Skip to main content

إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக நிராகரித்தவர்கள்
بِٱلذِّكْرِ
இந்த வேதத்தை
لَمَّا
அது வந்த போது
جَآءَهُمْۖ
அவர்களிடம்
وَإِنَّهُۥ
நிச்சயமாக இது
لَكِتَٰبٌ
வேதமாகும்
عَزِيزٌ
மிக கண்ணியமான

Inna Lazeena kafaroo biz Zikri lammaa jaa'ahum wa innahoo la Kitaabun 'Azeez

நிச்சயமாக எவர்கள் தங்களிடம் வந்த நல்லுபதேசத்தை நிராகரிக்கின்றார்களோ (அவர்கள் மறுமையில் தங்கள் நிலைமையை உணர்ந்து கொள்வார்கள். ஏனென்றால்) நிச்சயமாக இது மிக கண்ணியமான வேதமாகும்.

Tafseer

لَّا يَأْتِيهِ
அதனிடம் வரமாட்டார்(கள்)
ٱلْبَٰطِلُ
பொய்யர்(கள்)
مِنۢ بَيْنِ
அதற்கு முன்னிருந்தும்
وَلَا مِنْ
அதற்குப் பின்னிருந்தும்
تَنزِيلٌ
இறக்கப்பட்ட வேதம்
مِّنْ حَكِيمٍ
மகா ஞானவான், மகா புகழுக்குரியவனிடமிருந்து

Laa yaateehil baatilu mim baini yadaihi wa laa min khalfihee tanzeelum min Hakeemin Hameed

இதற்கு முன்னும் சரி, இதற்குப் பின்னும் சரி உண்மைக்கு மாறான யாதொரு விஷயமும் (திருக்குர்ஆனாகிய) இதனை (அணுகவே) அணுகாது. மிக்க புகழும் ஞானமும் உடையவனால் (இது) இறக்கப்பட்டது.

Tafseer

مَّا يُقَالُ
சொல்லப்படாது
لَكَ
உமக்கு
إِلَّا مَا
தவிர/எது
قَدْ
திட்டமாக
قِيلَ
சொல்லப்பட்டதோ
لِلرُّسُلِ
தூதர்களுக்கு
مِن قَبْلِكَۚ
உமக்கு முன்னர்
إِنَّ
நிச்சயமாக
رَبَّكَ
உமது இறைவன்
لَذُو مَغْفِرَةٍ
மன்னிப்புடையவன்
وَذُو عِقَابٍ
இன்னும் தண்டனைஉடையவன்
أَلِيمٍ
வலி தரக்கூடியது

Maa yuqaalu laka illaa maa qad qeela lir Rusuli min qablik; inna Rabbaka lazoo maghfiratinw wa zoo 'iqaabin aleem

(நபியே!) உங்களுக்கு முன் வந்த தூதர்களுக்குக் கூறப்பட்டது எதுவோ, அதனைத் தவிர (வேறொன்றும்) உங்களுக்குக் கூறப்படவில்லை. (ஆகவே, இவர்கள் கூறும் நிந்தனைகளைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்.) நிச்சயமாக உங்களது இறைவன் (நல்லவர்களை) மிக மன்னிப்பவனாகவும், (தீயவர்களைத்) துன்புறுத்தி வேதனை செய்பவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَلَوْ جَعَلْنَٰهُ
நாம் இதை ஆக்கி இருந்தால்
قُرْءَانًا
குர்ஆனாக
أَعْجَمِيًّا
அரபி அல்லாத மொழி
لَّقَالُوا۟
கூறியிருப்பார்கள்
لَوْلَا فُصِّلَتْ
விவரிக்கப்பட்டிருக்க வேண்டாமா?
ءَايَٰتُهُۥٓۖ
இதன் வசனங்கள்
ءَا۬عْجَمِىٌّ
அரபி அல்லாத ஒரு மொழியிலா!
وَعَرَبِىٌّۗ
இன்னும் அரபி ஆயிற்றே !
قُلْ هُوَ
கூறுவீராக!/இது
لِلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களுக்கு
هُدًى
நேர்வழி(யும்)
وَشِفَآءٌۖ
நிவாரணமும்
وَٱلَّذِينَ لَا
எவர்கள்/நம்பிக்கை கொள்ளவில்லையோ
فِىٓ ءَاذَانِهِمْ
அவர்களின் காதுகளில்
وَقْرٌ
செவிட்டுத்தனம்
وَهُوَ
அது
عَلَيْهِمْ
அவர்கள் மீது
عَمًىۚ
மறைந்திருக்கிறது
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
يُنَادَوْنَ
அழைக்கப்படுவார்கள்
مِن مَّكَانٍۭ
இடத்தில் இருந்து
بَعِيدٍ
மிக தூரமான

