Skip to main content

أُو۟لَٰٓئِكَ
அவர்கள்தான்
يُسَٰرِعُونَ
விரைகின்றார்கள்
فِى ٱلْخَيْرَٰتِ
நன்மைகளில்
وَهُمْ
இன்னும் அவர்கள்
لَهَا
அவற்றுக்கு
سَٰبِقُونَ
முந்தக் கூடியவர்கள்

Ulaaa'ika yusaari'oona fil khairaati wa hum lahaa saabiqoon

ஆகிய இவர்கள்தாம் நன்மையான காரியங்களில் விரைந்து செல்கின்றவர்கள். மேலும், அவர்கள் அதை (செய்வதில் ஒருவரை ஒருவர் முந்திக் கொள்கின்றனர்.

Tafseer

وَلَا نُكَلِّفُ
நாம் சிரமம் தருவதில்லை
نَفْسًا
எந்த ஓர் ஆன்மாவுக்கும்
إِلَّا
தவிர
وُسْعَهَاۖ
அதன் வசதிக்கு உட்பட்டே
وَلَدَيْنَا
இன்னும் நம்மிடம் இருக்கின்றது
كِتَٰبٌ
ஒரு புத்தகம்
يَنطِقُ
பேசுகின்றது
بِٱلْحَقِّۚ
சத்தியத்தைக் கொண்டு
وَهُمْ
அவர்கள்
لَا يُظْلَمُونَ
அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்

Wa laa nukallifu nafsan illaa wus'ahaa wa ladainaa kitaabuny yantiqu bilhaqqi w ahum la yuzlamoon

நாம் யாதொரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு அதிகமாக (எதையும் செய்யும்படி) நிர்ப்பந்திப்பதில்லை. ஒவ்வொருவரின் மெய்யான தினசரிக் குறிப்பும் நம்மிடம் இருக்கின்றது. (அவர்களின் நன்மையைக் குறைத்தோ பாவத்தை அதிகப்படுத்தியோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.

Tafseer

بَلْ
மாறாக
قُلُوبُهُمْ
அவர்களது உள்ளங்கள்
فِى غَمْرَةٍ
அறியாமையில்
مِّنْ هَٰذَا
இதை விட்டு
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
أَعْمَٰلٌ
செயல்கள்
مِّن دُونِ
வேறு உள்ளன
هُمْ
அவர்கள்
لَهَا
அதைத்தான்
عَٰمِلُونَ
செய்பவர்கள்

Bal quloobuhum fee ghamratim min haazaa wa lahum a'maalum min dooni zaalika hum lahaa 'aamiloon

எனினும், (நிராகரிக்கும்) அவர்களுடைய உள்ளங்கள் இ(வ்வேதத்)தைப் பற்றி (சந்தேகித்து) மடமையில் ஆழ்ந்து கிடக்கின்றன. இதனையன்றி அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேறு பல (தீய) காரியங்களும் இருக்கின்றன.

Tafseer

حَتَّىٰٓ
இறுதியாக
إِذَآ أَخَذْنَا
நாம் பிடித்தால்
مُتْرَفِيهِم
அவர்களின் சுகவாசிகளை
بِٱلْعَذَابِ
வேதனையைக் கொண்டு
إِذَا هُمْ
அப்போது அவர்கள்
يَجْـَٔرُونَ
கதறுகின்றனர்

Hattaaa izaaa akhznaa mutrafeehim bil'azaabi izaa hum yaj'aroon

ஆகவே, அவர்களின் தலைவர்களை வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொண்டாலோ, அவர்கள் (அந்நேரத்தில் திடுக்கிட்டுத் தங்களை காப்பாற்றும்படி) அபய சப்தமிடுகின்றனர்.

Tafseer

لَا تَجْـَٔرُوا۟
கதறாதீர்கள்
ٱلْيَوْمَۖ
இன்றைய தினம்
إِنَّكُم
நிச்சயமாக நீங்கள்
مِّنَّا
நம்மிடமிருந்து
لَا تُنصَرُونَ
பாதுகாக்கப்பட மாட்டீர்கள்

Laa taj'arul yawma innakum minnaa laa tunsaroon

(அச்சமயம் அவர்களை நோக்கி) "இன்றைய தினம் நீங்கள் அபயமிட்டு சப்தமிடாதீர்கள். நிச்சயமாக நீங்கள் நம்மால் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.

