Skip to main content

ٱلَّذِينَ
எவர்கள்
جَعَلُوا۟
ஆக்கினார்கள்
ٱلْقُرْءَانَ
குர்ஆனை
عِضِينَ
பல வகைகளாக

Allazeena ja'alul Quraana'ideen

இந்தக் குர்ஆனைப் பலவாறாகப் பிரிப்பவர்கள் மீதும் (வேதனையை இறக்கி வைப்போம்.)

Tafseer

فَوَرَبِّكَ
உம் இறைவன் மீது சத்தியமாக
لَنَسْـَٔلَنَّهُمْ
நிச்சயமாக அவர்களை விசாரிப்போம்
أَجْمَعِينَ
அனைவரையும்

Fawa Rabbika lanas'a lannahum ajma'een

(ஆகவே) உங்கள் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் அனைவரையும் (நம்மிடம்) ஒன்று சேர்த்து,

Tafseer

عَمَّا
பற்றி
كَانُوا۟
இருந்தனர்
يَعْمَلُونَ
செய்கின்றனர்

'Ammaa kaanoo ya'maloon

அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதைப் பற்றி நிச்சயமாக (அவர்களிடம்) கேள்வி கணக்குக் கேட்போம்.

Tafseer

فَٱصْدَعْ
ஆகவே தெளிவுடன் பகிரங்கப்படுத்துவீராக
بِمَا تُؤْمَرُ
எதை/நீர் ஏவப்படுகிறீர்
وَأَعْرِضْ
இன்னும் புறக்கணிப்பீராக
عَنِ ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களை

Fasda' bimaa tu'maru wa a'rid anil mushrikeen

ஆகவே, உங்களுக்கு ஏவப்பட்டதை(த் தயக்கமின்றி) நீங்கள் அவர்களுக்கு விவரித்தறிவித்துவிடுங்கள். மேலும், இணைவைத்து வணங்கும் இவர்களைப் புறக்கணித்து விடுங்கள்.

Tafseer

إِنَّا
நிச்சயமாக நாம்
كَفَيْنَٰكَ
பாதுகாத்தோம்/ உம்மை
ٱلْمُسْتَهْزِءِينَ
பரிகசிப்பவர்களிடமிருந்து

Innaa kafainaakal mustahzi'een

பரிகாசம் செய்யும் (இவர்களுடைய தீங்கைத் தடை செய்வதற்கு) நிச்சயமாக நாமே உங்களுக்குப் போதுமாயிருக்கிறோம்.

Tafseer

ٱلَّذِينَ
எவர்கள்
يَجْعَلُونَ
ஆக்குகிறார்கள்
مَعَ
உடன்
ٱللَّهِ
அல்லாஹ்
إِلَٰهًا
வணங்கப்படும் தெய்வத்தை
ءَاخَرَۚ
மற்றொரு
فَسَوْفَ يَعْلَمُونَ
விரைவில்அறிவார்கள்

Allazeena yaj'aloona ma'al laahi ilaahan aakhar; fasawfa ya'lamoon

இவர்கள் (உங்களைப் பரிகசிப்பது மட்டுமா?) அல்லாஹ்வுக்கு மற்றொரு (பொய்த்) தெய்வத்தைக் கூட்டாக்கு கிறார்கள். (இதன் பலனை) பின்னர் இவர்கள் அறிந்து கொள்வார்கள்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
نَعْلَمُ
அறிவோம்
أَنَّكَ
நிச்சயமாக நீர்
يَضِيقُ
நெருக்கடிக்குள்ளாகிறது
صَدْرُكَ
உம் நெஞ்சு
بِمَا يَقُولُونَ
அவர்கள் கூறுவதால்

Wa laqad na'lamu annak yadeequ sadruka bimaa yaqooloon

(நபியே! உங்களைப் பற்றி) அவர்கள் (கேவலமாகக்) கூறுபவை உங்கள் உள்ளத்தை நெருக்குகிறதென்பதை நிச்சயமாக நாம் அறிவோம். (அதை நீங்கள் ஒரு சிறிதும் பொருட்படுத்தாதீர்கள்.)

Tafseer

فَسَبِّحْ بِحَمْدِ
ஆகவே துதிப்பீராக/புகழ்ந்து
رَبِّكَ
உம் இறைவனை
وَكُن
இன்னும் ஆகிவிடுவீராக
مِّنَ ٱلسَّٰجِدِينَ
சிரம் பணிபவர்களில்

Fasbbih bihamdi Rabbika wa kum minas saajideen

நீங்கள் உங்கள் இறைவனைத் துதி செய்து புகழ்ந்து அவனுக்குச் சிரம் பணிந்து வணங்குங்கள்;

Tafseer

وَٱعْبُدْ
வணங்குவீராக
رَبَّكَ
உம் இறைவனை
حَتَّىٰ يَأْتِيَكَ
வரை/வரும்/உமக்கு
ٱلْيَقِينُ
யகீன்

Wa'bud Rabbaka hattaa yaatiyakal yaqeen

உங்களுக்கு "எகீன்" (என்னும் மரணம்) ஏற்படும் வரையில் (இவ்வாறே) உங்கள் இறைவனை வணங்கிக் கொண்டிருங்கள்!

Tafseer