Wa law ja'alnaahu Qur-aanan A'jamiyyal laqaaloo law laa fussilat Aayaatuhoo 'a A'jamiyyunw wa 'Arabiyy; qul huwa lillazeena aamanoo hudanw wa shifaaa'unw wallazeena la yu'minoona feee aazaanihim waqrunw wa huwa 'alaihim 'amaa; ulaaa'ika yunaadawna mim maakaanim ba'eed

இதனை அரபி அல்லாத மொழியில் நாம் இறக்கி வைத்திருந்தால், (இந்த மக்காவாசிகள்) இதனுடைய வசனங்கள் (நம்முடைய அரபி மொழியில்) விவரித்துக் கூறப்பட்டிருக்க வேண்டாமா? என்றும், இதுவோ அரபி அல்லாத மொழி; நாமோ அதனை அறியாத) அரபிகள் என்றும் கூறுவார்கள். (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "இது (அவர்களுடைய அரபி மொழியில் இருப்பதுடன்) நம்பிக்கை கொண்டவர்களுக்கு நேரான வழியாகவும், (சந்தேக நோயுள்ள உள்ளங்களுக்கு) நல்லதொரு பரிகாரமாகவும் இருக்கின்றது. எவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுடைய காதுகளுக்கு செவிடாகவும், அவர்களுடைய பார்வையை போக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. அவர்கள் (உங்கள் சமீபத்திலிருந்த போதிலும்) வெகு தொலை தூரத்திலிருந்து அழைக்கப்படுபவர்கள் (போல் இருக்கின்றனர்).

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
ءَاتَيْنَا
நாம் கொடுத்தோம்
مُوسَى
மூஸாவிற்கு
ٱلْكِتَٰبَ
வேதத்தை
فَٱخْتُلِفَ فِيهِۗ
ஆனால் முரண்பாடு செய்யப்பட்டது/அதில்
وَلَوْلَا كَلِمَةٌ
ஒரு வாக்கு முந்தியிருக்கவில்லை என்றால்
مِن رَّبِّكَ
உமது இறைவனிடமிருந்து
لَقُضِىَ
தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்
بَيْنَهُمْۚ
அவர்களுக்கு மத்தியில்
وَإِنَّهُمْ
இன்னும் நிச்சயமாக அவர்கள்
لَفِى شَكٍّ
சந்தேகத்தில்தான்
مِّنْهُ
இதில்
مُرِيبٍ
மிக ஆழமான

Wa laqad aatainaa Moosal Kitaaba fakhtulifa fee; wa lawlaa Kalimatun sabaqat mir Rabbika laqudiya bainahum; wa innahum lafee shakkim minhu mureeb

நிச்சயமாக நாம் மூஸாவுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்திருந்தோம். (அவருடைய மக்கள்) அதில் பல பிரிவுகளை உண்டு பண்ணிவிட்டனர். (அவர்களை விசாரித்துத் தீர்ப்புக் கூறுவது மறுமையில்தான் என்று) உங்களது இறைவனின் வாக்கு முன்னதாகவே ஏற்பட்டிருக்காவிடில், அவர்களுடைய காரியம் (இதுவரையில்) முடிந்தே போயிருக்கும். நிச்சயமாக இவர்களும் பெரும் சந்தேகத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனர்.

