Skip to main content

حُنَفَآءَ
முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டவர்களாக
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
غَيْرَ مُشْرِكِينَ
(எதையும்) இணையாக்காதவர்களாக
بِهِۦۚ
அவனுக்கு
وَمَن
எவர்
يُشْرِكْ
இணை கற்பிப்பாரோ
بِٱللَّهِ
அல்லாஹ்விற்கு
فَكَأَنَّمَا
போன்று
خَرَّ
கீழே விழுந்தார்
مِنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
فَتَخْطَفُهُ
அவரைக் கொத்திச் சென்றன
ٱلطَّيْرُ
பறவைகள்
أَوْ
அல்லது
تَهْوِى
எறிந்தது
بِهِ
அவரை
ٱلرِّيحُ
காற்று
فِى مَكَانٍ
இடத்தில்
سَحِيقٍ
தூரமான

Hunafaaa'a lillaahi ghaira mushrikeena bih; wa mai yushrik billaahi faka annamaa kharra minas samaaa'i fatakh tafuhut tairu aw tahwee bihir reehu bee makaanin saheeq

அல்லாஹ்வுக்கு இணை வைக்காது, அவன் ஒருவனுக்கே முற்றிலும் தலைசாய்த்து விடுங்கள். எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்தவனைப் போலாவான். அவனை (காகம், கழுகு போன்ற) பறவைகள் இறாய்ந்துக் கொண்டு போய்விடும் அல்லது காற்று வெகு தூரத்திற்கு அடித்துக்கொண்டு சென்றுவிடும்.

Tafseer

ذَٰلِكَ
அவைதான்
وَمَن
இன்னும் எவர்
يُعَظِّمْ
கண்ணியப் படுத்துவாரோ
شَعَٰٓئِرَ
அடையாளங்களை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
فَإِنَّهَا
நிச்சயமாக அது
مِن تَقْوَى
இறையச்சத்திலிருந்து
ٱلْقُلُوبِ
உள்ளங்களின்

Zaalika wa mai yu'azzim sha'aaa'iral laahi fa innahaa min taqwal quloob

இதுவே (அவனுடைய கதியாகும்.) எவர் அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட அடையாளங்களை கண்ணியப்படுத்துகின்றாரோ அது அவருடைய உள்ளத்தின் இறை அச்சத்தை அறிவிக்கிறது.

Tafseer

لَكُمْ
உங்களுக்கு
فِيهَا
இவற்றில்
مَنَٰفِعُ
பலன்கள் உள்ளன
إِلَىٰٓ
வரை
أَجَلٍ
ஒரு காலம்
مُّسَمًّى
குறிப்பிட்ட
ثُمَّ
பின்னர்
مَحِلُّهَآ
அவற்றுக்குரிய இடம்
إِلَى
பக்கம்
ٱلْبَيْتِ
அல் பைத்துல்
ٱلْعَتِيقِ
அதீக்

Lakum feehaa manaafi'u ilaaa ajalim musamman summa mahilluhaaa ilal Baitil 'Ateeq

(குர்பானிக்காக ஏற்பட்ட ஆடு, மாடு, ஒட்டகங்களின் பாலருந்தலாம்; சவாரி செய்யலாம். இவ்வாறு) ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் நீங்கள் அவைகளைக் கொண்டு பயனடையலாம். பின்னர், அவைகளை கண்ணியம் பொருந்திய பழமை வாய்ந்த ஆலயத்திடம் சேர்ப்பித்து விட வேண்டியது.

Tafseer

وَلِكُلِّ
ஒவ்வொரு
أُمَّةٍ
சமுதாயத்திற்கும்
جَعَلْنَا
ஆக்கி இருக்கிறோம்
مَنسَكًا
குர்பானியை அறுப்பதை
لِّيَذْكُرُوا۟
நினைவு கூருவதற்காக
ٱسْمَ
பெயரை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
عَلَىٰ
மீது
مَا رَزَقَهُم
அவர்களுக்குக் கொடுத்த
مِّنۢ بَهِيمَةِ
கால்நடைகளின்
فَإِلَٰهُكُمْ
ஆக, உங்கள் கடவுள்
إِلَٰهٌ
ஒரு கடவுள்தான்
وَٰحِدٌ
ஒரே
فَلَهُۥٓ
ஆகவே, அவனுக்கே
أَسْلِمُوا۟ۗ
பணிந்து வழிபடுங்கள்
وَبَشِّرِ
நற்செய்தி கூறுவீராக
ٱلْمُخْبِتِينَ
கீழ்ப்படிந்தவர்களுக்கு

