Skip to main content

وَإِن لَّمْ
நீங்கள் என்னை நம்பிக்கை கொள்ளவில்லை என்றால்
فَٱعْتَزِلُونِ
என்னை விட்டு விலகிவிடுங்கள்

Wa il lam tu'minoo lee fa'taziloon

"நீங்கள் என்னை நம்பாவிடில் என்னைவிட்டு விலகிக் கொள்ளுங்கள்" (என்றும் கூறி)

Tafseer

فَدَعَا
அவர் அழைத்தார்
رَبَّهُۥٓ
தனது இறைவனை
أَنَّ هَٰٓؤُلَآءِ
நிச்சயமாக/இவர்கள்
قَوْمٌ
மக்கள்
مُّجْرِمُونَ
குற்றம் செய்கின்றவர்கள்

Fada'aa rabbahooo anna haaa'ulaaa'i qawmum mujrimoon

தன் இறைவனை நோக்கி "நிச்சயமாக இவர்கள் பாவம் செய்யும் மக்களாகவே இருக்கின்றார்கள்" என்றும் கூறினார்.

Tafseer

فَأَسْرِ
நீங்கள் அழைத்துச் செல்லுங்கள்
بِعِبَادِى
என் அடியார்களை
لَيْلًا
இரவில்
إِنَّكُم
நிச்சயமாக நீங்கள்
مُّتَّبَعُونَ
பின்தொடரப்படுவீர்கள்

Fa asri bi'ibaadee lailan innakum muttaba'oon

(அதற்கு இறைவன்) "நீங்கள் (இஸ்ரவேலர்களாகிய) என்னுடைய அடியார்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக சென்று விடுங்கள். எனினும், நிச்சயமாக (அவர்கள்) உங்களைப் பின்தொடர்ந்து வருவார்கள்.

Tafseer

وَٱتْرُكِ
விட்டுவிடுங்கள்!
ٱلْبَحْرَ
கடலை
رَهْوًاۖ
அமைதியாக
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
جُندٌ
ராணுவம்
مُّغْرَقُونَ
மூழ்கடிக்கப்படுகின்ற

Watrukil bahra rahwan innahum jundum mughraqoon

(நீங்கள் செல்வதற்காகப் பிளந்த) கடலை வறண்டுபோன அதே நிலையில் விட்டு (நீங்கள் கடலைக் கடந்து) விடுங்கள். நிச்சயமாக அவர்களுடைய படைகள் அனைத்தும் கடலில் மூழ்கடிக்கப் பட்டுவிடும்" (என்று கூறி மூழ்கடித்தான்.)

Tafseer

كَمْ
எத்தனையோ
تَرَكُوا۟
விட்டுச் சென்றார்கள்
مِن جَنَّٰتٍ
தோட்டங்களையும்
وَعُيُونٍ
ஊற்றுகளையும்

Kam tarakoo min jannaatinw wa 'uyoon

(அவர்கள்) எத்தனையோ சோலைகளையும், நீரருவிகளையும்,

Tafseer

وَزُرُوعٍ
விவசாய நிலங்களையும்
وَمَقَامٍ
இடங்களையும்
كَرِيمٍ
கண்ணியமான

Wa zuroo'inw wa maqaa min kareem

எவ்வளவோ விவசாயங்களையும், மேலான வீடுகளையும் விட்டுச் சென்றனர்.

Tafseer

وَنَعْمَةٍ
வசதிகளையும்
كَانُوا۟
இருந்த(னர்)
فِيهَا
அவற்றில்
فَٰكِهِينَ
இன்புற்றவர்களாக

Wa na'matin kaanoo feehaa faakiheen

அவர்கள் இன்பம் அனுபவித்துக் கொண்டிருந்த எத்தனையோ சுகம் தரும் பொருள்களையும் (விட்டுச் சென்றனர்.)

Tafseer

كَذَٰلِكَۖ
இப்படித்தான்
وَأَوْرَثْنَٰهَا
இவற்றை சொந்தமாக்கினோம்
قَوْمًا ءَاخَرِينَ
மக்களுக்கு/வேறு

Kazaalika wa awrasnaahaa qawman aakhareen

இவ்வாறே (நடைபெற்றது. அவற்றையெல்லாம் அவர்கள் அல்லாத) வேறு மக்களுக்குச் சொந்தமாக்கி வைத்தோம்.

Tafseer

فَمَا بَكَتْ
அழவில்லை
عَلَيْهِمُ
அவர்கள் மீது
ٱلسَّمَآءُ
வானமும்
وَٱلْأَرْضُ
பூமியும்
وَمَا كَانُوا۟
அவர்கள் இருக்கவில்லை
مُنظَرِينَ
தவணைத் தரப்படுபவர்களாக(வும்)

Famaa bakat 'alaihimus samaaa'u wal ardu wa maa kaanoo munzareen

(அழிந்துபோன) அவர்களைப் பற்றி, வானமோ பூமியோ (ஒன்றுமே துக்கித்து) அழவில்லை! (தப்பித்துக் கொள்ளவும்) அவர்களுக்கு அவகாசம் கொடுக்கப்படவில்லை.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
نَجَّيْنَا
நாம் காப்பாற்றினோம்
بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
இஸ்ரவேலர்களை
مِنَ ٱلْعَذَابِ
வேதனையிலிருந்து
ٱلْمُهِينِ
இழிவுபடுத்தும்

Wa laqad najjainaa Baneee Israaa'eela minal'azaabil muheen

(இவ்வாறு) இஸ்ராயீலின் சந்ததிகளை ஃபிர்அவ்ன் இழிவுபடுத்தி, (அவர்களை அவன்) செய்து கொண்டிருந்த வேதனையில் இருந்தும் மெய்யாக நாமே பாதுகாத்துக் கொண்டோம்.

Tafseer