Skip to main content

وَمِنَ ٱلنَّاسِ
மக்களில் இருக்கின்றார்
مَن يَعْبُدُ
எவர்/வணங்குவார்
ٱللَّهَ
அல்லாஹ்வை
عَلَىٰ حَرْفٍۖ
சந்தேகத்துடன்
فَإِنْ أَصَابَهُۥ
அவருக்கு கிடைத்தால்
خَيْرٌ
நன்மை
ٱطْمَأَنَّ
திருப்தியடைகிறார்
بِهِۦۖ
அதைக் கொண்டு
وَإِنْ أَصَابَتْهُ
அவருக்கு ஏற்பட்டால்
فِتْنَةٌ
சோதனை
ٱنقَلَبَ
திரும்பி விடுகிறார்
عَلَىٰ
மீதே
وَجْهِهِۦ
தனது முகத்தின்
خَسِرَ
அவர் நஷ்டமடைந்து விட்டார்
ٱلدُّنْيَا
இவ்வுலகிலும்
وَٱلْءَاخِرَةَۚ
மறு உலகிலும்
ذَٰلِكَ هُوَ
இதுதான்
ٱلْخُسْرَانُ
(பெரும்) நஷ்டமாகும்
ٱلْمُبِينُ
தெளிவான

Wa minan naasi mai ya'budul laaha 'alaa harfin fa in asaabahoo khairunit maanna bihee wa in asaabat hu fitnatunin qalaba 'alaa wajhihee khasirad dunyaa wal aakhirah; zaalika huwal khusraanul mubeen

மனிதரில் பலர் (மதில் மேல் பூனையைப் போல்) உறுதியற்ற நிலைமையில் அல்லாஹ்வை வணங்குகின்றனர். அவர்கள் யாதொரு நன்மை அடையும் பட்சத்தில் அதைக்கொண்டு திருப்தி அடைகின்றனர். அவர்களுக்கு யாதொரு தீங்கேற்பட்டாலோ அவர்கள் தங்கள் முகத்தை (அல்லாஹ்வை விட்டும்) திருப்பிக் கொள்கின்றனர். இவர்கள் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைந்து விட்டனர். இதுதான் (சந்தேகமற்ற) தெளிவான பெரும் நஷ்டமாகும்.

Tafseer

يَدْعُوا۟
வணங்குகிறார்
مِن دُونِ
அல்லாஹ்வையன்றி
مَا لَا
தனக்கு தீங்கிழைக்காததை
وَمَا لَا
இன்னும் தனக்கு நன்மை செய்யாததை
ذَٰلِكَ هُوَ
இதுதான்
ٱلضَّلَٰلُ
வழிகேடாகும்
ٱلْبَعِيدُ
மிக தூரமான

Yad'oo min doonil laahi maa laa yadurruhoo wa maa laa yanfa'uh' zaalika huwad dalaalul ba'ed

இவர்கள் தங்களுக்கு யாதொரு நன்மையோ தீமையோ செய்ய சக்தியற்ற அல்லாஹ் அல்லாதவைகளை (உதவிக்கு) அழைக்கின்றனர். இது வெகுதூரமான(தொரு) வழிகேடாகும்.

Tafseer

يَدْعُوا۟
அவர் அழைக்கிறார்
لَمَن
எவரை
ضَرُّهُۥٓ
அவருடைய தீமை
أَقْرَبُ
மிக சமீபமாக இருக்கிறது
مِن نَّفْعِهِۦۚ
அவருடைய நன்மையைவிட
لَبِئْسَ ٱلْمَوْلَىٰ
இவன் கெட்ட பங்காளியாவான்
وَلَبِئْسَ ٱلْعَشِيرُ
அவன்கெட்டதோழன்

Yad'oo laman darruhooo aqrabu min naf'ih; labi'salmawlaa wa labi'sal 'asheer

நன்மை ஏற்படுவதை விட தீங்கு ஏற்படுவது எவர்களால் சாத்தியமாக இருக்கிறதோ அவர்களை இவர்கள் (தங்கள் பாதுகாவலர்கள் என) அழைக்கின்றனர். (இவர்களுடைய) அந்த பாதுகாவலர்களும் கெட்டார்கள்; அவர்களை அண்டி நிற்கும் இவர்களும் கெட்டார்கள்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
يُدْخِلُ
நுழைப்பான்
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களை
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகள்
جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
تَجْرِى
ஓடும்
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
ٱلْأَنْهَٰرُۚ
நதிகள்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
يَفْعَلُ
செய்கிறான்
مَا يُرِيدُ
தான் நாடுவதை

Innal laaha yudkhilul laeena aamanoo wa 'amilus saalihaati jannaatin tajree min tahtihal anhaar; innal laaha yaf'alu maa yureed

நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சுவனபதிக்குள் புகச்செய்கிறான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியதைச் செய்வான்.

