Skip to main content

بَلْ قَالُوا۟
மாறாக கூறினர்
مِثْلَ
போன்றே
مَا قَالَ
கூறியது
ٱلْأَوَّلُونَ
முன்னோர்கள்

Bal qaaloo misla maa qaalal awwaloon

என்னே! இவர்களுக்கு முன்னிருந்தவர்கள் கூறியவாறே இவர்களும் கூறுகின்றனர்.

Tafseer

قَالُوٓا۟
கூறினர்
أَءِذَا مِتْنَا
?/நாங்கள் இறந்து விட்டால்
وَكُنَّا
இன்னும் மாறிவிட்டால்
تُرَابًا
மண்ணாகவும்
وَعِظَٰمًا
எலும்புகளாகவும்
أَءِنَّا
நிச்சயமாக நாங்கள்
لَمَبْعُوثُونَ
எழுப்பப்படுவோமா

Qaalooo 'a-izaa mitnaa wa kunnaa turaabanw wa 'izaaman 'a-innaa lamab 'oosoon

(அதாவது:) "நாம் மரணித்து எலும்பாகவும் உக்கி மண்ணாகவும் போனதன் பின்னர் மெய்யாகவே நாம் எழுப்பப் படுவோமா?" என்று (அவர்கள் கூறியவாறே இவர்களும்) கூறுகின்றனர்.

Tafseer

لَقَدْ
திட்டவட்டமாக
وُعِدْنَا
வாக்களிக்கப்பட்டோம்
نَحْنُ
நாங்களும்
وَءَابَآؤُنَا
எங்கள் மூதாதைகளும்
هَٰذَا
இதை
مِن قَبْلُ
இதற்கு முன்னர்
إِنْ هَٰذَآ
இது வேறில்லை
إِلَّآ
தவிர
أَسَٰطِيرُ
கட்டுக் கதைகளே
ٱلْأَوَّلِينَ
முன்னோர்களின்

Laqad wu'idnaa nahnu wa aabaaa'unaa haazaa min qablu in haazaaa illaaa asaateerul awwaleen

(அன்றி) "நிச்சயமாக நாமும் நம்முடைய மூதாதைகளும் இவ்வாறே பயமுறுத்தப்பட்டோம். இது முன்னுள்ளவர்களின் கட்டுக்கதையே அன்றி வேறில்லை" (என்றும் கூறுகின்றனர்.)

Tafseer

قُل
கூறுவீராக
لِّمَنِ
எவனுக்கு சொந்தம்
ٱلْأَرْضُ
பூமியும்
وَمَن فِيهَآ
இன்னும் அதில் உள்ளவர்களும்
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
تَعْلَمُونَ
அறிந்தவர்களாக

Qul limanil ardu wa man feehaaa in kuntum ta'lamoon

(ஆகவே நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) "பூமியும் அதில் உள்ளவைகளும் யாருக்குரியன? நீங்கள் அறிந்திருந்தால் கூறுங்கள்" எனக் கேளுங்கள்.

Tafseer

سَيَقُولُونَ
கூறுவார்கள்
لِلَّهِۚ
அல்லாஹ்விற்கே
قُلْ
கூறுவீராக
أَفَلَا تَذَكَّرُونَ
நீங்கள் நல்லறிவு பெற வேண்டாமா

Sa-yaqooloona lillaah; qul afalaa tazakkkaroon

அதற்கவர்கள் "அல்லாஹ்வுக்குரியனவே" என்று கூறுவார்கள். (அவ்வாறாயின் இதனைக் கொண்டு) நீங்கள் நல்லுணர்ச்சிப் பெறமாட்டீர்களா? என்று கேளுங்கள்.

Tafseer

قُلْ
கூறுவீராக
مَن
யார்
رَّبُّ
இறைவன்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களின்
ٱلسَّبْعِ
ஏழு
وَرَبُّ
இன்னும் இறைவன் யார்
ٱلْعَرْشِ
அர்ஷுடைய
ٱلْعَظِيمِ
மகத்தான

Qul mar Rabbus samaawaatis sab'i wa Rabbul 'Arshil 'Azeem

அன்றி "ஏழு வானங்களுக்கும், மகத்தான அர்ஷுக்கும் சொந்தக்காரன் யார்?" என்று கேளுங்கள்.

Tafseer

سَيَقُولُونَ
அவர்கள் கூறுவார்கள்
لِلَّهِۚ
அல்லாஹ்விற்கே
قُلْ
நீர் கூறுவீராக
أَفَلَا تَتَّقُونَ
ஆகவே நீங்கள் அஞ்ச மாட்டீர்களா?

Sa yaqooloona lillaah; qul afalaa tattaqoon

அதற்கவர்கள் "யாவும் அல்லாஹ்வுக்குரியனவே" என்று கூறுவார்கள். "அவ்வாறாயின் நீங்கள் அவனுக்கு பயப்பட வேண்டாமா?" என்று கேளுங்கள்.

Tafseer

قُلْ
கூறுவீராக
مَنۢ
யாருடைய
بِيَدِهِۦ
அவனுடைய கரத்தில் இருக்கிறது
مَلَكُوتُ
பேராட்சி
كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின்
وَهُوَ
அவன்தான்
يُجِيرُ
பாதுகாப்பு அளிக்கின்றான்
وَلَا يُجَارُ
இன்னும் பாதுகாப்பு அளிக்கப்படாது
عَلَيْهِ
அவனுக்கு எதிராக
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
تَعْلَمُونَ
அறிந்தவர்களாக

Qul mam bi yadihee malakootu kulli shai'inw wa Huwa yujeeru wa laa yujaaru 'alaihi in kuntum ta'lamoon

அன்றி "எல்லா பொருள்களின் அதிகாரம் யார் கையில் இருக்கின்றது? யார் (அனைவரையும்) பாதுகாக்கிறான். அவனை ஒருவரும் பாதுகாப்பதில்லை. நீங்கள் அறிந்திருந்தால் (அவன் யார் எனக்) கூறுங்கள்" எனக் கேளுங்கள்.

Tafseer

سَيَقُولُونَ
அவர்கள் கூறுவார்கள்
لِلَّهِۚ
அல்லாஹ்விற்கு உரியதே
قُلْ
நீர் கூறுவீராக
فَأَنَّىٰ
ஆக, எவ்வாறு
تُسْحَرُونَ
திருப்பப்படுகிறீர்கள்

Sa yaqooloona lillaah; qul fa annaa tus haroon

அதற்கவர்கள் (எல்லா அதிகாரங்களும்) "அல்லாஹ்வுக் குரியதுதான்" என்று கூறுவார்கள். "அவ்வாறாயின் நீங்கள் எவ்வாறு உங்கள் அறிவை இழந்து விட்டீர்கள்?" என்று கேளுங்கள்.

Tafseer

بَلْ
மாறாக
أَتَيْنَٰهُم
நாம் அவர்களுக்கு கொண்டு வந்துள்ளோம்
بِٱلْحَقِّ
உண்மையை
وَإِنَّهُمْ
நிச்சயமாக இவர்கள்
لَكَٰذِبُونَ
பொய்யர்கள்தான்

Bal atainaahum bil haqqi wa innahum lakaaziboon

நாம் அவர்களுக்கு சத்தியத்தையே கொடுத்திருந்தோம். (இதனை மறுத்துக் கூறும்) அவர்கள் நிச்சயமாக பொய்யர்களே!

Tafseer