Skip to main content

ثُمَّ يُجْزَىٰهُ
பிறகு/அதற்கு அவன் கூலி கொடுக்கப்படுவான்
ٱلْجَزَآءَ
கூலியை
ٱلْأَوْفَىٰ
மிக பூரணமான

Summa yujzaahul jazaaa 'al awfaa

பின்னர், செயலுக்குத் தக்க கூலி முழுமையாகக் கொடுக்கப் படுவார்கள்.

Tafseer

وَأَنَّ
இன்னும் , நிச்சயமாக
إِلَىٰ رَبِّكَ
உமது இறைவன் பக்கம்தான்
ٱلْمُنتَهَىٰ
இறுதி ஒதுங்குமிடம் இருக்கிறது

Wa anna ilaa rabbikal muntahaa

(நபியே!) நிச்சயமாக உங்களது இறைவனிடம் (நீங்கள் அனைவரும்) போய்த் தீரவேண்டும்.

Tafseer

وَأَنَّهُۥ هُوَ
இன்னும் , நிச்சயமாக அவன்தான்
أَضْحَكَ
சிரிக்க வைக்கின்றான்
وَأَبْكَىٰ
இன்னும் அழ வைக்கின்றான்

Wa annahoo huwa adhaka wa abkaa

நிச்சயமாக அவனே சிரிக்க வைக்கின்றான்; அழவும் வைக்கின்றான்.

Tafseer

وَأَنَّهُۥ هُوَ
இன்னும் நிச்சயமாக அவன்தான்
أَمَاتَ
மரணிக்க வைக்கின்றான்
وَأَحْيَا
இன்னும் உயிர் கொடுக்கின்றான்

Wa annahoo huwa amaata wa ahyaa

நிச்சயமாக அவன்தான் மரணிக்கச் செய்கின்றான்; (திரும்பவும்) உயிர்ப்பிக்கின்றான்.

Tafseer

وَأَنَّهُۥ
இன்னும் நிச்சயமாக அவன்தான்
خَلَقَ
படைத்தான்
ٱلزَّوْجَيْنِ
இரு ஜோடிகளை
ٱلذَّكَرَ
ஆணை(யும்)
وَٱلْأُنثَىٰ
பெண்ணையும்

Wa annahoo khalaqaz zawjainiz zakara wal unsaa

நிச்சயமாக அவன்தான் ஆண், பெண் ஜோடி ஜோடிகளாகப் படைக்கின்றான்.

Tafseer

مِن نُّطْفَةٍ
இந்திரியத்தில் இருந்து
إِذَا تُمْنَىٰ
செலுத்தப்படுகின்ற

Min nutfatin izaa tumnaa

(கர்ப்பத்தில்) செலுத்தப்படும் ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டே (உங்களைப் படைக்கின்றான்).

Tafseer

وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
عَلَيْهِ
அவன்மீதே கடமையாகஇருக்கிறது
ٱلنَّشْأَةَ
உருவாக்குவதும்
ٱلْأُخْرَىٰ
மற்றொரு முறை

Wa anna 'alaihin nash atal ukhraa

நிச்சயமாக (மரணித்தப் பின்னர்) உயிர் கொடுத்து எழுப்புவதும் அவன் மீது கடமையாக இருக்கிறது.

Tafseer

وَأَنَّهُۥ هُوَ
இன்னும் நிச்சயமாக அவன்தான்
أَغْنَىٰ
செல்வந்தராக ஆக்கினான்
وَأَقْنَىٰ
இன்னும் சேமிப்பைக் கொடுத்தான்

Wa annahoo huwa aghnaa wa aqnaa

பொருளைக் கொடுத்து (அதனை நீங்கள்) சேகரித்துச் சீமானாகும்படி செய்பவனும் நிச்சயமாக அவன்தான்.

Tafseer

وَأَنَّهُۥ هُوَ
இன்னும் நிச்சயமாக அவன்தான்
رَبُّ
இறைவன்
ٱلشِّعْرَىٰ
ஷிஃரா நட்சத்திரத்தின்

Wa annahoo huwa rabbush shi'raa

(இணைவைப்பவர்களே! நீங்கள் வணங்கும்) "ஷிஃரா" என்னும் நட்சத்திரத்தின் இறைவனும் நிச்சயமாக அவன்தான்.

Tafseer

وَأَنَّهُۥٓ
இன்னும் நிச்சயமாகஅவன்
أَهْلَكَ
அழித்தான்
عَادًا
ஆது சமுதாயத்தை
ٱلْأُولَىٰ
முந்திய

Wa annahooo ahlak a 'Aadanil oolaa

(அந்த நட்சத்திரத்தை வணங்கிக் கொண்டிருந்த) முந்திய ஆது என்னும் மக்களை அழித்தவனும் நிச்சயமாக அவன்தான்.

Tafseer