Skip to main content

وَلَوْ شِئْنَا
நாம் நாடியிருந்தால்
لَبَعَثْنَا
அனுப்பியிருப்போம்
فِى كُلِّ
ஒவ்வொரு
قَرْيَةٍ
ஊரிலும்
نَّذِيرًا
ஓர் எச்சரிப்பாளரை

Wa law shi'naa laba'asnaa fee kulli qar yatin nazeeraa

நாம் நாடியிருந்தால் ஒவ்வொரு ஊருக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடிய ஒவ்வொரு தூதரை (இன்றைய தினமும்) நாம் அனுப்பியே இருப்போம்.

Tafseer

فَلَا تُطِعِ
ஆகவே கீழ்ப்படியாதீர்
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
وَجَٰهِدْهُم
போர் செய்வீராக! அவர்களிடம்
بِهِۦ
இதன்மூலம்
جِهَادًا
போர்
كَبِيرًا
பெரும்

Falaa tuti'il kaafireena wa jaahidhum bihee jihaadan kabeeraa

ஆகவே, (நபியே!) நீங்கள் இந்த நன்றிகெட்டவர்களுக்கு கட்டுப்படாதீர்கள். இந்தக் குர்ஆனை (ஆதாரமாக) கொண்டு நீங்கள் அவர்களிடத்தில் போராடுவீராக!

Tafseer

وَهُوَ ٱلَّذِى
அவன்தான்
مَرَجَ
இணைத்தான்
ٱلْبَحْرَيْنِ
இரு கடல்களை
هَٰذَا
இது
عَذْبٌ
மிக்க மதுரமானது
فُرَاتٌ
இனிப்பு நீராகும்
وَهَٰذَا
இதுவோ
مِلْحٌ
உப்பு நீராகும்
أُجَاجٌ
மிக்க உவர்ப்பானது
وَجَعَلَ
இன்னும் அவன் ஆக்கினான்
بَيْنَهُمَا
அவ்விரண்டுக்கும் இடையில்
بَرْزَخًا
ஒரு திரையையும்
وَحِجْرًا
தடுப்பையும்
مَّحْجُورًا
முற்றிலும் தடுக்கக்கூடியது

Wa Huwal lazee marajal bahraini haazaa 'azbun furaatunw wa haazaa milhun ujaaj; wa ja'ala bainahumaa barzakhanw wa hijram mahjooraa

அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்திருக்கின்றான். ஒன்று, மிக்க இன்பமும் மதுரமுமான தண்ணீர். மற்றொன்று, உப்பும் கசப்புமான தண்ணீர். (இவை ஒன்றோடொன்று கலந்து விடாதிருக்கும் பொருட்டு) இவ்விரண்டுக்கும் இடையில் திரையையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தி இருக்கின்றான்.

Tafseer

وَهُوَ ٱلَّذِى
அவன்தான்
خَلَقَ
படைத்தான்
مِنَ ٱلْمَآءِ
நீரிலிருந்து
بَشَرًا
மனிதனை
فَجَعَلَهُۥ
இன்னும் அவனை ஆக்கினான்
نَسَبًا
இரத்த பந்தமுடையவனாக
وَصِهْرًاۗ
இன்னும் திருமண பந்தமுடையவனாக
وَكَانَ
இருக்கிறான்
رَبُّكَ
உமது இறைவன்
قَدِيرًا
பேராற்றலுடையவனாக

Wa Huwal lazee khalaqa minal maaa'i basharran fa ja'alahoo nasaban wa sihraa; wa kaana Rabbuka Qadeeraa

அவன்தான் (ஒரு துளி) தண்ணீரிலிருந்து மனிதனை உற்பத்தி செய்கின்றான். பின்னர், அவனுக்குச் சந்ததிகளையும் சம்பந்திகளையும் ஆக்குகின்றான். (நபியே!) உங்கள் இறைவன் (தான் விரும்பியவாறெல்லாம் செய்ய) ஆற்றலுடையவனாகவே இருக்கின்றான்.

Tafseer

وَيَعْبُدُونَ
அவர்கள் வணங்குகின்றனர்
مِن دُونِ
அல்லாஹ்வையன்றி
مَا لَا
அவர்களுக்கு நற்பலனளிக்காதவற்றை
وَلَا
இன்னும் தீங்கிழைக்காதவற்றை
يَضُرُّهُمْۗ
இன்னும் தீங்கிழைக்காதவற்றை அவர்களுக்கு
وَكَانَ
இருக்கிறான்
ٱلْكَافِرُ
நிராகரிப்பாளன்
عَلَىٰ
எதிராக
رَبِّهِۦ
தன் இறைவனுக்கு
ظَهِيرًا
உதவக்கூடியவனாக

Wa ya'budoona min doonil laahi maa laa yanfa'uhum wa laa yadurruhum; wa kaanal kaafiru 'alaa Rabbihee zaheeraa

இவ்வாறிருந்தும் அவர்களோ தங்களுக்கு யாதொரு நன்மையும், தீமையும் செய்ய சக்தியற்ற அல்லாஹ் அல்லாத வைகளை வணங்குகின்றனர். இந்நிராகரிப்பவர்கள் தங்கள் இறைவனுக்கே விரோதமாக இருக்கின்றனர்.