Tafseer

مَّنْ عَمِلَ
யார் செய்வாரோ
صَٰلِحًا
நல்லதை
فَلِنَفْسِهِۦۖ
அது அவருக்குத்தான் நன்மையாகும்
وَمَنْ
இன்னும் யார்
أَسَآءَ
தீயதை செய்வாரோ
فَعَلَيْهَاۗ
அது அவருக்குத்தான் கேடாகும்
وَمَا
இல்லை
رَبُّكَ
உமது இறைவன்
بِظَلَّٰمٍ
அநியாயம் செய்பவனாக
لِّلْعَبِيدِ
அடியார்களுக்கு

Man 'amila salihan falinafshihee wa man asaaa'a fa'alaihaa; wamaa rabbuka bizallaamil lil 'abeed

எவர் நன்மைகள் செய்கின்றாரோ, அது அவருக்கே நன்று. எவர் பாவம் செய்கின்றாரோ, அது அவருக்கே கேடாகும். உங்களது இறைவன் (தன்) அடியார்கள் எவருக்கும் அறவே தீங்கு செய்வ தில்லை. (அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனர்.

Tafseer

إِلَيْهِ
அவன் பக்கமே
يُرَدُّ
திருப்பப்படுகிறது
عِلْمُ
அறிவு
ٱلسَّاعَةِۚ
மறுமையைப் பற்றிய
وَمَا تَخْرُجُ
வெளிவருவதில்லை
مِن ثَمَرَٰتٍ
பழங்களில் எதுவும்
مِّنْ أَكْمَامِهَا
அவற்றின் பாலைகளில் இருந்து
وَمَا تَحْمِلُ
கர்ப்பமடைவதுமில்லை
مِنْ أُنثَىٰ
பெண்களில் எவரும்
وَلَا تَضَعُ
இன்னும் குழந்தை பெற்றெடுப்பதுமில்லை
إِلَّا بِعِلْمِهِۦۚ
அவனது ஞானமில்லாமல்
وَيَوْمَ
நாளில்
يُنَادِيهِمْ
அவர்களை அவன் அழைக்கின்ற
أَيْنَ
எங்கே
شُرَكَآءِى
எனது இணைகள்
قَالُوٓا۟
அவர்கள்கூறுவார்கள்
ءَاذَنَّٰكَ
நாங்கள் உனக்கு அறிவித்து விட்டோம்
مَا مِنَّا
எங்களில் இல்லை
مِن شَهِيدٍ
சாட்சி சொல்பவர் யாரும்

Ilaihi yuraddu 'ilmus Saaa'ah; wa maa takhruju min samaraatim min akmaamihaa wa maa tahmilu min unsaa wa laa tada'u illaa bi'ilmih; wa Yawma yunaadeehim aina shurakaaa'ee qaalooo aazannaaka maa minnaa min shaheed

(நபியே! "விசாரணைக் காலமாகிய மறுமை எப்பொழுது வரும்?" என அவர்கள் அடிக்கடி உங்களிடம் கேட்கின்றனர். அதற்கு நீங்கள் கூறுங்கள்:) மறுமையைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே விடப்பட்டுள்ளது. (ஆகவே, அதைப் பற்றி நான் ஒன்றும் கூறுவதற்கில்லை.) அவன் அறியாமல் யாதொரு கனியும் அதன் மொட்டிலிருந்து வெளிப்படுவதில்லை. யாதொரு பெண் கர்ப்பமாவதுமில்லை; பிரசவிப்பதுமில்லை. (ஆகவே, அவை அனைத்தையும் அவனே நன்கறிவான். விசாரணைக் காலமாகிய) அந்நாளில் (இறைவன் அவர்களை நோக்கி) "நீங்கள் எனக்கு இணையாக்கியவை(களாகிய பொய்யான தெய்வங்)கள் எங்கே?" என்று கேட்பான். அதற்கு அவர்கள் "எங்களில் அவ்வாறு கூறுபவர்கள் ஒருவருமே (இன்றைய தினம்) இல்லையென்று (எங்கள் இறைவனே!) உனக்கு அறிவித்து விடுகின்றோம்" என்று கூறுவார்கள்.

Tafseer

وَضَلَّ
இன்னும் மறைந்துவிடும்
عَنْهُم
அவர்களை விட்டும்
مَّا كَانُوا۟
அவர்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந்தவை
مِن قَبْلُۖ
இதற்கு முன்னர்
وَظَنُّوا۟
இன்னும் அறிந்து கொள்வார்கள்
مَا لَهُم
தங்களுக்கு இல்லை
مِّن مَّحِيصٍ
தப்பிப்பதற்குரிய இடம் எதுவும்

Wa dalla 'anhum maa kaanoo yad'oona min qablu wa zannoo maa lahum mim mahees

இதற்கு முன்னர் அவர்கள் (இறைவனென) அழைத்துக் கொண்டிருந்தவைகளெல்லாம் அவர்களை விட்டும் மறைந்து போய்விடும். தங்களுக்குத் தப்ப வழியில்லை என்பதையும் அவர்கள் நன்கு அறிந்துகொள்வார்கள்.

