Skip to main content

وَلِلَّهِ
அல்லாஹ்விற்கே உரியன
مَا فِى
வானங்களில் உள்ளவை(யும்)
وَمَا فِى
பூமியில்உள்ளவையும்
لِيَجْزِىَ
இறுதியில் அவன் கூலி கொடுப்பான்
ٱلَّذِينَ أَسَٰٓـُٔوا۟
தீமை செய்தவர்களுக்கு
بِمَا عَمِلُوا۟
அவர்கள் செய்தவற்றுக்கு
وَيَجْزِىَ
கூலி கொடுப்பான்
ٱلَّذِينَ أَحْسَنُوا۟
நன்மை செய்தவர்களுக்கு
بِٱلْحُسْنَى
சொர்க்கத்தை

Wa lillaahi maa fis samaawaati wa maa fil ardi liyajziyal lazeena asaaa'oo bimaa 'amiloo wa yajziyal lazeena ahsanoo bilhusnaa

வானங்கள், பூமியிலுள்ளவைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே. ஆகவே, தீமை செய்தவர்களுக்கு அவர்களுடைய (தீய) செயலுக்குத் தக்கவாறு (தீமையைக்) கூலியாகக் கொடுக்கின்றான். நன்மை செய்தவர்களுக்கு நன்மையைக் கூலியாகக் கொடுக்கின்றான்.

Tafseer

ٱلَّذِينَ
அவர்கள்
يَجْتَنِبُونَ
விலகி இருப்பார்கள்
كَبَٰٓئِرَ ٱلْإِثْمِ
பெரும் பாவங்களை விட்டும்
وَٱلْفَوَٰحِشَ
இன்னும் மானக்கேடான செயல்களை விட்டும்
إِلَّا ٱللَّمَمَۚ
தவிர/சிறு தவறுகளை
إِنَّ
நிச்சயமாக
رَبَّكَ
உமது இறைவன்
وَٰسِعُ ٱلْمَغْفِرَةِۚ
விசாலமான மன்னிப்புடையவன்
هُوَ
அவன்
أَعْلَمُ
மிக அறிந்தவனாக
بِكُمْ
உங்களை
إِذْ أَنشَأَكُم
உங்களை உருவாக்கிய போதும்
مِّنَ ٱلْأَرْضِ
பூமியில் இருந்து
وَإِذْ أَنتُمْ
நீங்கள் இருந்த போதும்
أَجِنَّةٌ
சிசுக்களாக
فِى بُطُونِ
வயிறுகளில்
أُمَّهَٰتِكُمْۖ
உங்கள் தாய்மார்களின்
فَلَا تُزَكُّوٓا۟
ஆகவே, பீத்திக் கொள்ளாதீர்கள்
أَنفُسَكُمْۖ
உங்களை நீங்களே
هُوَ
அவன்
أَعْلَمُ
மிக அறிந்தவன்
بِمَنِ ٱتَّقَىٰٓ
அல்லாஹ்வை அஞ்சியவர்களை

Allazeena yajtaniboona kabaaa'iral ismi walfawaa hisha illal lamam; inna rabbaka waasi'ul maghfirah; huwa a'lamu bikum iz ansha akum minal ardi wa iz antum ajinnatun fee butooni umma haatikum falaa tuzakkooo anfusakum huwa a'lamu bimanit taqaa

(நன்மை செய்யும்) அவர்கள் (ஏதும் தவறாக ஏற்பட்டு விடும்) அற்பமான பாவங்களைத் தவிர, மற்ற பெரும் பாவங்களி லிருந்தும், மானக்கேடான விஷயங்களிலிருந்தும் விலகியிருப்பார்கள். நிச்சயமாக உங்களது இறைவன் மன்னிப்பதில் மிக்க தாராள மானவன். உங்களைப் பூமியிலிருந்து உற்பத்தி செய்த சமயத்தில் (உங்கள் தன்மையை) அவன் நன்கறிவான். நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் கர்ப்பப்பிண்டமாயிருந்த சமயத்திலும் உங்களை அவன் நன்கறிவான். ஆகவே, உங்களை தூய்மையானவர்கள் என நீங்களே தற்புகழ்ச்சி செய்துகொள்ளாதீர்கள். உங்களில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்பவர்கள் யாரென்பதை அவன் நன்கறிவான்.

