Skip to main content

إِنِّى
நிச்சயமாக நான்
جَزَيْتُهُمُ
அவர்களுக்கு கூலியாகக் கொடுத்தேன்
ٱلْيَوْمَ
இன்றைய தினம்
بِمَا صَبَرُوٓا۟
அவர்கள் பொறுமையாக இருந்த காரணத்தால்
أَنَّهُمْ هُمُ
நிச்சயமாக அவர்கள்தான்
ٱلْفَآئِزُونَ
வெற்றியாளர்கள்

Inee jazaituhumul Yawma bimaa sabarooo annahum humul faaa'izoon

(உங்கள் பரிகாசத்தை) அவர்கள் சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாக இன்றைய தினம் நிச்சயமாக நாம் அவர்களுக்கு நற்கூலி கொடுத்தோம். மெய்யாகவே அவர்கள்தாம் வெற்றி பெற்றவர்கள்" (என்றும் இறைவன் கூறுவான்).

Tafseer

قَٰلَ
கூறுவான்
كَمْ
எத்தனை
لَبِثْتُمْ
தங்கி இருந்தீர்கள்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
عَدَدَ
பல
سِنِينَ
ஆண்டுகள்

Qaala kam labistum fil ardi 'adada sineen

அன்றி "நீங்கள் பூமியில் எத்தனை வருடங்கள் இருந்தீர்கள்?" எனக் கேட்பான்.

Tafseer

قَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
لَبِثْنَا
தங்கினோம்
يَوْمًا
ஒரு நாள்
أَوْ
அல்லது
بَعْضَ يَوْمٍ
பகுதி நாள்
فَسْـَٔلِ
நீ கேட்பாயாக
ٱلْعَآدِّينَ
எண்ணக்கூடியவர்களிடம்

Qaaloo labisnaa yawman aw ba'da yawmin fas'alil 'aaaddeen

அதற்கவர்கள் "ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிது பாகம் தங்கியிருந்திருப்போம். (இதைப்பற்றி) கணக்கு வைத்திருப்பவர்களை நீ கேட்பாயாக!" எனக் கூறுவார்கள்.

Tafseer

قَٰلَ
அவன் கூறுவான்
إِن لَّبِثْتُمْ
நீங்கள் தங்கவில்லை
إِلَّا
தவிர
قَلِيلًاۖ
குறைவாகவே
لَّوْ أَنَّكُمْ
வேண்டுமே
كُنتُمْ
நீங்கள் இருந்தீர்கள்
تَعْلَمُونَ
அறிகின்றீர்கள்

Qaala il labistum illaa qaleelal law annakum kuntum ta'lamoon

அதற்கவன் "ஒரு சொற்ப காலத்தைத் தவிர (பூமியில் அதிக காலம்) நீங்கள் தங்கவில்லை. இதை முன்னதாகவே நீங்கள் அறிந்திருக்க வேண்டாமா?" என்று கூறுவான்.

Tafseer

أَفَحَسِبْتُمْ
எண்ணிக் கொண்டீர்களா
أَنَّمَا خَلَقْنَٰكُمْ
நாம் உங்களைப் படைத்ததெல்லாம்
عَبَثًا
வீணாகத்தான்
وَأَنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
إِلَيْنَا
நம்மிடம்
لَا تُرْجَعُونَ
திரும்பக் கொண்டு வரப்பட மாட்டீர்கள்

Afahsibtum annamaa khalaqnaakum 'abasanw wa annakum ilainaa laa turja'oon

("என்னே!) நாம் உங்களை படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடம் கொண்டு வரப்படமாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களா?" (என்று கேட்பான்.)

Tafseer

فَتَعَٰلَى
எனவே மிக உயர்ந்தவன்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلْمَلِكُ
அரசனாகிய
ٱلْحَقُّۖ
உண்மையாளனாகிய
لَآ
அறவே இல்லை
إِلَٰهَ
வணக்கத்திற்குரிய இறைவன்
إِلَّا
தவிர
هُوَ
அவனை
رَبُّ
அதிபதி
ٱلْعَرْشِ
அர்ஷுடைய
ٱلْكَرِيمِ
கண்ணியமிக்க

Fata'aalal laahul Malikul Haqq; laaa ilaaha illaa Huwa Rabbul 'Arshil Kareem

ஆகவே, மெய்யான அரசனாகிய அல்லாஹ் மிக்க உயர்ந்தவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் இல்லை. கண்ணியமிக்க அர்ஷுக்குச் சொந்தக்காரன் அவனே!

Tafseer

وَمَن
யார்
يَدْعُ
அழைப்பாரோ
مَعَ ٱللَّهِ
அல்லாஹ்வுடன்
إِلَٰهًا
ஒரு கடவுளை
ءَاخَرَ
வேறு
لَا بُرْهَٰنَ
அறவே ஆதாரம் இல்லாமல் இருக்க
لَهُۥ
அதற்கு
بِهِۦ
அவரிடம்
فَإِنَّمَا حِسَابُهُۥ
அவருடைய விசாரணையெல்லாம்
عِندَ رَبِّهِۦٓۚ
அவரது இறைவனிடம்தான்
إِنَّهُۥ
நிச்சயமாக
لَا يُفْلِحُ
வெற்றி பெறமாட்டார்கள்
ٱلْكَٰفِرُونَ
நிராகரிப்பாளர்கள்

Wa mai yad'u ma'allaahi ilaahan aakhara laa burhaana lahoo bihee fa innnamaa hisaabuhoo 'inda Rabbih; innahoo laa yuflihul kaafiroon

(நபியே!) எவன் அல்லாஹ்வுடன் வேறு இறைவனை (வணக்கத்திற்குரியவன் என) அழைக்கின்றானோ அவனிடத்தில் அதற்குரிய யாதொரு அத்தாட்சியும் இல்லை. அவனுடைய (பாவக்) கணக்கு அவனுடைய இறைவனிடத்தில்தான் (தீர்க்கப்படும்). நிச்சயமாக (உண்மையை) நிராகரிக்கும் இத்தகையவர் வெற்றி பெறமாட்டார்கள்.

Tafseer

وَقُل
கூறுவீராக
رَّبِّ
என் இறைவா
ٱغْفِرْ
மன்னிப்பாயாக
وَٱرْحَمْ
இன்னும் கருணைபுரிவாயாக
وَأَنتَ
நீ
خَيْرُ
மிகச் சிறந்தவன்
ٱلرَّٰحِمِينَ
கருணை புரிபவர்களில்

Wa qur Rabbigh fir warham wa Anta khairur raahimeen

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: என் இறைவனே! நீ (என்னை) மன்னித்துக் கிருபை செய்வாயாக! கிருபை செய்பவர்களிளெல்லாம் நீதான் மிக்க மேலானவன்.

Tafseer