Skip to main content

إِنَّ
நிச்சயமாக
ٱلْمُتَّقِينَ
இறையச்சமுள்ளவர்கள்
فِى مَقَامٍ
இடத்தில்
أَمِينٍ
பாதுகாப்பான

Innal muttaqeena fee maqaamin ameen

இறை அச்சமுடையவர்களோ, நிச்சயமாக அச்சமற்ற இடத்தில்,

Tafseer

فِى جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
وَعُيُونٍ
இன்னும் ஊற்றுகளில் இருப்பார்கள்

Fee jannaatinw wa 'uyoon

அதுவும் சுவனபதி(யின் சோலை)யிலுள்ள ஊற்றுக்களின் சமீபமாக,

Tafseer

يَلْبَسُونَ
அணிவார்கள்
مِن سُندُسٍ
மென்மையான பட்டு
وَإِسْتَبْرَقٍ
இன்னும் தடிப்பமான பட்டு ஆடைகளை
مُّتَقَٰبِلِينَ
ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக

Yalbasoona min sundusinw wa istbraqim mutaqaabileen

மெல்லியதும் மொத்தமானதும் (ஆக, அவர்கள் விரும்பிய) பட்டாடைகளை அணிந்து, ஒருவரை ஒருவர் முகம் நோக்கி (உட்கார்ந்து உல்லாசமாகப் பேசிக்கொண்டு) இருப்பார்கள்.

Tafseer

كَذَٰلِكَ
இவ்வாறுதான்
وَزَوَّجْنَٰهُم
இன்னும் அவர்களுக்கு நாம் மணமுடித்து வைப்போம்
بِحُورٍ
வெண்மையான கண்ணிகளை
عِينٍ
கண்ணழகிகளான

Kazaalika wa zawwajnaahum bihoorin 'een

இவ்வாறே (சந்தேகமின்றி நடைபெறும்). அன்றி, "ஹூருல் ஈன்" (என்னும் கண்ணழகிகளாகிய கன்னிகை)களையும் நாம் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்போம்.

Tafseer

يَدْعُونَ
கேட்பார்கள்
فِيهَا بِكُلِّ
அதில்/எல்லா
فَٰكِهَةٍ
பழங்களையும்
ءَامِنِينَ
நிம்மதியானவர்களாக

Yad'oona feehaa bikulli faakihatin aamineen

அச்சமற்றவர்களாக (அவர்கள் விரும்பிய) கனிவர்க்கங்கள் அனைத்தையும், அங்கு கேட்டு (வாங்கிப் புசித்து) கொண்டும் இருப்பார்கள்.

Tafseer

لَا يَذُوقُونَ
சுவைக்க மாட்டார்கள்
فِيهَا ٱلْمَوْتَ
அதில்/மரணத்தை
إِلَّا ٱلْمَوْتَةَ
மரணத்தை தவிர
ٱلْأُولَىٰۖ
முதல்
وَوَقَىٰهُمْ
இன்னும் அவன் அவர்களைப் பாதுகாத்தான்
عَذَابَ
வேதனையை விட்டும்
ٱلْجَحِيمِ
நரகத்தின்

Laa yazooqoona feehal mawtaa illal mawtatal oolaa wa qaqaahum 'azaabal jaheem

முந்திய மரணத்தைத் தவிர, அதில் அவர்கள் வேறு யாதொரு மரணத்தையும் அனுபவிக்க மாட்டார்கள். (அதாவது: மரணிக்காது என்றென்றும் வாழ்வார்கள்.) ஆகவே, அவர்களை நரக வேதனையிலிருந்து, (இறைவன்) காப்பாற்றினான்.

Tafseer

فَضْلًا
அருளினால்
مِّن رَّبِّكَۚ
உமது இறைவனின்
ذَٰلِكَ هُوَ
இதுதான்
ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ
மகத்தான வெற்றி

Fadlam mir rabbik; zaalika huwal fawzul 'azeem

(நபியே! இது) உங்களது இறைவனின் அருளாகும். இதுதான் மகத்தான பெரும் வெற்றியுமாகும்.

Tafseer

فَإِنَّمَا يَسَّرْنَٰهُ
இதை நாம் இலேசாக்கினோம்/உமது மொழியில்
لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக

Fa innamaa yassarnaahu bilisaanika la'allahum yatazakkaroon

(நபியே!) அவர்கள் அறிந்து நல்லுணர்ச்சி பெறும் பொருட்டே இவ்வேதத்தை நாம் உங்களுடைய மொழியில் எளிதாக்கி வைத்தோம்.

Tafseer

فَٱرْتَقِبْ
ஆகவே, நீர் எதிர்பார்த்திருப்பீராக!
إِنَّهُم
நிச்சயமாக அவர்களும்
مُّرْتَقِبُونَ
எதிர்பார்க்கின்றார்கள்

Fartaqib innahum murta qiboon

(இதனைக் கொண்டு அவர்கள் நல்லுணர்ச்சி பெறவில்லையெனில், அவர்களுக்கு வரக்கூடிய தீங்கை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக அவர்களும் எதிர்பார்த்தே இருப்பார்கள்.

Tafseer