Tafseer

قَدْ
திட்டமாக
كَانَتْ
இருந்தன
ءَايَٰتِى
எனது வசனங்கள்
تُتْلَىٰ
ஓதப்பட்டும்
عَلَيْكُمْ
உங்கள் மீது
فَكُنتُمْ
நீங்கள் இருந்தீர்கள்
عَلَىٰٓ
மீது
أَعْقَٰبِكُمْ
உங்கள் குதிங்கால்கள்
تَنكِصُونَ
பின்னோக்கி செல்பவர்களாக

Qad kaanat Aayaatee tutlaa 'alaikum fakuntum 'alaaa a'qaabikum tankisoon

நிச்சயமாக நம்முடைய வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்ட அச்சமயம் (அதனைப் புறக்கணித்து) நீங்கள் பின் வாங்கினீர்கள்.

Tafseer

مُسْتَكْبِرِينَ
பெருமை அடித்தவர்களாக
بِهِۦ
அதைக் கொண்டு
سَٰمِرًا
இரவில் நிம்மதியாக இதைப் பேசியவர்களாக
تَهْجُرُونَ
வீணானதைக் கூறுகின்றனர்

Mustakbireena bihee saamiran tahjuroon

நீங்கள் கர்வங்கொண்டு (உங்கள்) இராக் கதைகளிலும் இதைப் பற்றி (பரிகாசம் செய்து) பிதற்றிக் கொண்டிருந்தீர்கள்" (என்று கூறப்படும்).

Tafseer

أَفَلَمْ يَدَّبَّرُوا۟
இவர்கள் ஆழ்ந்து ஆராய வேண்டாமா
ٱلْقَوْلَ
இந்த பேச்சை
أَمْ
அல்லது
جَآءَهُم
வந்ததா இவர்களிடம்
مَّا لَمْ
எது/வரவில்லை
ءَابَآءَهُمُ
மூதாதைகளுக்கு இவர்களது
ٱلْأَوَّلِينَ
முன்னோர்களான

Afalam yaddabbarrul qawla am jaaa'ahum maa lam yaati aabaaa'ahumul awwaleen

(நம்முடைய) வாக்கியத்தை அவர்கள் கவனிக்கவில்லையா? அல்லது அவர்களுடைய முந்திய மூதாதைகளுக்கு வராதது ஏதும் இவர்களுக்கு வந்துவிட்டதா?

Tafseer

أَمْ
அல்லது
لَمْ يَعْرِفُوا۟
அறியவில்லையா
رَسُولَهُمْ
தங்களது தூதரை
فَهُمْ
ஆகவே, அவர்கள்
لَهُۥ
அவரை
مُنكِرُونَ
மறுக்கின்றனரா

Am lam ya'rifoo Rasoolahum fahum lahoo munkiroon

அல்லது தங்களிடம் வந்த தூதரை தாங்கள் அறியவில்லை என்பதாக(க் கூறி) அவர்கள் நிராகரிக்கின்றனரா?

Tafseer

أَمْ
அல்லது
يَقُولُونَ
இவர்கள் கூறுகின்றனரா
بِهِۦ
அவருக்கு
جِنَّةٌۢۚ
பைத்தியம்
بَلْ
மாறாக
جَآءَهُم
வந்துள்ளார் அவர்களிடம்
بِٱلْحَقِّ
உண்மையைக் கொண்டு
وَأَكْثَرُهُمْ
இன்னும் அதிகமானவர்கள் அவர்களில்
لِلْحَقِّ
உண்மையை
كَٰرِهُونَ
வெறுக்கின்றார்கள்

Am yaqooloona bihee jinnnah; bal jaaa'ahum bilhaqqi wa aksaruhum lil haqqi kaarihoon

அல்லது "அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கின்றது" என இவர்கள் கூறுகின்றனரா? இவை ஒன்றுமில்லை. (நம்முடைய தூதர்) அவர்களுக்குச் சத்தியத்தைக் கொண்டு வந்தார். எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் அந்த சத்தியத்தையே வெறுக்கின்றனர்.

Tafseer