Skip to main content

وَثَمُودَا۟
இன்னும் ஸமூது சமுதாயத்தை
فَمَآ أَبْقَىٰ
ஆக, அவன் விட்டு வைக்கவில்லை

Wa samooda famaaa abqaa

ஸமூத் என்னும் மக்களையும் (அழித்தவன் அவன்தான். அவர்களில் ஒருவரையுமே) தப்ப விடவில்லை.

Tafseer

وَقَوْمَ
இன்னும் மக்களையும்
نُوحٍ
நூஹூடைய
مِّن قَبْلُۖ
இதற்கு முன்னர்
إِنَّهُمْ
நிச்சயமாக இவர்கள்
كَانُوا۟ هُمْ
இவர்கள் இருந்தனர்
أَظْلَمَ
மிகப் பெரிய அநியாயக்காரர்களாக
وَأَطْغَىٰ
இன்னும் மிகப் பெரிய வரம்பு மீறிகளாக

Wa qawma Noohim min qablu innahum kaanoo hum azlama wa atghaa

இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுடைய மக்களையும் (அழித்தவன் அவன்தான்.) நிச்சயமாக இவர்கள் (அனைவரும்) அநியாயக்காரர்களாகவும், வரம்பு மீறியவர்களாகவும் இருந்தார்கள்.

Tafseer

وَٱلْمُؤْتَفِكَةَ
இன்னும் தலைகீழாக புரட்டப்பட்ட சமுதாயத்தை
أَهْوَىٰ
அவன்தான் கவிழ்த்தான்

Wal mu'tafikata ahwaa

(லூத்தின் மக்களுடைய) கவிழ்ந்துபோன பட்டிணங்களைப் புரட்டி அடித்தவனும் அவன்தான்.

Tafseer

فَغَشَّىٰهَا
அதனால் அவன் அவர்களை மூடினான்
مَا غَشَّىٰ
எதைக் கொண்டு மூடவேண்டுமோ

Faghashshaahaa maa ghashshaa

(அவர்கள் அழிவுற்ற நேரத்தில்) அவர்களைச் சூழ்ந்து கொள்ள வேண்டிய (வேதனையான)து முற்றிலும் அவர்களைச் சூழ்ந்து கொண்டது.

Tafseer

فَبِأَىِّ ءَالَآءِ
அத்தாட்சிகளில் எதில்
رَبِّكَ
உமது இறைவனின்
تَتَمَارَىٰ
தர்க்கம்செய்கின்றாய்?

Fabi ayyi aalaaa'i Rabbika tatamaaraa

ஆகவே, (மனிதனே! நீ) உனது இறைவனின் கொடையில் எதைத்தான் சந்தேகிக்கின்றாய்?

Tafseer

هَٰذَا
இவர்
نَذِيرٌ
ஓர்எச்சரிப்பாளர்தான்
مِّنَ ٱلنُّذُرِ
எச்சரிப்பாளர்களில் இருந்து
ٱلْأُولَىٰٓ
முந்தியவர்கள்

Haazaa nazeerum minan nuzuril oolaa

முன்னர் (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்த தூதர்களைப் போல் இவரும் ஒரு தூதரே!

Tafseer

أَزِفَتِ
நெருங்கிவிட்டது
ٱلْءَازِفَةُ
நெருங்கக்கூடியது

Azifatil laazifah

தீவிரமாக வரவேண்டிய (உலக முடிவு) காலம் நெருங்கி விட்டது.

Tafseer

لَيْسَ لَهَا
(யாரும்) அதற்கு இல்லை
مِن دُونِ
அன்றி
ٱللَّهِ
அல்லாஹ்வை
كَاشِفَةٌ
வெளிப்படுத்துபவர்

Laisa lahaa min doonil laahi kaashifah

அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அதனைத் தடுக்க முடியாது.

Tafseer

أَفَمِنْ هَٰذَا
?/இந்த குர்ஆனினால்
تَعْجَبُونَ
நீங்கள் ஆச்சரியப்படுகின்றீர்களா

Afamin hazal hadeesi ta'jaboon

இதனைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகின்றீர்களா?

Tafseer

وَتَضْحَكُونَ
இன்னும் சிரிக்கின்றீர்களா?
وَلَا تَبْكُونَ
நீங்கள் அழாமல்

Wa tadhakoona wa laa tabkoon

(இதனைப் பற்றி) நீங்கள் சிரிக்கின்றீர்களே? அழ வேண்டாமா?

Tafseer