Wa likulli ummatin ja'alnaa mansakal liyazkurus mal laahi 'alaa maa razaqahum mim baheematil an'aam; failaahukum ilaahunw Waahidun falahooo aslimoo; wa bashshiril mukhbiteen

குர்பானி செய்வதை ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமையாக்கி இருக்கின்றோம். அல்லாஹ் கொடுத்திருந்த ஆடு, மாடு, ஒட்டகங்களின் மீது அவன் பெயரைக் கூறி குர்பானி செய்யுங்கள். ஆகவே, உங்களுடைய இறைவன் (ஒரே) ஒருவன்தான். ஆதலால், அவன் ஒருவனுக்கே நீங்கள் முற்றிலும் கட்டுப்பட்டு நடங்கள். உள்ளச்சம் உடையவர்களுக்கு (நபியே!) நீங்கள் நற்செய்தி கூறுங்கள்.

Tafseer

ٱلَّذِينَ
எவர்கள்
إِذَا ذُكِرَ
நினைவுகூரப்பட்டால்
ٱللَّهُ
அல்லாஹ்
وَجِلَتْ
பயப்படும்
قُلُوبُهُمْ
அவர்களது உள்ளங்கள்
وَٱلصَّٰبِرِينَ
இன்னும் பொறுமையாக இருப்பார்கள்
عَلَىٰ
மீது
مَآ أَصَابَهُمْ
அவர்களுக்கு ஏற்பட்டவற்றின்
وَٱلْمُقِيمِى
இன்னும் நிலைநிறுத்துவார்கள்
ٱلصَّلَوٰةِ
தொழுகையை
وَمِمَّا رَزَقْنَٰهُمْ
இன்னும் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து
يُنفِقُونَ
தர்மம் செய்வார்கள்

Allazeena izaa zukiral laahu wajilat quloobuhum wassaabireena 'alaa maaa asaabahum walmuqeemis Salaati wa mimmaa razaqnaahum yunfiqoon

அவர்கள் எத்தகையவர்கள் என்றால், அல்லாஹ்வுடைய திருப்பெயர் கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும். அவர்களுக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுமையுடன் சகித்துக்கொள்வார்கள். தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள். நாம் அவர்களுக்கு அளித்தவைகளில் தானமும் செய்வார்கள்.

Tafseer

وَٱلْبُدْنَ
இன்னும் கொழுத்த ஒட்டகங்கள்
جَعَلْنَٰهَا
அவற்றை நாம் ஆக்கி இருக்கின்றோம்
لَكُم
உங்களுக்கு
مِّن شَعَٰٓئِرِ
அடையாள சின்னங்களில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
لَكُمْ
உங்களுக்கு
فِيهَا
அவற்றில்
خَيْرٌۖ
நன்மைகள் உண்டு
فَٱذْكُرُوا۟
ஆகவே கூறுங்கள்
ٱسْمَ
பெயரை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
عَلَيْهَا
அவற்றின் மீது
صَوَآفَّۖ
நின்றவையாக இருக்க
فَإِذَا وَجَبَتْ
சாய்ந்து விட்டால்
جُنُوبُهَا
அவற்றின் விலாக்கள்
فَكُلُوا۟
சாப்பிடுங்கள்
مِنْهَا
அவற்றிலிருந்து
وَأَطْعِمُوا۟
இன்னும் உணவளியுங்கள்
ٱلْقَانِعَ
யாசிப்பவருக்கும்
وَٱلْمُعْتَرَّۚ
எதிர்பார்த்து வருபவருக்கும்
كَذَٰلِكَ
இவ்வாறே
سَخَّرْنَٰهَا
அதை வசப்படுத்தித் தந்தோம்
لَكُمْ
உங்களுக்கு
لَعَلَّكُمْ تَشْكُرُونَ
நீங்கள் நன்றி செலுத்துவதற்காக

