Skip to main content

ذَٰلِكَ
அது
بِأَنَّ
இன்னும் நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
يُولِجُ
நுழைக்கிறான்
ٱلَّيْلَ
இரவை
فِى ٱلنَّهَارِ
பகலில்
وَيُولِجُ
நுழைக்கிறான்
ٱلنَّهَارَ فِى
பகலை / இரவில்
وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
سَمِيعٌۢ
நன்கு செவியுறுபவன்
بَصِيرٌ
உற்று நோக்குபவன்

Zaalika bi annal laaha yoolijul laila fin nahaari wa yoolijun nahaara fil laili wa annal laaha Samee'um Baseer

இதன் காரணமாவது: நிச்சயமாக அல்லாஹ் இரவைப் பகலிலும், பகலை இரவிலும் நுழைய வைக்(க ஆற்றலுடையவனாக இருக்)கிறான். (அதைப் போன்றே துன்புறுத்தும் கெட்டவனை நல்லவனாகவும், துன்பத்திற்குள்ளான நல்லவனைக் கெட்ட வனாகவும் ஆக்கிவிடுகிறான்.) நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் செவியுறுபவனாகவும் உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

ذَٰلِكَ بِأَنَّ
அது / நிச்சயமாக
ٱللَّهَ هُوَ
அல்லாஹ்தான்
ٱلْحَقُّ
உண்மையானவன்
وَأَنَّ
நிச்சயமாக
مَا يَدْعُونَ
அவர்கள் அழைக்கின்றவை
مِن دُونِهِۦ
அவனையன்றி
هُوَ
அது
ٱلْبَٰطِلُ
பொய்யானவையாகும்
وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
ٱللَّهَ هُوَ
அல்லாஹ்தான்
ٱلْعَلِىُّ
மிக உயர்ந்தவன்
ٱلْكَبِيرُ
மகா பெரியவன்

Zaalika bi annal laaha Huwal haqqu wa anna maa yad'oona min doonihee huwal baatilu wa annal laaha Huwal 'Aliyyul kabeer

நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையன்றி (இறைவனென) அழைப்பவை யாவும் பொய்யானவை ஆகும் (என்பதும்) நிச்சயமாக அல்லாஹ்தான் உயர்ந்தவன், (மேலானவன்,) மகா பெரியவன் (என்பதும் இதற்குக் காரணமாகும்).

Tafseer

أَلَمْ تَرَ
நீர் பார்க்கவில்லையா?
أَنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
أَنزَلَ
இறக்குகின்றான்
مِنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
مَآءً
மழையை
فَتُصْبِحُ
மாறுகின்றது
ٱلْأَرْضُ
பூமி
مُخْضَرَّةًۗ
பசுமையாக
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
لَطِيفٌ
நுட்பமானவன்
خَبِيرٌ
ஆழ்ந்தறிபவன்

Alam tara annal laaha anzala minas samaaa'i maaa'an fatusbihul ardu mukhdarrah; innal laaha Lateefun Khabeer

(நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ்தான் மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்கிறான். (அதனால்) பூமி பசுமையாகி விடுகின்றது. நிச்சயமாக அல்லாஹ் அதிக நுட்பமுடையவனும் அனைத்தையும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

لَّهُۥ
அவனுக்கே சொந்தமானவை
مَا فِى
வானங்களில் உள்ளவையும்
وَمَا فِى
பூமியில்உள்ளவையும்
وَإِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ لَهُوَ
அல்லாஹ்தான்
ٱلْغَنِىُّ
மகா செல்வந்தன்
ٱلْحَمِيدُ
பெரும் புகழுக்குரியவன்

Lahoo ma fis samaawaati wa ma fil ard; wa innal laaha la Huwal Ghaniyyul Hameed

வானங்களிலும் பூமியிலும் உள்ள யாவும் அல்லாஹ்வுக்கு உரியனவே! நிச்சயமாக அல்லாஹ்தான் (பிறரின் உதவி) தேவை அற்றவனும் புகழுக்கு உரியவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

أَلَمْ تَرَ
நீர் பார்க்கவில்லையா?
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
سَخَّرَ
வசப்படுத்தியுள்ளான்
لَكُم
உங்களுக்கு
مَّا فِى
பூமியில் உள்ளவற்றை
وَٱلْفُلْكَ
கப்பலையும்
تَجْرِى
செல்கின்றதாக
فِى ٱلْبَحْرِ
கடலில்
بِأَمْرِهِۦ
அவனது கட்டளைப்படி
وَيُمْسِكُ
இன்னும் தடுத்திருக்கின்றான்
ٱلسَّمَآءَ
வானத்தை
أَن تَقَعَ
வீழ்ந்து விடாமல்
عَلَى ٱلْأَرْضِ
பூமியின் மீது
إِلَّا بِإِذْنِهِۦٓۗ
தவிர/அவனது கட்டளையைக் கொண்டே
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
بِٱلنَّاسِ
மக்கள் மீது
لَرَءُوفٌ
மகா இரக்கமுள்ளவன்
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்

Alam tara annal laaha sakhkhara lakum maa fil ardi wal fulka tajree fil bahri bi amrihee wa yumsikus samaaa'a an taqa'a 'alal ardi illaa biiznih; innal laaha binnaasi la Ra'oofur Raheem

(நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுக்கின்றான். கப்பல் அவனுடைய கட்டளைப்படி கடலில் செல்கிறது. தன்னுடைய அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழாது அவன் தடுத்துக் கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க அன்பும் கிருபையும் உடையவனாக இருக்கின்றான்.

