Skip to main content

مَا ٱتَّخَذَ
ஏற்படுத்திக் கொள்ளவில்லை
ٱللَّهُ
அல்லாஹ்
مِن وَلَدٍ
எந்த ஒரு குழந்தையையும்
وَمَا كَانَ
இருக்கவில்லை
مَعَهُۥ
அவனுடன்
مِنْ إِلَٰهٍۚ
எந்தக் கடவுளும்
إِذًا
அப்படி இருந்திருந்தால்
لَّذَهَبَ
கொண்டு சென்று விடுவார்கள்
كُلُّ
ஒவ்வொரு
إِلَٰهٍۭ
கடவுளும்
بِمَا خَلَقَ
இன்னும் அவர்களில் சிலர் ஆதிக்கம் செலுத்தி இருப்பார்கள்
وَلَعَلَا بَعْضُهُمْ
தான் படைத்ததை
عَلَىٰ بَعْضٍۚ
சிலர் மீது
سُبْحَٰنَ
மகா பரிசுத்தமானவன்
ٱللَّهِ
அல்லாஹ்
عَمَّا يَصِفُونَ
அவர்கள் வர்ணிக்கின்றவற்றை விட்டு

Mat takhazal laahu minw waladinw wa maa kaana ma'ahoo min ilaah; izal lazahaba kullu ilaahim bimaa khalaqa wa la'alaa ba'duhum 'alaa ba'd; Subhaannal laahi 'ammaa yasifoon

அல்லாஹ் சந்ததி எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடன் வணக்கத்திற்குரிய வேறு இறைவனுமில்லை. அவ்வாறாயின் ஒவ்வொரு இறைவனும் தான் படைத்தவைகளைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு, ஒருவர் மற்றவர் மீது போர் புரிய ஆரம்பித்து விடுவர். (நிராகரிக்கும்) இவர்கள் வர்ணிக்கும் இத்தகைய வர்ணிப்புகளை விட்டும் அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்.

Tafseer

عَٰلِمِ
நன்கறிந்தவன்
ٱلْغَيْبِ
மறைவையும்
وَٱلشَّهَٰدَةِ
இன்னும் வெளிப்படையையும்
فَتَعَٰلَىٰ
அவன் மிக உயர்ந்தவன்
عَمَّا يُشْرِكُونَ
அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும்

'Aalimil Ghaibi wash shahhaadati fata'aalaa 'ammaa yushrikoon

அவன் மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவன். இவர்கள் இணைவைப்பவைகளை விட அல்லாஹ் மிக்க மேலானவன்.

Tafseer

قُل
கூறுவீராக
رَّبِّ
என் இறைவா
إِمَّا تُرِيَنِّى
நீ எனக்கு காண்பித்தால்
مَا يُوعَدُونَ
அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை

Qur Rabbi immmaa turiyannee maa yoo'adoon

"என் இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களிக்கும் வேதனையை நீ எனக்கு காண்பிப்பதாயின்,

Tafseer

رَبِّ
என் இறைவா
فَلَا تَجْعَلْنِى
ஆகவே, என்னையும் நீ ஆக்கிவிடாதே
فِى ٱلْقَوْمِ
மக்களில்
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்கார

Rabbi falaa taj'alnee fil qawmiz zaalimeen

என் இறைவனே! (அச்சமயம்) இந்த அநியாயக்கார மக்களுடன் என்னை நீ சேர்த்து விடாதே" என்று (நபியே!) நீங்கள் பிரார்த்தியுங்கள்.

Tafseer

وَإِنَّا
நிச்சயமாக
عَلَىٰٓ أَن
நாம் உமக்கு காண்பிப்பதற்கு
مَا
நாம் வாக்களிப்பதை
نَعِدُهُمْ
நாம் வாக்களிப்பதை அவர்களுக்கு
لَقَٰدِرُونَ
ஆற்றலுடையவர்கள்தான்

Wa innaa 'alaaa an nuriyaka maa na'iduhum laqaadiroon

ஏனென்றால், நிச்சயமாக நாம் அவர்களுக்கு வாக்களித்திருக்கும் வேதனையை உங்களுக்குக் காண்பிக்கவும் ஆற்றல் பெற்றவர்களாக இருக்கின்றோம்.