Walbudna ja'alnaahaa lakum min sha'aaa'iril laahi lakum feehaa khairun fazkurusmal laahi 'alaihaa sawaaff; fa izaa wajabat junoobuhaa fakuloo minhaa wa at'imul qaani'a walmu'tarr; kazaalika sakhkharnaahaa lakum la'allakum tashkuroon

குர்பானியின் ஒட்டகத்தை அல்லாஹ்வின் அடையாள சின்னங்களில் ஒன்றாக நாம் உங்களுக்கு ஆக்கியிருக்கிறோம். அதில் உங்களுக்குத்தான் பெரும் நன்மை இருக்கிறது. ஆகவே, (அதன் இடப்பக்க முன் காலைக்கட்டி மற்ற மூன்று கால்களில்) நிறுத்திவைத்து அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுங்கள். அது கீழே விழுந்து (உயிர்)விட்டால் அதிலிருந்து நீங்களும் புசியுங்கள். அதைக் கேட்டவர்களுக்கும், கேட்காதவர்களுக்கும் கொடுங்கள். நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு இவ்வாறு அதனை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தோம்.

Tafseer

لَن يَنَالَ
அறவே அடையாது
ٱللَّهَ
அல்லாஹ்வை
لُحُومُهَا
அவற்றின்இறைச்சிகள்
وَلَا دِمَآؤُهَا
இன்னும் அவற்றின்இரத்தங்கள்
وَلَٰكِن
எனினும்
يَنَالُهُ
அவனை அடையும்
ٱلتَّقْوَىٰ
இறையச்சம்
مِنكُمْۚ
உங்களிடமிருந்து
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
سَخَّرَهَا
அவற்றை வசப்படுத்திக் கொடுத்தான்
لَكُمْ
உங்களுக்கு
لِتُكَبِّرُوا۟
பெருமைப் படுத்துவதற்காக
ٱللَّهَ
அல்லாஹ்வை
عَلَىٰ مَا
அவன் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக
وَبَشِّرِ
நற்செய்தி கூறுவீராக
ٱلْمُحْسِنِينَ
அழகிய முறையில் கீழ்ப்படிகின்றவர்களுக்கு

Lany yanaalal laaha luhoo muhaa wa laa dimaaa'uhaa wa laakiny yanaaluhut taqwaa minkum; kazaalika sakhkharhaa lakum litukabbirul laaha 'alaa ma hadaakum; wa bashshirul muhsineen

(இவ்வாறு குர்பானி செய்தபோதிலும்) அதன் மாமிசமோ அல்லது அதன் இரத்தமோ அல்லாஹ்வை அடைந்து விடுவது இல்லை. உங்களுடைய இறை அச்சம்தான் அவனை அடையும். அல்லாஹ் உங்களுக்கு நேரான வழியை அறிவித்ததற்காக (அவனுக்கு நீங்கள் குர்பானி கொடுத்து) அவனை நீங்கள் பெருமைப்படுத்தும் பொருட்டு இவ்வாறு அவைகளை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (நபியே! இவ்வாறு குர்பானி கொடுத்து) நன்றி செய்பவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
يُدَٰفِعُ
தடுத்து விடுவான்
عَنِ
விட்டும்
ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ۗ
நம்பிக்கை கொண்டவர்களை
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
كُلَّ
எல்லா
خَوَّانٍ
மோசடிக்காரர்களை
كَفُورٍ
நன்றிகெட்டவர்களை

Innal laaha yudaafi' 'anil lazeena aamanoo; innal laaha laa yuhibbu kulla khawwaanin kafoor

நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கை கொண்டவர்களை (நிராகரிப்பவர்களின்) தீங்கில் இருந்து தடுத்துக் கொள்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மோசக்காரரையும் நன்றி கெட்டவர்களையும் விரும்புவதில்லை.

