Skip to main content

وَمَن
யார்
تَابَ
திருந்துவார்
وَعَمِلَ
இன்னும் செய்வார்
صَٰلِحًا
நன்மை
فَإِنَّهُۥ
நிச்சயமாக அவர்
يَتُوبُ
திரும்பி விடுகிறார்
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கம்
مَتَابًا
திரும்புதல்-முற்றிலும்

Wa man taaba wa 'amila saalihan fa innnahoo yatoobu ilal laahi mataabaa

ஆகவே, எவர்கள் கைசேதப்பட்டு (பாவத்திலிருந்து) விலகி மன்னிப்புக் கோருவதுடன், நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள், நிச்சயமாக முற்றிலும் அல்லாஹ்விடமே திரும்பி விடுகின்றனர்.

Tafseer

وَٱلَّذِينَ لَا
இன்னும் அவர்கள் ஆஜராக மாட்டார்கள்
ٱلزُّورَ
பொய்யான செயலுக்கு
وَإِذَا مَرُّوا۟
இன்னும் இவர்கள் கடந்து சென்றால்
بِٱللَّغْوِ
வீணான செயலுக்கு
مَرُّوا۟
கடந்து சென்று விடுவார்கள்
كِرَامًا
கண்ணியவான்களாக

Wallazeena laa yash hadoonaz zoora wa izaa marroo billaghwi marroo kiraamaa

அன்றி, எவர்கள் பொய் சாட்சி சொல்லாமலும் (வீணான காரியம் நடைபெறும் இடத்திற்குச் செல்லாமலும்) ஒருக்கால் (அத்தகைய இடத்திற்குச்) செல்லும்படி ஏற்பட்டு விட்டபோதிலும் (அதில் சம்பந்தப்படாது) கண்ணியமான முறையில் (அதனைக் கடந்து) சென்று விடுகின்றார்களோ அவர்களும்,

Tafseer

وَٱلَّذِينَ إِذَا
இன்னும் எவர்கள்/அவர்கள் அறிவுறுத்தப்பட்டால்
بِـَٔايَٰتِ
வசனங்களைக் கொண்டு
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
لَمْ يَخِرُّوا۟
விழ மாட்டார்கள்
عَلَيْهَا
அவற்றின் மீது
صُمًّا
செவிடர்களாக
وَعُمْيَانًا
இன்னும் குருடர்களாக

Wallazeena izaa zukkiroo bi Aayaati Rabbihim lam yakhirroo 'alaihaa summanw wa'umyaanaa

இன்னும் எவர்கள் தங்கள் இறைவனின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் குருடர்களைப் போலும் செவிடர்களைப் போலும் அதன் மீது அடித்து விழாமல்; (அதனை முற்றிலும் நன்குணர்ந்து கொள்வதுடன் அதன்படி செயல்படுகிறார்களோ அவர்களும்)

Tafseer

وَٱلَّذِينَ يَقُولُونَ
அவர்கள் கூறுவார்கள்
رَبَّنَا
எங்கள் இறைவா!
هَبْ
தருவாயாக!
لَنَا
எங்களுக்கு
مِنْ أَزْوَٰجِنَا
எங்கள் மனைவிகள் மூலமும்
وَذُرِّيَّٰتِنَا
எங்கள் சந்ததிகள் மூலமும்
قُرَّةَ
குளிர்ச்சியை
أَعْيُنٍ
கண்களுக்கு
وَٱجْعَلْنَا
எங்களை ஆக்குவாயாக!
لِلْمُتَّقِينَ
இறையச்சமுள்ளவர்களுக்கு
إِمَامًا
இமாம்களாக

Wallazeena yaqooloona Rabbanaa hab lanaa min azwaajinaa wa zurriyaatinaa qurrata a'yuninw waj 'alnaa lilmuttaqeena Imaamaa

மேலும், எவர்கள் "எங்கள் இறைவனே! எங்கள் மனைவியையும், எங்கள் மக்களையும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியாக்கி வைத்தருள்வாயாக! அன்றி, பரிசுத்தவான்களுக்கு வழிகாட்டியாகவும் எங்களை நீ ஆக்குவாயாக!" என்று பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களும்;

Tafseer

أُو۟لَٰٓئِكَ
இவர்கள்
يُجْزَوْنَ
கூலியாக கொடுக்கப்படுவார்கள்
ٱلْغُرْفَةَ
அறையை
بِمَا صَبَرُوا۟
அவர்கள் பொறுமையாக இருந்ததால்
وَيُلَقَّوْنَ
சந்திக்கப்படுவார்கள்
فِيهَا
அதில்
تَحِيَّةً
முகமனைக்கொண்டும்
وَسَلَٰمًا
ஸலாமைக் கொண்டும்

Ulaaa'ika yujzawnal ghurfata bimaa sabaroo wa yulaqqawna feehaa tahiyyatanw wa salaamaa

ஆகிய இத்தகையவருக்கு, அவர்கள் (பல நல்ல காரியங்களைச் செய்திருப்பதுடன் அவைகளைச் செய்யும்போது ஏற்பட்ட) கஷ்டங்களைச் சகித்துக்கொண்டதன் காரணமாக உயர்ந்த மாளிகைகள் (மறுமையில்) கொடுக்கப்படும். "ஈடேற்றம் (உண்டாவதாக)" என்று போற்றி அதில் அவர்கள் வரவேற்கப் படுவார்கள்.

Tafseer

خَٰلِدِينَ
அவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்
فِيهَاۚ
அதில்
حَسُنَتْ
அது மிக அழகானது
مُسْتَقَرًّا
நிரந்தரமான தங்குமிடத்தாலும்
وَمُقَامًا
தற்காலிகமான தங்குமிடத்தாலும்

Khaalideena feehaa; hasunat mustaqarranw wa muqaamaa

என்றென்றும் அதில் தங்கிவிடுவார்கள். சிறிது நேரம் தங்குவதாயினும் சரி, என்றென்றும் தங்குவதாயினும் சரி, அது மிக்க (நல்ல) அழகான தங்குமிடம்.

Tafseer

قُلْ
கூறுவீராக!
مَا يَعْبَؤُا۟
ஒரு பொருட்டாகவே கருதமாட்டான்
بِكُمْ
உங்களை
رَبِّى
என் இறைவன்
لَوْلَا
இல்லாதிருந்தால்
دُعَآؤُكُمْۖ
பிரார்த்தனை உங்கள்
فَقَدْ
திட்டமாக
كَذَّبْتُمْ
நீங்கள் பொய்ப்பித்தீர்கள்
فَسَوْفَ يَكُونُ
இது கண்டிப்பாக இருக்கும்
لِزَامًۢا
உங்களை தொடரக்கூடியதாக

Qul maa ya'ba'u bikum Rabbee law laa du'aaa'ukum faqad kazzabtum fasawfa yakoonu lizaamaa

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் என் இறைவனை(க் கெஞ்சிப்) பிரார்த்தனை செய்யாவிடில் (அதற்காக) அவன் உங்களைப் பொருட்படுத்த மாட்டான். ஏனென்றால், நீங்கள் (அவனுடைய வசனங்களை) நிச்சயமாக பொய்யாக்கிக் கொண்டே இருக்கிறீர்கள். ஆகவே, அதன் வேதனை (உங்களைக்) கண்டிப்பாகப் பிடித்தே தீரும்.

Tafseer