Tafseer

لَّا يَسْـَٔمُ
சடைவடையமாட்டான்
ٱلْإِنسَٰنُ
மனிதன்
مِن دُعَآءِ
பிரார்த்திப்பதில்
ٱلْخَيْرِ
நன்மைக்காக
وَإِن مَّسَّهُ
அவனுக்கு நிகழ்ந்தால்
ٱلشَّرُّ
தீமைகள்
فَيَـُٔوسٌ
நிராசை அடைந்தவனாக
قَنُوطٌ
நம்பிக்கை இழந்தவனாக

Laa yas'amul insaanu min du'aaa'il khairi wa im massa hush sharru fa ya'oosun qanoot

(பிரார்த்தனை செய்து) நன்மையைக் கேட்பதில் மனிதன் (ஒருபொழுதும்) சடைவதில்லை. எனினும், அவனை யாதொரு தீங்கு அணுகும் சமயத்தில் அவன் மனமுடைந்து நம்பிக்கையிழந்து விடுகின்றான்.

Tafseer

وَلَئِنْ
أَذَقْنَٰهُ
நாம் அவனுக்கு சுவைக்க வைத்தால்
رَحْمَةً
ஓர் அருளை
مِّنَّا
நம் புறத்தில் இருந்து
مِنۢ بَعْدِ
பின்னர்
ضَرَّآءَ
தீங்குக்கு
مَسَّتْهُ
அவனுக்கு நிகந்ததது
لَيَقُولَنَّ
இன்னும் கூறுகிறான்
هَٰذَا
இது
لِى
எனக்குரியது
وَمَآ أَظُنُّ
நான் எண்ணவில்லை
ٱلسَّاعَةَ
மறுமை
قَآئِمَةً
நிகழும்
وَلَئِن رُّجِعْتُ
நான் திரும்பக் கொண்டு வரப்பட்டாலும்
إِلَىٰ رَبِّىٓ
என் இறைவனிடம்
إِنَّ لِى
நிச்சயமாக எனக்கு
عِندَهُۥ
அவனிடம்
لَلْحُسْنَىٰۚ
சொர்க்கம் உண்டு
فَلَنُنَبِّئَنَّ
நாம் நிச்சயமாக அறிவிப்போம்
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்களுக்கு
بِمَا عَمِلُوا۟
அவர்கள் செய்ததை
وَلَنُذِيقَنَّهُم
இன்னும் நிச்சயமாக அவர்களுக்கு சுவைக்க வைப்போம்
مِّنْ عَذَابٍ
கடுமையான வேதனையை

Wa la in azaqnaahu rahmatam minnaa mim ba'di dar raaa'a massat hu la yaqoolanna haazaa lee wa maaa azunnus Saa'ata qaaa'imatanw wa la'in ruji'tu ilaa Rabbeee inna lee 'indahoo lalhusnaa; falanu nabbi'annal lazeena kafaroo bimaa 'amiloo wa lanuzeeqan nahum min 'azaabin ghaleez

மனிதனைப் பிடித்திருந்த கஷ்டத்தை நீக்கிய பின்னர், நம்முடைய அருளை அவன் சுவைக்கும்படி நாம் செய்தாலோ "இது எனக்கு வரவேண்டியதாக இருந்ததே வந்தது. மறுமை ஏற்படும் என்று நான் நம்பவேயில்லை. அவ்வாறே (மறுமை ஏற்பட்டு) எனதிறைவனிடம் நான் கொண்டு போகப்பட்டாலும், அவனிடத்திலும் நிச்சயமாக எனக்கு நன்மையே கிடைக்கும் என்று கூறுகின்றான். ஆனால், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் செய்த (தீய) காரியங்களை அந்நாளில் நாம் நிச்சயமாக அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பிப்போம். அன்றி, கடினமான வேதனையை அவர்கள் சுவைக்கும்படியும் நிச்சயமாக நாம் செய்வோம்.

Tafseer