Skip to main content

أَمْ حَسِبَ
எண்ணுகின்றார்களா?
ٱلَّذِينَ
எவர்கள்
ٱجْتَرَحُوا۟
செய்தார்கள்
ٱلسَّيِّـَٔاتِ
பாவங்களை
أَن نَّجْعَلَهُمْ
அவர்களை ஆக்குவோம் என்று
كَٱلَّذِينَ
எவர்களைப் போன்று
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
وَعَمِلُوا۟
செய்தவர்களை
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
سَوَآءً
சமமாக்கிவிடுவோம்
مَّحْيَاهُمْ
வாழ்க்கையும் இவர்களின்
وَمَمَاتُهُمْۚ
இவர்களின் மரணத்தையும்
سَآءَ
அது மிகக் கெட்டது
مَا يَحْكُمُونَ
எதை தீர்ப்பளிக்கின்றார்களோ

Am hasibal lazeenaj tarahus saiyiaati an naj'alahum kallazeena aamanoo wa 'amilu saalihaati sawaaa'am mahyaahum wa mamaatuhum; saaa'a maa yahkumoon

எவர்கள் பாவத்தைத் தேடிக் கொண்டார்களோ அவர்கள், நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தவர்களைப் போல் ஆகிவிடுவோம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? அவர்கள் உயிருடன் இருப்பதும் அவர்கள் இறந்துவிடுவதும் சமமே. அவர்கள் (இதற்கு மாறாகச்) செய்துகொண்ட முடிவு மகா கெட்டது.

Tafseer

وَخَلَقَ
படைத்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களையும்
وَٱلْأَرْضَ
பூமியையும்
بِٱلْحَقِّ
உண்மையான காரணத்திற்காக(வும்)
وَلِتُجْزَىٰ
கூலி கொடுக்கப்படுவதற்காகவும்
كُلُّ نَفْسٍۭ
ஒவ்வொரு ஆன்மாவும்
بِمَا كَسَبَتْ
அது எதை செய்ததோ
وَهُمْ لَا
இன்னும் அவர்கள்/அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்

Wa khalaqal laahus samaawaati wal arda bilhaqqi wa litujzaa kullu nafsim bimaa kasabat wa hum laa yuzlamoon

வானங்களையும் பூமியையும் அல்லாஹ் தக்க காரணத்தின் மீதே படைத்திருக்கின்றான். ஆகவே, (அவர்களில் உள்ள) ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அவைகளின் செயலுக்குத்தக்க கூலியே கொடுக்கப்படும். அவை (அணுவளவும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது.

Tafseer

أَفَرَءَيْتَ
நீர் அறிவிப்பீராக!
مَنِ ٱتَّخَذَ
எடுத்துக்கொண்டவனைப் பற்றி
إِلَٰهَهُۥ
தனது கடவுளாக
هَوَىٰهُ
தனது மனவிருப்பத்தை
وَأَضَلَّهُ
அவனை வழிகெடுத்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَىٰ عِلْمٍ
அறிவு வந்ததன் பின்னர்
وَخَتَمَ
இன்னும் முத்திரையிட்டான்
عَلَىٰ سَمْعِهِۦ
அவனது செவியிலும்
وَقَلْبِهِۦ
அவனது உள்ளத்திலும்
وَجَعَلَ
இன்னும் ஆக்கினான்
عَلَىٰ بَصَرِهِۦ
அவனது பார்வையில்
غِشَٰوَةً
திரையை
فَمَن
ஆகவே, யார்
يَهْدِيهِ
அவனுக்கு நேர்வழி காட்டுவார்
مِنۢ بَعْدِ
பின்
ٱللَّهِۚ
அல்லாஹ்விற்கு
أَفَلَا تَذَكَّرُونَ
நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?

Afara'ayta manit takhaza ilaahahoo hawaahu wa adal lahul laahu 'alaa 'ilminw wa khatama 'alaa sam'ihee wa qalbihee wa ja'ala 'alaa basarihee ghishaawatan famany yahdeehi mim ba'dil laah; afalaa tazakkaroon

(நபியே!) தன்னுடைய உடல் ஆசையை இச்சையை(த் தான் வணங்கும்) தெய்வமாக எடுத்துக்கொண்ட ஒருவனை நீங்கள் கவனித்தீர்களா? அவனுக்கு(ப் போதுமான) கல்வி இருந்தும் (அவனது பாவத்தின் காரணமாக) அல்லாஹ் அவனைத் தவறான வழியில் விட்டு, அவனுடைய செவியின் மீதும், உள்ளத்தின் மீதும் முத்திரையிட்டு விட்டான். அவனுடைய பார்வையின் மீதும் ஒரு திரையை அமைத்து விட்டான். அல்லாஹ் இவ்வாறு செய்த பின்னர், அவனை யாரால்தான் நேரான வழியில் செலுத்த முடியும்? (இதனை) நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?

