Skip to main content

إِنَّا
நிச்சயமாக நாம்
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
نَجْزِى
கூலி கொடுப்போம்
ٱلْمُحْسِنِينَ
நல்லவர்களுக்கு

Innaa kazaalika najzil muhsineen

நிச்சயமாக நாம் இவ்வாறே நன்மை செய்தவர்களுக்குக் கூலி கொடுக்கின்றோம்.

Tafseer

إِنَّهُمَا
நிச்சயமாக அவ்விருவரும்
مِنْ عِبَادِنَا
நமது அடியார்களில் உள்ளவர்கள்
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களான

Innahumaa min 'ibaadinal mu'mineen

நிச்சயமாக அவ்விருவரும், நம்பிக்கை கொண்ட நமது அடியார்களாகவே இருந்தனர்.

Tafseer

وَإِنَّ
இன்னும் நிச்சயமாக
إِلْيَاسَ
இல்யாஸ்
لَمِنَ ٱلْمُرْسَلِينَ
தூதர்களில் உள்ளவர்தான்

Wa inna Ilyaasa laminal mursaleen

நிச்சயமாக இல்யாஸும் நமது தூதர்களில் ஒருவர்தான்.

Tafseer

إِذْ قَالَ
அவர் கூறிய சமயத்தை
لِقَوْمِهِۦٓ
தனது மக்களுக்கு
أَلَا تَتَّقُونَ
நீங்கள் அஞ்சிக் கொள்ள மாட்டீர்களா?

Iz qaala liqawmiheee alaa tattaqoon

அவர் தன் மக்களை நோக்கி, "நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்பட வேண்டாமா?" என்று கூறிய சமயத்தில்,

Tafseer

أَتَدْعُونَ
நீங்கள் வணங்குகிறீர்களா?
بَعْلًا
பஃலை
وَتَذَرُونَ
விட்டுவிடுகிறீர்களா?
أَحْسَنَ
மிக அழகியவனை
ٱلْخَٰلِقِينَ
படைப்பாளர்களில்

Atad'oona Ba'lanw wa tazaroona ahsanal khaaliqeen

"படைப்பவர்களில் மிக அழகானவனை நீங்கள் புறக்கணித்து விட்டு, "பஅலு" என்னும் சிலையை வணங்கு கின்றீர்களா?

Tafseer

ٱللَّهَ
அல்லாஹ்வை
رَبَّكُمْ
உங்கள் இறைவனான
وَرَبَّ
இன்னும் இறைவனுமான
ءَابَآئِكُمُ
உங்கள் மூதாதைகளின்
ٱلْأَوَّلِينَ
முன்னோர்களான

Allaaha Rabbakum wa Rabba aabaaa'ikumul awwaleen

அல்லாஹ்தான் உங்கள் இறைவனும், முன் சென்ற உங்கள் மூதாதையர்களின் இறைவனுமாவான்" (என்று கூறினார்).

Tafseer

فَكَذَّبُوهُ
அவரை பொய்ப்பித்தனர்
فَإِنَّهُمْ
ஆகவே நிச்சயமாக அவர்கள்
لَمُحْضَرُونَ
ஆஜர்படுத்தப்படுவார்கள்

Fakazzaboohu fa inna hum lamuhdaroon

ஆயினும், அவர்கள் (அவரைப் பொய்யாக்கி விட்டனர். ஆதலால், நிச்சயமாக அவர்கள் (மறுமையில் நம்மிடம் தண்டனைக்காகக்) கொண்டு வரப்படுவார்கள்.

Tafseer

إِلَّا
எனினும்
عِبَادَ ٱللَّهِ
அல்லாஹ்வின் அடியார்கள்
ٱلْمُخْلَصِينَ
பரிசுத்தமான

Illaa 'ibaadal laahil mukhlaseen

கலப்பற்ற அல்லாஹ்வுடைய அடியார்களைத் தவிர, (நல்லடியார்களுக்கு நல்ல சன்மானமுண்டு.)

Tafseer

وَتَرَكْنَا
நற்பெயரை ஏற்படுத்தினோம்
عَلَيْهِ
அவருக்கு
فِى ٱلْءَاخِرِينَ
பின்னோரில்

Wa taraknaa 'alaihi fil aakhireen

பிற்காலத்தில் உள்ளவர்களிலும் இவருடைய கீர்த்தியை நிலைக்கச் செய்தோம்.

Tafseer

سَلَٰمٌ
ஈடேற்றம் உண்டாகட்டும்
عَلَىٰٓ إِلْ يَاسِينَ
இல்யாசுக்கு

Salaamun 'alaaa Ilyaaseen

(ஆகவே உலகத்திலுள்ளவர்கள்) "இல்யாஸுக்கு "ஸலாம்" ஈடேற்றம் உண்டாவதாகுக!" (என்று கூறுகின்றனர்).

Tafseer