Tafseer

مَن
யார்
كَانَ
இருக்கின்றானோ
يَظُنُّ
எண்ணுகிறான்
أَن لَّن
அவருக்கு உதவவே மாட்டான்
ٱللَّهُ
அல்லாஹ்
فِى ٱلدُّنْيَا
இவ்வுலகிலும்
وَٱلْءَاخِرَةِ
மறு உலகிலும்
فَلْيَمْدُدْ
தொங்கவிடட்டும்
بِسَبَبٍ
ஒரு கயிறை
إِلَى ٱلسَّمَآءِ
முகட்டில்
ثُمَّ
பிறகு
لْيَقْطَعْ
துண்டித்துக் கொள்ளவும்
فَلْيَنظُرْ
அவன் பார்க்கட்டும்
هَلْ يُذْهِبَنَّ
நிச்சயமாகபோக்கி விடுகிறதா
كَيْدُهُۥ
அவனுடைய சூழ்ச்சி
مَا يَغِيظُ
அவனுக்கு கோபமூட்டுவதை

Man kaana yazunnu allai yansurahul laahu fid dunyaa wal aakhirati fal yamdud bisababin ilas samaaa'i summal yaqta' falyanzur hal yuzhibanna kaiduhoo maa yagheez

எவன் (நம்முடைய தூதர் மீது பொறாமை கொண்டு) அவருக்கு அல்லாஹ் இம்மையிலோ மறுமையிலோ நிச்சயமாக உதவி செய்யமாட்டான் என்று (தன்னுடைய பொறாமையின் காரணமாக) எண்ணுகின்றானோ அவன் வீட்டி(ன் முகட்டி)ல் ஒரு கயிற்றைக் கட்டி(ச் சுருக்குப் போட்டு அதில் கழுத்தை மாட்டி) நெரித்துக் கொள்ளட்டும். தான் பொறாமை கொண்ட (அல்லாஹ்வின் உதவியை) தன்னுடைய சூழ்ச்சி மெய்யாகவே போக்கிவிட்டதா? என்று பார்க்கவும்.

Tafseer

وَكَذَٰلِكَ
இவ்வாறே
أَنزَلْنَٰهُ
இதை இறக்கினோம்
ءَايَٰتٍۭ
அத்தாட்சிகளாக
بَيِّنَٰتٍ
தெளிவான
وَأَنَّ
மேலும் நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
يَهْدِى
நேர்வழி காட்டுகின்றான்
مَن يُرِيدُ
தான் நாடியவருக்கு

Wa kazaalika anzalnaahu aayaatim baiyinaatinw wa annal laaha yahdee mai yureed

இவ்வாறு தெளிவான வசனங்களாகவே நாம் (குர்ஆனாகிய) இதனை இறக்கி வைத்தோம். நிச்சயமாக அல்லாஹ், தான் விரும்பிய வர்களை (இதன் மூலம்) நேரான வழியில் செலுத்துகின்றான்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்கள்
وَٱلَّذِينَ هَادُوا۟
இன்னும் யூதர்கள்
وَٱلصَّٰبِـِٔينَ
இன்னும் ஸாபியீன்கள்
وَٱلنَّصَٰرَىٰ
இன்னும் கிறித்தவர்கள்
وَٱلْمَجُوسَ
இன்னும் மஜுஸிகள்
وَٱلَّذِينَ أَشْرَكُوٓا۟
இன்னும் இணைவைத்தவர்கள்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
يَفْصِلُ
தீர்ப்பளிப்பான்
بَيْنَهُمْ
இவர்களுக்கு மத்தியில்
يَوْمَ ٱلْقِيَٰمَةِۚ
மறுமை நாளில்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
عَلَىٰ
மீதும்
كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின்
شَهِيدٌ
சாட்சியாளன்

Innal lazeena aamanoo wallazeena haadoo was saabi'eena wan nasaaraa wal Majoosa wallazeena ashrakooo innal laaha yafsilu bainahum yawmal qiyaamah; innal laaha 'alaa kulli shai'in shaheed

நம்பிக்கையாளர்களும், யூதர்களும், ஸாபியீன்களும், கிறிஸ்தவர்களும், (நெருப்பை வணங்கும்) மஜூஸிகளும், இணை வைத்து வணங்குபவர்களும் ஆகிய (ஒவ்வொருவரும், தாங்கள்தாம் நேரான வழியில் இருப்பதாகக் கூறுகின்றனர். எனினும், யார் நேரான வழியில் இருக்கின்றார்கள் என்பதை) இவர்களுக்கிடையில் நிச்சயமாக அல்லாஹ் மறுமை நாளில் தீர்ப்புக் கூறுவான். (இவர்களுடைய செயல்கள்) அனைத்தையும் அல்லாஹ் நிச்சயமாக பார்த்துக்கொண்டே இருக்கின்றான்.

