Skip to main content

فَإِذَا نُفِخَ
ஊதப்பட்டால்
فِى ٱلصُّورِ
சூரில்
فَلَآ أَنسَابَ
உறவுகள் அறவே இருக்காது
بَيْنَهُمْ يَوْمَئِذٍ
அவர்களுக்கு மத்தியில்/அந்நாளில்
وَلَا يَتَسَآءَلُونَ
அவர்கள் தங்களுக்குள் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்

Fa izaa nufikha fis Soori falaaa ansaaba bainahum yawma'izinw wa laa yatasaaa'aloon

சூர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையில் பந்துத்துவம் இருக்காது. ஒருவரின் (சுக துக்க) செய்தியை மற்றொருவர் விசாரிக்கவும் மாட்டார். (தத்தம் கவலையே பெரிதாக இருக்கும்.)

Tafseer

فَمَن
எனவே, எவர்
ثَقُلَتْ
கனத்தனவோ
مَوَٰزِينُهُۥ
அவரின் எடைகள்
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
ٱلْمُفْلِحُونَ
வெற்றி பெற்றவர்கள்

Faman saqulat mawaazee nuhoo fa ulaaa'ika humul muflihoon

எவர்களுடைய நன்மையின் எடை கணக்கிறதோ அவர்கள்தாம் வெற்றி அடைவார்கள்.

Tafseer

وَمَنْ
எவர்
خَفَّتْ
இலகுவாகி விட்டனவோ
مَوَٰزِينُهُۥ
அவரின் எடைகள்
فَأُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ
அவர்கள்தான்
خَسِرُوٓا۟
நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள்
أَنفُسَهُمْ
தங்களுக்குத் தாமே
فِى جَهَنَّمَ
நரகில்
خَٰلِدُونَ
அவர்கள் நிரந்தரமானவர்கள்

Wa man khaffat mawaa zeenuhoo fa ulaaa'ikal lazeena khasiroon anfusahum fee Jahannnama khaalidoon

எவர்களுடைய (நன்மையின்) எடை குறைகின்றதோ அவர்கள் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டு எந்நாளுமே நரகத்தில் தங்கிவிடுவார்கள்.

Tafseer

تَلْفَحُ
பொசுக்கிவிடும்
وُجُوهَهُمُ
அவர்களது முகத்தை
ٱلنَّارُ
நெருப்பு
وَهُمْ
இன்னும் அவர்கள்
فِيهَا
அதில்
كَٰلِحُونَ
உதடுகள் பொசுங்கி பற்கள் வெளிப்பட்டவர்களாக இருப்பார்கள்

Talfahu wujoohahumun Naaru wa hum feehaa kaalihood

அவர்களுடைய முகங்களை (நரகத்தின்) நெருப்புப் பொசுக்கும். அவர்களுடைய (உதடுகளெல்லாம் வெந்து சுருண்டு) முகம் விகாரமாக இருக்கும்.

Tafseer

أَلَمْ تَكُنْ
இருந்ததல்லவா
ءَايَٰتِى
எனது வசனங்கள்
تُتْلَىٰ
ஓதப்படுகின்றன
عَلَيْكُمْ
உங்கள் மீது
فَكُنتُم
ஆனால், நீங்கள் இருந்தீர்கள்
بِهَا
அவற்றை
تُكَذِّبُونَ
பொய்ப்பிக்கின்றீர்கள்

Alam takun Aayaatee tutlaa 'alaikum fakuntum bihaa tukazziboon

(அவர்களை நோக்கி) "உங்கள் மீது நம்முடைய வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அவற்றை நீங்கள் பொய்யாக்கிக் கொண்டே இருந்தீர்கள்" (என்று கூறப்படும்.)

Tafseer

قَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
رَبَّنَا
எங்கள் இறைவா
غَلَبَتْ
மிகைத்து விட்டது
عَلَيْنَا
எங்களை
شِقْوَتُنَا
எனவே துர்பாக்கியம்
وَكُنَّا
நாங்கள் இருந்தோம்
قَوْمًا
மக்களாக
ضَآلِّينَ
வழிகெட்டவர்கள்

Qaaloo Rabbanaa ghalabat 'alainaa shiqwatunaa wa kunnaa qawman daaalleen

அதற்கவர்கள் "எங்கள் இறைவனே! எங்களுடைய துரதிர்ஷ்டம் எங்களை மீறிவிட்டது. ஆதலால் நாங்கள் தவறான வழியில் சென்றுவிட்டோம்" என்று கூறுவார்கள்.