Tafseer

أُذِنَ
அனுமதிக்கப்பட்டுள்ளது
لِلَّذِينَ يُقَٰتَلُونَ
சண்டையிடப்படக் கூடியவர்களுக்கு
بِأَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
ظُلِمُوا۟ۚ
அநீதியிழைக்கப்பட்டார்கள்
وَإِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
عَلَىٰ نَصْرِهِمْ
அவர்களுக்கு உதவி செய்ய
لَقَدِيرٌ
பேராற்றலுடையவன்

Uzina lillazeena yuqaataloona bi annahum zulimoo; wa innal laaha 'alaa nasrihim la Qaderr

(நிராகரிப்பவர்களால்) அநியாயத்தில் சிக்கி, போருக்கு நிர்பந்திக்கப்பட்ட (நம்பிக்கை கொண்ட)வர்களுக்கு அவர்களை எதிர்த்து போர் புரிய அனுமதியளிக்கப்பட்டு விட்டது. நிச்சயமாக அல்லாஹ் இவர்களுக்கு உதவி செய்ய பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.

Tafseer

ٱلَّذِينَ أُخْرِجُوا۟
எவர்கள்/வெளியேற்றப்பட்டார்கள்
مِن دِيَٰرِهِم
தங்கள் இல்லங்களிலிருந்து
بِغَيْرِ حَقٍّ
எவ்வித நியாயமுமின்றி
إِلَّآ
தவிர
أَن يَقُولُوا۟
அவர்கள் கூறுவதற்காகவே
رَبُّنَا
எங்கள் இறைவன்
ٱللَّهُۗ
அல்லாஹ்
وَلَوْلَا دَفْعُ
பாதுகாப்பது இல்லை என்றால்
ٱللَّهِ
அல்லாஹ்
ٱلنَّاسَ
மக்களை
بَعْضَهُم
அவர்களில் சிலரை
بِبَعْضٍ
சிலரைக் கொண்டு
لَّهُدِّمَتْ
உடைக்கப்பட்டிருக்கும்
صَوَٰمِعُ
துறவிகளின் தங்குமிடங்களும்
وَبِيَعٌ
கிறித்துவ ஆலயங்களும்
وَصَلَوَٰتٌ
யூத ஆலயங்களும்
وَمَسَٰجِدُ
மஸ்ஜிதுகளும்
يُذْكَرُ
நினைவு கூரப்படும்
فِيهَا
அதில்
ٱسْمُ
பெயரை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
كَثِيرًاۗ
அதிகமாக
وَلَيَنصُرَنَّ
நிச்சயமாக அவருக்கு உதவுவான்
ٱللَّهُ
அல்லாஹ்
مَن
எவர்
يَنصُرُهُۥٓۗ
அவனுக்கு உதவுவாரோ
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
لَقَوِىٌّ
வலிமை உள்ளவன்
عَزِيزٌ
மிகைத்தவன்

Allazeena ukhrijoo min diyaarihim bighairi haqqin illaaa any yaqooloo rabbunallaah; wa law laa daf'ul laahin naasa ba'dahum biba'dil lahuddimat sawaami'u wa biya'unw wa salawaatunw wa masaajidu yuzkaru feehasmul laahi kaseeraa; wa layansurannal laahu mai yansuruh; innal laaha la qawiyyun 'Azeez

இவர்கள் (எத்தகையவரென்றால்,) தங்களுடைய இறைவன் அல்லாஹ்தான் என்று கூறியதற்காக நியாயமின்றி தங்கள் வீடுகளிலிருந்து எதிரிகளால் துரத்தப்பட்டார்கள். மனிதர்களில் (அநியாயம் செய்யும்) சிலரை, சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காத வரையில் கிறிஸ்தவர்களின் ஆலயங்களும், அவர்களுடைய மடங்களும், யூதர்களுடைய ஆலயங்களும், அல்லாஹ்வுடைய திருப்பெயர் அதிகமாக நினைவு செய்யப்படும் பள்ளிவாசல்களும் அழிக்கப்பட்டே போயிருக்கும். அல்லாஹ்வுக்கு யார் உதவி செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக அல்லாஹ்வும் உதவி செய்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் மிகப் பலவானும், அனைவரையும் மிகைத்தவனாகவும் இருக்கின்றான்.

Tafseer