Skip to main content
bismillah

وَٱلصَّٰٓفَّٰتِ
அணிவகுப்பவர்கள் மீது சத்தியமாக!
صَفًّا
அணி அணியாக

Wassaaaffaati saffaa

அணி அணியாக நிற்பவர்கள் மீது சத்தியமாக!

Tafseer

فَٱلزَّٰجِرَٰتِ
விரட்டுகின்றவர்கள் மீது சத்தியமாக!
زَجْرًا
(கடுமையாக) விரட்டுதல்

Fazzaajiraati zajraa

(தீமைகளைத்) தீவிரமாக விரட்டுபவர்கள் மீது சத்தியமாக!

Tafseer

فَٱلتَّٰلِيَٰتِ
ஓதுபவர்கள் மீது சத்தியமாக!
ذِكْرًا
வேதத்தை

Fattaaliyaati Zikra

(இறைவனின் வசனங்களை) ஓதுபவர்கள் மீது சத்தியமாக!

Tafseer

إِنَّ
நிச்சயமாக
إِلَٰهَكُمْ
உங்கள் கடவுள்
لَوَٰحِدٌ
ஒருவன்தான்

Inna Illaahakum la Waahid

நிச்சயமாக உங்கள் வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஒருவன்தான்.

Tafseer

رَّبُّ
இறைவன்
ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ
வானங்கள்/இன்னும் பூமி
وَمَا بَيْنَهُمَا
இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின்
وَرَبُّ
இன்னும் நிர்வகிப்பவன்
ٱلْمَشَٰرِقِ
அவன் சூரியன் உதிக்கும் இடங்களையும்

Rabbus samaawaati wal ardi wa maa bainahumaa wa Rabbul mashaariq

அவனே வானங்களையும், பூமியையும், அவைகளுக்கு மத்தியிலுள்ளவைகளையும் படைத்து வளர்ப்பவன். கீழ் திசை(கள் மேல் திசை)களின் இறைவனும் அவனே.

Tafseer

إِنَّا
நிச்சயமாக நாம்
زَيَّنَّا
அலங்கரித்துள்ளோம்
ٱلسَّمَآءَ
வானத்தை
ٱلدُّنْيَا
சமீபமான(து)
بِزِينَةٍ
அலங்காரத்தால்
ٱلْكَوَاكِبِ
நட்சத்திரங்களின்

Innaa zaiyannas samaaa 'ad dunyaa bizeenatinil kawaakib

நிச்சயமாக (உங்கள் இறைவனாகிய) நாம், (பூமிக்குச்) சமீபமாக உள்ள வானத்தைப் பிரகாசிக்கும் நட்சத்திரங்களைக் கொண்டு அழகுபடுத்தி வைத்தோம்.

Tafseer

وَحِفْظًا
பாதுகாப்பதற்காகவும்
مِّن كُلِّ
எல்லா ஷைத்தான்களிடமிருந்து
مَّارِدٍ
அடங்காத

Wa hifzam min kulli Shaitaanim maarid

மிக்க விஷமிகளான ஷைத்தான்களுக்கு ஒரு தடையாகவும் (ஆக்கி வைத்தோம்).

Tafseer

لَّا يَسَّمَّعُونَ
அவர்களால் செவியுற முடியாது
إِلَى ٱلْمَلَإِ
கூட்டத்தினரின் பக்கம்
ٱلْأَعْلَىٰ
மிக உயர்ந்த
وَيُقْذَفُونَ
இன்னும் எறியப்படுவார்கள்
مِن
இருந்தும்
كُلِّ
எல்லா
جَانِبٍ
பக்கங்களில்

Laa yassamma 'oona ilal mala il a'alaa wa yuqzafoona min kulli jaanib

மேல் உலகத்தில் உள்ளவர்களின் விஷயங்களை (ஷைத்தான்கள்) செவியுற முடியாது. (ஏனென்றால், அதனை நெருங்கும் ஒவ்வொருவரும்) பல பாகங்களிலிருந்தும் (கொள்ளி களால்) எறியப்பட்டு விரட்டப்படுகின்றனர்.

Tafseer

دُحُورًاۖ
தடுக்கப்படுவதற்காக
وَلَهُمْ
அவர்களுக்கு
عَذَابٌ
வேதனை
وَاصِبٌ
நிரந்தரமான

Duhooranw wa lahum 'azaabunw waasib

அவர்களுக்கு நிலையான வேதனையுண்டு.

Tafseer

إِلَّا
எனினும்
مَنْ
யார்
خَطِفَ
திருடினான்
ٱلْخَطْفَةَ
திருட்டுத்தனமாக
فَأَتْبَعَهُۥ
அவரை பின்தொடரும்
شِهَابٌ
நெருப்புக் கங்கு
ثَاقِبٌ
எரிக்கின்ற

Illaa man khatifal khatfata fa atba'ahoo shihaabun saaqib

(தப்பித் தவறி யாதொரு வார்த்தையை) இறாய்ஞ்சிச் செல்ல நெருங்கினால், உடனே அவனை(க் கொழுந்துவிட்டெரியும்) பிரகாசமான நெருப்பு பின்தொடர்கிறது.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்
القرآن الكريم:الصافات
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):As-Saffat
ஸூரா:37
வசனம்:182
Total Words:860
Total Characters:3826
Number of Rukūʿs:5
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:56
Starting from verse:3788