Bal kazzaboo bis Saa'ati wa a'tadnaa liman kazzaba bis Saa'ati sa'eeraa
உண்மையில் இவர்கள் விசாரணைக் காலத்தையே பொய்யாக்குகின்றனர். எவர்கள் விசாரணைக் காலத்தைப் பொய்யாக்குகிறார்களோ அவர்களுக்கு கடுமையாக பற்றி எரியும் நரகத்தைத்தான் நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம்.
Izaa ra'at hum mim ma kaanim ba'eedin sami'oo lahaa taghaiyuzanw wa zafeeraa
அது இவர்களைக் கண்ட மாத்திரத்தில் சப்தமிட்டு ஆர்ப்பரிப்பதை இவர்கள் வெகு தூரத்திலிருந்தே செவி மடுத்துக் கொள்வார்கள்.
Wa izaaa ulqoo minhaa makaanan daiyiqam muqar raneena da'aw hunaalika subooraa
அவர்க(ளின் கை கால்க)ளைக் கட்டி, அதில் மிக்க நெருக்கடியான ஓரிடத்தில் எறியப்பட்டால் (கஷ்டத்தைத் தாங்க முடியாமல் மரணத்தைத் தரக்கூடிய) அழிவையே அவர்கள் கேட்பார்கள்.
Laa tad'ul yawma subooranw waahidanw wad'oo subooran kaseeraa
(ஆகவே, அந்நேரத்தில் அவர்களை நோக்கி,) "இன்றைய தினம் நீங்கள் ஓர் அழிவை மாத்திரம் அழைக்காதீர்கள். பல அழிவுகளை அழைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறப்படும்.
Qul azaalika khairun am Jannatul khuldil latee wu'idal muttaqoon; kaanat lahum jazaaa'anw wa maseeraa
(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கேளுங்கள்: "அந்த நரகம் மேலா? அல்லது பரிசுத்தவான்களுக்கு வாக்களிக்கப்பட்ட நிலையான சுவனபதி மேலா? அது அவர்களுக்கு (நற்) கூலியாகவும், அவர்கள் சேருமிடமாகவும் இருக்கின்றது.
Lahum feehaa maa yashaaa'oona khaalideen; kaana 'alaa Rabbika wa'dam mas'oolaa
"அதில் அவர்கள் விரும்பியதெல்லாம் அவர்களுக்குக் கிடைக்கும். (அதில்) அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்." (நபியே!) இது உங்களது இறைவன் மீது (அவனால்) வாக்களிக் கப்பட்ட கடமையாக இருக்கிறது.
Wa Yawma yahshuruhum wa maa ya'budoona min doonil lahi fa yaqoolu 'a-antum adlaltum 'ibaadee haaa'ulaaa'i am hum dallus sabeel
(இணைவைத்து வணங்கிய) அவர்களையும், அல்லாஹ்வை யன்றி அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களையும் (விசாரணைக்காக) ஒன்று சேர்க்கும் நாளில் (இறைவன்) "என்னுடைய இவ்வடியார்களை நீங்கள் வழி கெடுத்தீர்களா? அல்லது அவர்கள் தாமாகவே இத்தவறான வழியில் சென்று விட்டனரா" என்று கேட்பான்.
Qaaloo Subhaanaka maa kaana yambaghee lanaaa an nattakhiza min doonika min awliyaaa'a wa laakim matta'tahum wa aabaaa'ahum hattaa nasuz zikra wa kaanoo qawmam booraa
அதற்கு அவை (இறைவனை நோக்கி) "நீ மிகப் பரிசுத்தமானவன். உன்னை அன்றி (மற்றெவரையும்) நாங்கள் எங்களுக்கு காப்பவனாக எடுத்துக்கொள்வது எங்களுக்குத் தகுதியன்று. எனினும், நீதான் அவர்களுக்கும் அவர்களுடைய மூதாதைகளுக்கும் சுகபோகத்தைக் கொடுத்தாய். அதனால் அவர்கள் (உன்னை) நினைப்பதையே மறந்து (தாங்களாகவே பாவம் செய்து) அழிந்துபோகும் மக்களாகி விட்டார்கள்" என்று கூறும்.
Faqad kazzabookum bimaa taqooloona famaa tastatee'oona sarfanw wa laa nasraa; wa mai yazlim minkum nuziqhu 'azaaban kabeeraa
(ஆகவே, அந்த நிராகரிப்பவர்களை நோக்கி "உங்களை வழி கெடுத்தவை இவைதான் என்று) நீங்கள் கூறியதை இவைகளே பொய்யாக்கி விட்டன. ஆதலால், (நம்முடைய வேதனையைத்) தட்டிக் கழிக்கவும் உங்களால் முடியாது. (இவைகளின்) உதவியைப் பெற்றுக் கொள்ளவும் உங்களால் முடியாது.. ஆகவே, உங்களில் எவன் அநியாயம் செய்து கொண்டிருந்தானோ அவன் பெரும் வேதனையைச் சுவைக்கும்படி நிச்சயமாக நாம் செய்வோம்" (என்று கூறுவோம்).
Wa maaa arsalnaa qablaka minal mursaleena illaaa innahum la yaakuloonat ta'aama wa yamshoona fil aswaaq; wa ja'alnaa ba'dakum liba'din fitnatan atasbiroon; wa kaana Rabbuka Baseera
(நபியே!) உங்களுக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த நம்முடைய தூதர்களெல்லாம் நிச்சயமாக (உங்களைப் போல்) உணவு உண்பவர்களாகவும், கடைகளுக்குச் செல்பவர்களாகவும் இருந்தார்கள். எனினும், உங்களில் சிலரை சிலருக்குச் சோதனையாக ஆக்கி வைத்தோம். ஆகவே, (நம்பிக்கையாளர்களே! இந்நிராகரிப்பவர்கள் துன்புறுத்துவதை) நீங்களும் சகித்துக் கொண்டிருங்கள். (நபியே!) உங்களது இறைவன் (அனைத்தையும்) உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.