Tafseer

وَقَالُوا۟
இன்னும் கூறினார்கள்
مَا
வேறு இல்லை
هِىَ
இது
إِلَّا
தவிர
حَيَاتُنَا
நமது வாழ்க்கையை
ٱلدُّنْيَا
உலக
نَمُوتُ
மரணிக்கின்றோம்
وَنَحْيَا
இன்னும் வாழ்கின்றோம்
وَمَا يُهْلِكُنَآ
நம்மை அழிக்காது
إِلَّا ٱلدَّهْرُۚ
காலத்தைத் தவிர
وَمَا لَهُم
அவர்களுக்கு இல்லை
بِذَٰلِكَ
இதைப் பற்றி
مِنْ عِلْمٍۖ
அறிவு
إِنْ هُمْ
அவர்கள் இல்லை
إِلَّا يَظُنُّونَ
வீண் எண்ணம் எண்ணுபவர்களே தவிர

Wa qaaloo maa hiya illaa hayaatunad dunyaa namootu wa nahyaa wa maa yuhlikunaaa illad dahr; wa maa lahum bizaalika min 'ilmin in hum illaayazunnoon

"இவ்வுலகத்தில் நாம் வாழும் வாழ்க்கையைத் தவிர வேறொரு வாழ்க்கை இல்லை" என்றும், "(இதில்தான்) நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்; பின்னர் இறந்து விடுகின்றோம். காலத்தைத் தவிர (வேறு யாதொன்றும்) நம்மை அழிப்பதில்லை" என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதைப்பற்றி இவர்களுக்கு யாதொரு ஞானமும் இல்லை. இவர்கள் வீண் சந்தேகத்தில் ஆழ்ந்திருப் போரைத் தவிர வேறில்லை.

Tafseer

وَإِذَا تُتْلَىٰ
ஓதப்பட்டால்
عَلَيْهِمْ
அவர்கள் மீது
ءَايَٰتُنَا
நமது வசனங்கள்
بَيِّنَٰتٍ
தெளிவான ஆதாரங்களாக
مَّا كَانَ
இருக்கவில்லை
حُجَّتَهُمْ
அவர்களின் ஆதாரம்
إِلَّآ
தவிர
أَن قَالُوا۟
அவர்கள் சொல்வதே
ٱئْتُوا۟ بِـَٔابَآئِنَآ
எங்கள் மூதாதைகளைக் கொண்டு வாருங்கள்
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக

Wa izaa tutlaa 'alaihim aayaatuna baiyinaatim maa kaana hujjatahum illaaa an qaalu'too bi aabaaa'inaaa in kuntum saadiqeen

அவர்களுக்கு நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் (அவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி,) "மெய்யாகவே (மரணித்தவர்கள் உயிர்பெற்று எழும்புவார்கள் என்ற விஷயத்தில்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால், (இறந்து போன) எங்களுடைய மூதாதைகளை (உயிர்ப்பித்துக்) கொண்டு வாருங்கள்" என்று கூறுவதைத் தவிர, (வேறு) பதில் கூற அவர்களுக்கு முடிவதில்லை.

Tafseer

قُلِ
கூறுவீராக!
ٱللَّهُ
அல்லாஹ்தான்
يُحْيِيكُمْ
உங்களை உயிர்ப்பிக்கின்றான்
ثُمَّ
பிறகு
يُمِيتُكُمْ
உங்களை மரணிக்க வைப்பான்
ثُمَّ
பிறகு
يَجْمَعُكُمْ
அவன் உங்களை ஒன்று சேர்ப்பான்
إِلَىٰ يَوْمِ
மறுமை நாளில்
لَا رَيْبَ
அறவே சந்தேகம் இல்லை
فِيهِ
அதில்
وَلَٰكِنَّ
என்றாலும்
أَكْثَرَ
அதிகமானவர்கள்
ٱلنَّاسِ
மக்களில்
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்

Qulil laahu yuhyeekum summa yumeetukum summa yajma'ukum ilaa Yawmil Qiyaamati laa raiba feehi wa laakinna aksaran naasi laa ya'lamoon

(நபியே!) நீங்கள் அவர்களை நோக்கி கூறுங்கள்: "அல்லாஹ்தான் உங்களை உயிர்ப்பித்தான்; (நானல்ல.) அவனே உங்களை மரணிக்கச் செய்வான். பின்னர், மறுமை நாளில் (உயிர் கொடுத்து) உங்களை ஒன்று சேர்ப்பான். இதில் யாதொரு சந்தேகமும் இல்லை. ஆயினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் இதனை உறுதி கொள்வதில்லை."