Tafseer

أَفَرَءَيْتَ
நீர் அறிவிப்பீராக!
ٱلَّذِى
ஒருவன்
تَوَلَّىٰ
புறக்கணித்தான்

Afara'ayatal lazee tawallaa

(நபியே!) உங்களை விட்டும் விலகியவனை நீங்கள் கவனித்தீர்களா?

Tafseer

وَأَعْطَىٰ
இன்னும் கொடுத்தான்
قَلِيلًا
கொஞ்சம்
وَأَكْدَىٰٓ
பிறகு நிறுத்திக் கொண்டான்

Wa a'taa qaleelanw wa akdaa

அவன் ஒரு சொற்பத்தைக் கொடுத்துவிட்டு, கொடுப்பதையே (முற்றிலும்) நிறுத்திக் கொண்டான்.

Tafseer

أَعِندَهُۥ
அவனிடம் இருக்கிறதா?
عِلْمُ
அறிவு
ٱلْغَيْبِ
மறைவானவற்றின்
فَهُوَ
அவன்
يَرَىٰٓ
பார்க்கின்றானா?

A'indahoo 'ilmul ghaibi fahuwa yaraa

அவனிடத்தில் மறைவான விஷயத்தின் ஞானமிருந்து (தன்னுடைய முடிவை அதில்) அவன் பார்த்தானா?

Tafseer

أَمْ لَمْ
அவனுக்கு செய்தி அறிவிக்கப்படவில்லையா?
بِمَا فِى
ஏடுகளில் உள்ளவற்றைப் பற்றி
مُوسَىٰ
மூஸாவின்

Am lam yunabbaa bimaa fee suhuhfi Moosa

அல்லது மூஸாவுடைய வேதத்திலுள்ளது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?

Tafseer

وَإِبْرَٰهِيمَ
இன்னும் இப்ராஹீமுடைய
ٱلَّذِى وَفَّىٰٓ
எவர்/முழுமையாக நிறைவேற்றினார்

Wa Ibraaheemal lazee waffaaa

(அல்லது இறைவனுடைய கட்டளைகளை) முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீமுடைய விஷயமேனும் (அவனுக்குத் தெரியாதா?)

Tafseer

أَلَّا تَزِرُ
சுமக்காது
وَازِرَةٌ
பாவம்செய்த ஆன்மா
وِزْرَ
பாவத்தை
أُخْرَىٰ
இன்னொரு பாவியான ஆன்மாவின்

Allaa taziru waaziratunw wizra ukhraa

(நபியே!) ஒருவனின் பாவச் சுமையை மற்றொருவன் சுமக்க மாட்டான் என்பதை அறிந்துகொள்வீராக.

Tafseer

وَأَن لَّيْسَ
இன்னும் வேறு ஏதுமில்லை
لِلْإِنسَٰنِ إِلَّا
மனிதனுக்கு/தவிர
مَا سَعَىٰ
அவன் எதை அடைய முயற்சித்தானோ

Wa al laisa lil insaani illaa maa sa'aa

மனிதனுக்கு அவன் செய்த செயலைத் தவிர வேறொன்றும் கிடைக்காது.

Tafseer

وَأَنَّ
இன்னும் , நிச்சயமாக
سَعْيَهُۥ
தனது முயற்சியை
سَوْفَ يُرَىٰ
விரைவில் காண்பான்

Wa anna sa'yahoo sawfa yuraa

நிச்சயமாக (மனிதன் செய்த) செயல்தான் கவனிக்கப்படும்.

Tafseer