Tafseer

رَبَّنَآ
எங்கள் இறைவா
أَخْرِجْنَا
எங்களை வெளியேற்று
مِنْهَا
அதிலிருந்து
فَإِنْ عُدْنَا
திரும்பச் சென்றால்
فَإِنَّا
நிச்சயமாக நாங்கள்
ظَٰلِمُونَ
அநியாயக்காரர்கள்தான்

Rabbanaa akhrijnaa minhaa fa in 'udnaa fa innaa zaalimoon

(அன்றி) "எங்கள் இறைவனே! இ(ந்த நரகத்)திலிருந்து எங்களை வெளிப்படுத்திவிடு. (பாவம் செய்ய) பின்னும் முற்பட்டால் நாங்கள் மகா அநியாயக்காரர்களாகி விடுவோம்" (என்பார்கள்).

Tafseer

قَالَ
அவன் கூறுவான்
ٱخْسَـُٔوا۟ فِيهَا
நீங்கள் இழிவுடன் தங்கி விடுங்கள்/அதில்
وَلَا تُكَلِّمُونِ
என்னிடம்பேசாதீர்கள்

Qaalakh sa'oo feehaa wa laa tukallimoon

அதற்கவன் "அதிலேயே சிறுமைப்பட்டுக் கிடங்கள். நீங்கள் என்னுடன் பேசாதீர்கள்" என்று கூறுவான்.

Tafseer

إِنَّهُۥ
நிச்சயமாக
كَانَ
இருந்தார்(கள்)
فَرِيقٌ
ஒரு கூட்டம்
مِّنْ عِبَادِى
என் அடியார்களில்
يَقُولُونَ
கூறுபவர்களாக
رَبَّنَآ
எங்கள் இறைவா
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
فَٱغْفِرْ
ஆகவே மன்னித்து விடு
لَنَا
எங்களை
وَٱرْحَمْنَا
எங்கள் மீது கருணை புரி
وَأَنتَ
இன்னும் நீ
خَيْرُ
மிகச் சிறந்தவன்
ٱلرَّٰحِمِينَ
கருணை புரிபவர்களில்

Innahoo kaana fareequm min 'ibaadee yaqooloona Rabbanaaa aamannaa faghfir lanaa warhamnaa wa Anta khairur raahimeen

நிச்சயமாக நம்முடைய அடியார்களில் ஒரு வகுப்பார் இருந்தனர். அவர்கள் (என்னை நோக்கி) "எங்கள் இறைவனே! நாங்கள் (உன்னை நம்பிக்கை கொள்கிறோம். நீ எங்களுடைய குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது அருள் புரிவாயாக! அருள் புரிபவர்களிளெல்லாம் நீ மிக்க மேலானவன்" என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்.

Tafseer

فَٱتَّخَذْتُمُوهُمْ
ஆனால் எடுத்துக்கொண்டீர்கள் அவர்களை
سِخْرِيًّا
பரிகாசமாக
حَتَّىٰٓ
இறுதியாக
أَنسَوْكُمْ
அவர்கள் மறக்க வைத்துவிட்டார்கள் உங்களை
ذِكْرِى
என் நினைவை
وَكُنتُم
நீங்கள் இருந்தீர்கள்
مِّنْهُمْ
அவர்களைப் பார்த்து
تَضْحَكُونَ
சிரிக்கின்றீர்கள்

Fattakhaztumoohum sikhriyyan hattaaa ansawkum zikree wa kuntum minhum tadhakoon

ஆனால் "நீங்களோ என்னை முற்றிலும் மறந்துவிட்டு அவர்களைப் பரிகசித்து அவர்களைப் பற்றிச் சிரித்துக் கொண்டிருந்தீர்கள்.

Tafseer