Tafseer

ٱدْفَعْ
தடுப்பீராக
بِٱلَّتِى
கொண்டு
هِىَ أَحْسَنُ
மிக அழகிய (குணத்)தை
ٱلسَّيِّئَةَۚ
கெட்டதை
نَحْنُ
நாம்
أَعْلَمُ
மிக அறிந்தவர்கள்
بِمَا يَصِفُونَ
அவர்கள் வர்ணிக்கின்றவற்றை

Idfa' billate hiya ahsanus saiyi'ah; nahnu a'lamu bimaa yasifoon

(நபியே!) தீமையை மிக அழகியதைக் கொண்டே நீங்கள் தடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் (உங்களைப் பற்றிக்) கூறுவதை நாம் நன்கறிவோம்.

Tafseer

وَقُل
கூறுவீராக
رَّبِّ
என் இறைவா
أَعُوذُ بِكَ
உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்
مِنْ هَمَزَٰتِ
நெறிப்பதை விட்டும்
ٱلشَّيَٰطِينِ
ஷைத்தான்கள்

Wa qur Rabbi a'oozu bika min hamazaatish Shayaateen

அன்றி "என் இறைவனே! (பாவமான காரியங்களைச் செய்யும்படித் தூண்டும்) ஷைத்தானுடைய தூண்டுதல்களிலிருந்து என்னை காப்பாற்றும்படி நான் உன்னிடம் கோருகிறேன்.

Tafseer

وَأَعُوذُ بِكَ
உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் / என் இறைவா!
أَن يَحْضُرُونِ
அவர்கள் என்னிடம் வருவதை விட்டும்

Wa a'oozu bika Rabbi ai-yahduroon

என் இறைவனே! ஷைத்தான் என்னிடம் வராமலிருக்கவும் நான் உன்னிடம் கோருகிறேன்" என்று (நபியே!) நீங்கள் பிரார்த்தித்துக் கொண்டிருங்கள்.

Tafseer

حَتَّىٰٓ
இறுதியாக
إِذَا جَآءَ
வந்தால்
أَحَدَهُمُ
ஒருவருக்கு அவர்களில்
ٱلْمَوْتُ
மரணம்
قَالَ
அவன் கூறுகிறான்
رَبِّ
என் இறைவா!
ٱرْجِعُونِ
என்னை திருப்பு

Hattaaa izaa jaaa'a ahada humul mawtu qaala Rabbir ji'oon

(நிராகரித்துக் கொண்டிருக்கும்) அவர்களில் எவனுக்கும் மரணம் வந்தாலோ (அவன் தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! என்னை (உலகத்திற்கு) திரும்ப அனுப்பிவிடு.

Tafseer

لَعَلِّىٓ أَعْمَلُ
நான் செய்வதற்காக
صَٰلِحًا
நல்ல அமல்களை
فِيمَا تَرَكْتُۚ
நான் விட்டுவிட்டவற்றிலிருந்து
كَلَّآۚ
ஒரு போதும் அவ்வாறு அல்ல
إِنَّهَا
நிச்சயமாக இது
كَلِمَةٌ
ஒரு பேச்சாகும்
هُوَ
அவன்
قَآئِلُهَاۖ
அவன் அதைக் கூறிக்கொண்டே இருப்பான்
وَمِن
இருக்கிறது
وَرَآئِهِم
அவர்களுக்கு முன்
بَرْزَخٌ
ஒரு தடை
إِلَىٰ يَوْمِ
நாள் வரை
يُبْعَثُونَ
எழுப்பப்படுகின்ற

La'alleee a'malu saalihan feemaa taraktu kallaa; innahaa kalimatun huwa qaaa'iluhaa wa minw waraaa'him barzakhun ilaa Yawmi yub'asoon

நான் விட்டு வந்த அ(ந்த உலகத்)தில் (இனி) நல்ல காரியங்களையே நான் செய்து கொண்டிருப்பேன்" என்று கூறுவான். (எனினும்,) அது ஆகக்கூடிய காரியமன்று. (இத்தகைய சந்தர்ப்பங்களில்) அவன் கூறக்கூடியது வெறும் வார்த்தையே (யன்றி வேறில்லை.) அவர்களுக்கு முன் ஓர் அரண் ஏற்பட்டு விடும். (உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாள் வரையில் அதில் தங்கிவிடுவார்கள்.

Tafseer