Skip to main content

فَحَقَّ
ஆகவே, உறுதியாகிவிட்டது
عَلَيْنَا
நம் மீது
قَوْلُ
வாக்கு
رَبِّنَآۖ
நமது இறைவனுடைய
إِنَّا
நிச்சயமாக நாம்
لَذَآئِقُونَ
சுவைப்பவர்கள்தான்

Fahaqqa 'alainaa qawlu Rabbinaaa innaa lazaaa'iqoon

ஆதலால், எங்கள் இறைவனுடைய வாக்கு எங்களுக்கு உண்மையாகி விட்டது. நிச்சயமாக நாம் அனைவரும் (வேதனையைச்) சுவைக்க வேண்டியவர்களே.

Tafseer

فَأَغْوَيْنَٰكُمْ
ஆக, நாங்கள் உங்களை வழி கெடுத்தோம்
إِنَّا كُنَّا
நிச்சயமாக நாங்கள் இருந்தோம்
غَٰوِينَ
வழி கெட்டவர்களாகவே

Fa aghwainaakum innaa kunnaa ghaaween

நிச்சயமாக நாங்கள் உங்களை வழிகெடுத்தோம். ஏனென்றால், நாங்கள் வழிகெட்டே போயிருந்தோம் என்று கூறுவார்கள்.

Tafseer

فَإِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
يَوْمَئِذٍ
அந்நாளில்
فِى ٱلْعَذَابِ
வேதனையில்
مُشْتَرِكُونَ
கூட்டாகுவார்கள்

Fa innahum Yawma'izin fil'azaabi mushtarikoon

முடிவில் நிச்சயமாக அவர்கள் அனைவரும் அன்றைய தினம் வேதனையில் (சம) பங்காளியாக இருப்பார்கள்.

Tafseer

إِنَّا
நிச்சயமாக நாம்
كَذَٰلِكَ
இப்படித்தான்
نَفْعَلُ
நடந்து கொள்வோம்
بِٱلْمُجْرِمِينَ
குற்றவாளிகளுடன்

Innaa kazaalika naf'alu bil mujrimeen

நிச்சயமாக நாம், குற்றவாளிகளை இவ்வாறே நடத்துவோம்.

Tafseer

إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
كَانُوٓا۟
இருந்தனர்
إِذَا قِيلَ
கூறப்பட்டால்
لَهُمْ
அவர்களுக்கு
لَآ
அறவே இல்லை
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
إِلَّا ٱللَّهُ
அல்லாஹ்வைத் தவிர
يَسْتَكْبِرُونَ
பெருமை அடிப்பவர்களாக

Innahum kaanooo izaa qeela lahum laaa ilaaha illal laahu yastakbiroon

"அல்லாஹ்வைத் தவிர (உங்களுக்கு) வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இல்லை; (அவனையே நீங்கள் வணங்குங்கள்)" என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், நிச்சயமாக அவர்கள் கர்வம் கொண்டு,

Tafseer

وَيَقُولُونَ
கூறுகின்றனர்
أَئِنَّا
?/நிச்சயமாக நாங்கள்
لَتَارِكُوٓا۟
விட்டுவிடுவோம்
ءَالِهَتِنَا
எங்கள் தெய்வங்களை
لِشَاعِرٍ
ஒரு கவிஞருக்காக
مَّجْنُونٍۭ
பைத்தியக்காரரான

Wa yaqooloona a'innaa lataarikooo aalihatinaa lishaa'irim majnoon

"என்னே! நாங்கள் பைத்தியம் பிடித்த ஒரு கவிஞருக்காக எங்களுடைய தெய்வங்களை மெய்யாகவே விட்டு விடுவோமா?" என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

Tafseer

بَلْ جَآءَ
மாறாக அவர் சத்தியத்தைக் கொண்டு வந்தார்
وَصَدَّقَ
இன்னும் உண்மைப்படுத்தினார்
ٱلْمُرْسَلِينَ
தூதர்களை

bal jaaa'a bilhaqqi wa saddaqal mursaleen

"(அவர் பைத்தியக்காரர்) அன்று. அவர் உண்மையையே கொண்டு வந்தார். (தனக்கு முன்னர் வந்த) நபிமார்களையும் அவர் உண்மையாக்கி வைத்தார். (இவற்றை எல்லாம் நீங்கள் பொய்யாக்கி விட்டீர்கள்.)

Tafseer

إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
لَذَآئِقُوا۟
சுவைப்பீர்கள்
ٱلْعَذَابِ
வேதனையை
ٱلْأَلِيمِ
வலிதரும்

Innakum lazaaa'iqul 'azaabil aleem

ஆதலால், நிச்சயமாக நீங்கள் துன்புறுத்தும் வேதனையை அனுபவிக்க வேண்டியதுதான்.

Tafseer

وَمَا تُجْزَوْنَ
நீங்கள் கூலி கொடுக்கப்படமாட்டீர்கள்
إِلَّا
அன்றி
مَا كُنتُمْ
நீங்கள் செய்து வந்ததற்கே

Wa maa tujzawna illaa maa kuntum ta'maloon

நீங்கள் செய்துகொண்டிருந்தவைகளுக்கன்றி உங்களுக்குக் கூலி கொடுக்கப்படவில்லை" (என்றும் கூறப்படும்).

Tafseer

إِلَّا
தவிர
عِبَادَ
அடியார்களை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ٱلْمُخْلَصِينَ
பரிசுத்தமான

Illaa 'ibaadal laahil mukhlaseen

கலப்பற்ற மனத்தூய்மையுடைய அல்லாஹ்வுடைய அடியார்களைத் தவிர.

Tafseer