Tafseer

وَمَآ أَرْسَلْنَٰكَ
உம்மை நாம் அனுப்பவில்லை
إِلَّا
தவிர
مُبَشِّرًا
நற்செய்தி கூறுபவராக
وَنَذِيرًا
இன்னும் எச்சரிப்பவராகவே

Wa maa arsalnaaka illaa mubashshiranw wa nazeeraa

(நபியே!) நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அன்றி உங்களை நாம் அனுப்பவில்லை.

Tafseer

قُلْ
கூறுவீராக!
مَآ أَسْـَٔلُكُمْ
நான் உங்களிடம் கேட்கவில்லை
عَلَيْهِ
இதற்காக
مِنْ أَجْرٍ
எவ்வித கூலியையும்
إِلَّا
எனினும்
مَن
யார்
شَآءَ
நாடினானோ
أَن يَتَّخِذَ
எடுத்துக்கொள்ள
إِلَىٰ رَبِّهِۦ
தன் இறைவனுடைய
سَبِيلًا
வழியில்

Qul maaa as'alukum 'alaihi min ajrin illaa man shaaa'a ai yattakhiza ilaa Rabbihee sabeelaa

(அவர்களை நோக்கி) "இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லை. ஆயினும், எவன் தன் இறைவனின் வழியில் செல்ல விரும்புகின்றானோ அவன் செல்வதை (நீங்கள் தடை செய்யாமல் இருப்பதை)யே (நான் உங்களிடம்) விரும்புகின்றேன்" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள்.

Tafseer

وَتَوَكَّلْ
நம்பிக்கை வைப்பீராக
عَلَى
மீது
ٱلْحَىِّ
உயிருள்ளவன்
ٱلَّذِى
எவன்
لَا يَمُوتُ
மரணிக்கமாட்டான்
وَسَبِّحْ
இன்னும் துதிப்பீராக!
بِحَمْدِهِۦۚ
அவனைப் புகழ்ந்து
وَكَفَىٰ
போதுமானவன்
بِهِۦ
அவனே
بِذُنُوبِ
பாவங்களை
عِبَادِهِۦ
தன் அடியார்களின்
خَبِيرًا
ஆழ்ந்தறிபவனாக

Wa tawakkal 'alal Haiyil lazee laa yamootu wa sabbih bihamdih; wa kafaa bihee bizunoobi 'ibaadihee khabeeraa

(அன்றி) மரணமற்ற என்றும் நிரந்தரமான அல்லாஹ்வையே நீங்கள் நம்புங்கள். அவனுடைய புகழைக் கூறி அவனைத் துதி செய்து கொண்டிருங்கள். அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிந்திருப்பதே போதுமானது. (அதற்குரிய தண்டனையை அவன் கொடுப்பான்.)

Tafseer

ٱلَّذِى
அவன்தான்
خَلَقَ
படைத்தான்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களையும்
وَٱلْأَرْضَ
பூமியையும்
وَمَا بَيْنَهُمَا
அவற்றுக்கு இடையில் உள்ளவற்றையும்
فِى سِتَّةِ
ஆறு நாட்களில்
ثُمَّ
பிறகு
ٱسْتَوَىٰ
உயர்ந்து விட்டான்
عَلَى
மீது
ٱلْعَرْشِۚ
அர்ஷின்
ٱلرَّحْمَٰنُ
அவன் பேரருளாளன்
فَسْـَٔلْ
கேட்பீராக!
بِهِۦ
அவனை
خَبِيرًا
அறிந்தவனிடம்

Allazee khalaqas samaawaati wal arda wa maa bainahumaa fee sittati aiyaamin summmmastawaa 'alal 'Arsh; ar Rahmaanu fas'al bihee khabeeraa

அவன் எத்தகையவனென்றால் வானங்களையும், பூமியையும், இவைகளுக்கு மத்தியில் உள்ளவைகளையும் ஆறு நாள்களில் படைத்தான். பின்னர், அவன் "அர்ஷின்" மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்து விட்டான். அவன்தான் ரஹ்மான். (ரஹ்மான் எனப்படுபவனும் அல்லாஹ் எனப்படுபவனும் ஒருவனே.) இதைப் பற்றித் தெரிந்தவர்களைக் கேட்டறிந்து கொள்ளுங்கள்.

Tafseer

وَإِذَا قِيلَ
கூறப்பட்டால்
لَهُمُ
அவர்களுக்கு
ٱسْجُدُوا۟
சிரம் பணியுங்கள்
لِلرَّحْمَٰنِ
ரஹ்மானுக்கு
قَالُوا۟
கூறுகின்றனர்
وَمَا
யார்?
ٱلرَّحْمَٰنُ
பேரருளாளன்
أَنَسْجُدُ
நாங்கள் சிரம் பணிய வேண்டுமா?
لِمَا تَأْمُرُنَا
நீர்ஏவக்கூடியவனுக்கு
وَزَادَهُمْ
அதிகப்படுத்தியது அவர்களுக்கு
نُفُورًا۩
வெறுப்பை

Wa izaa qeela lahumus judoo lir Rahmaani qaaloo wa mar Rahmaanu anasjudu limaa taamurunaa wa zaadahum nufooraa

(ஆகவே,) அந்த ரஹ்மானைச் சிரம் பணிந்து வணங்குங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால், அவர்களுக்கு வெறுப்பு அதிகரித்து "ரஹ்மான் யார்? நீங்கள் கூறியவைகளுக்கெல்லாம் நாம் சிரம் பணிந்து வணங்குவதா?" என்று கேட்கின்றனர்.

Tafseer