Tafseer

أَلَمْ تَرَ
நீர் பார்க்கவில்லையா?
أَنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
يَسْجُدُ
சிரம் பணிகின்றனர்
لَهُۥ
அவனுக்குத்தான்
مَن فِى
வானங்களில் உள்ளவர்களும்
وَمَن فِى
பூமியில் உள்ளவர்களும்
وَٱلشَّمْسُ
சூரியனும்
وَٱلْقَمَرُ
சந்திரனும்
وَٱلنُّجُومُ
நட்சத்திரங்களும்
وَٱلْجِبَالُ
மலைகளும்
وَٱلشَّجَرُ
மரங்களும்
وَٱلدَّوَآبُّ
கால்நடைகளும்
وَكَثِيرٌ
அதிகமானவர்களும்
مِّنَ ٱلنَّاسِۖ
மக்களில்
وَكَثِيرٌ
இன்னும் பலர்
حَقَّ
உறுதியாகி விட்டது
عَلَيْهِ
அவர்கள் மீது
ٱلْعَذَابُۗ
வேதனை
وَمَن
இன்னும் எவரை
يُهِنِ
இழிவுபடுத்தினானோ
ٱللَّهُ
அல்லாஹ்
فَمَا
எவரும் இல்லை
لَهُۥ
அவரை
مِن مُّكْرِمٍۚ
கண்ணியப்படுத்துபவர்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
يَفْعَلُ
செய்வான்
مَا يَشَآءُ۩
தான் நாடுகின்றதை

Alam tara annal laaha yasjudu lahoo man fis samaawaati wa man fil ardi wash shamsu walqamaru wan nu joomu wal jibaalu wash shajaru wad dawaaabbu wa kaseerum minan naasi wa kaseerun haqqa 'alaihil 'azaab; wa mai yuhinil laahu famaa lahoo mim mukrim; innallaaha yaf'alu maa yashaaa

(நபியே!) வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும், சூரியனும், சந்திரனும், மலைகளும், மரங்களும், கால்நடைகளும், மனிதரில் ஒரு பெரும் தொகையினரும் நிச்சயமாக அல்லாஹ்வுக்குச் சிரம் பணிந்து வணங்குகின்றனர் என்பதை நீங்கள் காணவில்லையா? எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் மீது வேதனையே விதிக்கப்பட்டு விட்டது. எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகிறானோ அவனை ஒருவராலும் கண்ணியப்படுத்த முடியாது. நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியதையே செய்கின்றான்.

Tafseer

هَٰذَانِ خَصْمَانِ
இவ்விருவரும்
ٱخْتَصَمُوا۟
தர்க்கிக்கின்றனர்
فِى رَبِّهِمْۖ
தங்கள் இறைவனின் விஷயத்தில்
فَٱلَّذِينَ
ஆக, எவர்கள்
كَفَرُوا۟
நிராகரித்தார்களோ
قُطِّعَتْ
வெட்டப்படும்
لَهُمْ
அவர்களுக்கு
ثِيَابٌ
ஆடைகள்
مِّن نَّارٍ
நரக நெருப்பில்
يُصَبُّ
ஊற்றப்படும்
مِن فَوْقِ
மேலிருந்து
رُءُوسِهِمُ
அவர்களின் தலைகளுக்கு
ٱلْحَمِيمُ
நன்கு கொதிக்கின்ற சுடு நீர்

Haazaani khasmaanikh tasamoo fee Rabbihim fal lazeena kafaroo qutti'at lahum siyaabum min naar; yusabbu min fawqi ru'oosihimul hameem

(இறைவனுக்கு கட்டுப்படுபவர்கள், இறைவனுக்கு மாறு செய்பவர்கள் ஆகிய) இவ்விரு வகுப்பாரும் தங்கள் இறைவனைப் பற்றித் தர்க்கித்துக் கொண்டிருக்கின்றனர். ஆகவே, அவர்களில் எவர்கள் (உண்மையான இறைவனை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பினால் ஆன ஆடை தயார் செய்யப் பட்டிருக்கிறது. (அக்கினியைப் போல்) கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீர் அவர்களுடைய தலைகளின் மீது ஊற்றப்படும்.

Tafseer

يُصْهَرُ
உருக்கப்படும்
بِهِۦ
அதன்மூலம்
مَا فِى
அவர்களுடைய வயிறுகளில் உள்ளவை
وَٱلْجُلُودُ
இன்னும் தோல்கள்

Yusharu bihee maa fee butoonihim waljulood

அவர்களுடைய வயிற்றினுள் இருக்கும் குடல்களும் (தேகத்தின் மேல் இருக்கும்) தோல்களும் அதனால் உருகிவிடும்.

Tafseer