Tafseer

وَهُوَ ٱلَّذِىٓ
அவன்தான்
أَحْيَاكُمْ
உங்களை உயிர்ப்பித்தான்
ثُمَّ
பிறகு
يُمِيتُكُمْ
உங்களை மரணிக்கச் செய்வான்
ثُمَّ
பிறகு
يُحْيِيكُمْۗ
உங்களை உயிர்ப்பிப்பான்
إِنَّ
நிச்சயமாக
ٱلْإِنسَٰنَ
மனிதன்
لَكَفُورٌ
மிக நன்றி கெட்டவன்

Wa Huwal lazee ahyaakum summa yumeetukum summma yuheekum; innal insaana lakafoor

அவன்தான் உங்களை உயிர்ப்பித்தான். அவன்தான் உங்களை மரணிக்கச் செய்வான். பின்னும், அவனே உங்களை உயிர்ப்பிப்பான். எனினும், நிச்சயமாக மனிதன் மிக நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

Tafseer

لِّكُلِّ
ஒவ்வொரு
أُمَّةٍ
சமுதாயத்திற்கும்
جَعَلْنَا
நாம் ஏற்படுத்தினோம்
مَنسَكًا
ஒரு பலியை
هُمْ
அவர்கள்
نَاسِكُوهُۖ
அதைபலியிடுவார்கள்
فَلَا يُنَٰزِعُنَّكَ
ஆகவே அவர்கள் உம்மிடம் தர்க்கிக்க வேண்டாம்
فِى ٱلْأَمْرِۚ
அந்த விஷயத்தில்
وَٱدْعُ
அழைப்பீராக
إِلَىٰ
பக்கம்
رَبِّكَۖ
உமது இறைவனின்
إِنَّكَ
நிச்சயமாக நீர்
لَعَلَىٰ هُدًى
வழிகாட்டுதல் மீது இருக்கின்றீர்
مُّسْتَقِيمٍ
நேரான

Likulli ummatin ja'alnaa mansakan hum naasikoohu falaa yunaazi 'unnaka fil amr; wad'u ilaa Rabbika innaka la 'alaa hudam mustaqeem

(நபியே!) ஒவ்வொரு வகுப்பாருக்கும் (அந்தந்தக் காலத்திற்குத் தக்கவாறு) அவர்கள் வணங்குவதற்குரிய வழியை நாம் ஏற்படுத்தி இருந்தோம். ஆகவே, (உங்களுடைய காலத்தில் உங்களுக்கு) நாம் ஏற்படுத்தியிருக்கும் வழியைப் பற்றி அவர்கள் உங்களுடன் தர்க்கம் செய்ய வேண்டாம். அன்றி, நீங்கள் அவர்களை உங்களுடைய இறைவன் (ஏற்படுத்திய வழியின்) பக்கம் அழையுங்கள். நிச்சயமாக நீங்கள் நேரான வழியில்தான் இருக்கின்றீர்கள்.

Tafseer

وَإِن جَٰدَلُوكَ
அவர்கள் உம்மிடம் தர்க்கித்தால்
فَقُلِ
நீர் கூறுவீராக
ٱللَّهُ
அல்லாஹ்
أَعْلَمُ
மிக அறிந்தவன்
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்கின்றதை

Wa in jaadalooka faqulil laahu a'lamu bimaa ta'maloon

(நபியே!) பின்னும் அவர்கள் உங்களுடன் தர்க்கித்தாலோ (அவர்களை நோக்கி) "நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான். (என்றும்)

Tafseer

ٱللَّهُ
அல்லாஹ்
يَحْكُمُ
தீர்ப்பளிப்பான்
بَيْنَكُمْ
உங்கள் மத்தியில்
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
فِيمَا كُنتُمْ
நீங்கள் முரண்பட்டுக் கொண்டிருந்தவற்றில்

Allaahu yahkumu bainakum Yawmal Qiyaamati feemaa kuntum feehi takhtalifoon

நீங்கள் எவ்விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டிருக்கிறீர்களோ அதைப் பற்றி மறுமை நாளில் அல்லாஹ் உங்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான்" என்றும் கூறுங்கள்.

Tafseer

أَلَمْ تَعْلَمْ
நீர் அறியவில்லையா?
أَنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
يَعْلَمُ
நன்கறிவான்
مَا فِى
வானத்தில் உள்ளவற்றை
وَٱلْأَرْضِۗ
இன்னும் பூமியில்
إِنَّ
நிச்சயமாக
ذَٰلِكَ
இவை
فِى كِتَٰبٍۚ
‘லவ்ஹூல் மஹ்பூலில்’
إِنَّ
நிச்சயமாக
ذَٰلِكَ
இது
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்விற்கு
يَسِيرٌ
மிக சுலபமானதே

Alam ta'lam annal laaha ya'lamu maa fis samaaa'i wal ard; inna zaalika fee kitaab; inna zaalika 'alal laahi yaseer

(நபியே!) வானத்திலும் பூமியிலும் இருப்பவற்றை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை நீங்கள் அறியவில்லையா? நிச்சயமாக இவை யாவும் அவனுடைய (நிகழ்ச்சிக் குறிப்பாகிய) "லவ்ஹுல் மஹ்ஃபூளில்" இருக்கின்றன. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக்க சுலபமானதே!

Tafseer