Tafseer

وَلِلَّهِ
அல்லாஹ்விற்கே உரியது
مُلْكُ
ஆட்சி
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
وَٱلْأَرْضِۚ
இன்னும் பூமியின்
وَيَوْمَ
நாளில்
تَقُومُ
நிகழ்கின்றது
ٱلسَّاعَةُ
மறுமை நாள்
يَوْمَئِذٍ
அந்நாளில்
يَخْسَرُ
நஷ்டமடைவார்கள்
ٱلْمُبْطِلُونَ
பொய்யர்கள்

Wa lillaahi mulkus samaawaati wal ard; wa Yawma taqoomus Saa'atu Yawma 'iziny yakhsarul mubtiloon

வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே. விசாரணை நாள் வரும் அன்று (நம்முடைய வசனங்களைப்) பொய்யாக்கியவர்கள் நஷ்டத்திற்கு உள்ளாகி இருப்பார்கள்.

Tafseer

وَتَرَىٰ
நீர் பார்ப்பீர்
كُلَّ
ஒவ்வொரு
أُمَّةٍ
சமுதாயத்தையும்
جَاثِيَةًۚ
முழந்தாளிட்ட வர்களாக
كُلُّ
ஒவ்வொரு
أُمَّةٍ
சமுதாயமும்
تُدْعَىٰٓ
அழைக்கப்படும்
إِلَىٰ كِتَٰبِهَا
தமது பதிவு புத்தகத்தின் பக்கம்
ٱلْيَوْمَ
இன்று
تُجْزَوْنَ
கூலி கொடுக்கப்படுவீர்கள்
مَا كُنتُمْ
நீங்கள் செய்துகொண்டிருந்த செயல்களுக்கு

Wa taraa kulla ummatin jaasiyah; kullu ummatin tud'aaa ilaa kitaabihaa al Yawma tujzawna maa kuntum ta'maloon

(நபியே! அந்நாளில்) ஒவ்வொரு வகுப்பாரும், முழந்தாளிட்டிருக்கக் காண்பீர்கள். ஒவ்வொரு வகுப்பாரும் (விசாரணைக்காக) அவர்களுடைய (பதிவுப்) புத்தகத்தை நோக்கி அழைக்கப்படுவார்கள். (அவர்களை நோக்கி) "இன்றைய தினம் நீங்கள் உங்கள் செயலுக்குரிய கூலியை கொடுக்கப் பெறுவீர்கள்" (என்றும்),

Tafseer

هَٰذَا
இதோ
كِتَٰبُنَا
நமது பதிவேடு
يَنطِقُ
அது பேசும்
عَلَيْكُم
உங்கள் மீது
بِٱلْحَقِّۚ
உண்மையாக
إِنَّا
நிச்சயமாக நாம்
كُنَّا نَسْتَنسِخُ
எழுதிக் கொண்டிருந்தோம்
مَا كُنتُمْ
நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை

Haazaa kitaabunaa yantiqu 'alaikum bilhaqq; innaa kunnaa nastansikhu maa kuntum ta'maloon

"இது (உங்கள் செயலைப் பற்றிய) நம்முடைய (பதிவுப்) புத்தகம். இது உங்களைப் பற்றிய உண்மையையே கூறும். நிச்சயமாக நாம், நீங்கள் செய்தவற்றையெல்லாம் எழுதி வைத்திருக்கின்றோம்" (என்றும் கூறப்படும்).

Tafseer

فَأَمَّا ٱلَّذِينَ
ஆகவே/எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
فَيُدْخِلُهُمْ
அவர்களை நுழைவிப்பான்
رَبُّهُمْ
அவர்களது இறைவன்
فِى رَحْمَتِهِۦۚ
தனது அருளில்
ذَٰلِكَ هُوَ
இதுதான்
ٱلْفَوْزُ
வெற்றி
ٱلْمُبِينُ
மிகத் தெளிவான(து)

Fa ammal lazeena aamaanoo wa 'amilus saalihaati fayudkhiluhum Rabbuhum fee rahmatih; zaalika huwal fawzul mubeen

எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தார்களோ அவர்களை, அவர்களுடைய இறைவன் தன்னுடைய அருளில் புகுத்துவான். இதுதான் மிகத் தெளிவான வெற்றியாகும்.

Tafseer