
ஸூரா:100
வசனம்:11
Total Words:40
Total Characters:163
Number of Rukūʿs:1
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:14
Starting from verse:6146