Skip to main content

إِنَّا
நிச்சயமாக நாம்
كَذَٰلِكَ
இப்படித்தான்
نَجْزِى
கூலி கொடுப்போம்
ٱلْمُحْسِنِينَ
நல்லவர்களுக்கு

Innaa kazaalika najzil muhsineen

நிச்சயமாக நன்மை செய்பவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம்.

Tafseer

إِنَّهُۥ
நிச்சயமாக அவர்
مِنْ عِبَادِنَا
நமது அடியார்களில்
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களான

Innahoo min 'ibaadinal mu'mineen

நிச்சயமாக அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவராக இருந்தார்.

Tafseer

وَإِنَّ
நிச்சயமாக
لُوطًا
லூத்
لَّمِنَ ٱلْمُرْسَلِينَ
தூதர்களில்

Wa inna Lootal laminal mursaleen

நிச்சயமாக லூத்தும் நமது தூதர்களில் ஒருவர்தான்.

Tafseer

إِذْ نَجَّيْنَٰهُ
நாம் அவரை(யும்) பாதுகாத்த சமயத்தை நினைவு கூர்வீராக!
وَأَهْلَهُۥٓ
அவரது குடும்பத்தாரையும்
أَجْمَعِينَ
அனைவரையும்

Iz najjainaahu wa ahlahooo ajma'een

அவரையும் அவருடைய குடும்பம் முழுவதையும் பாதுகாத்துக் கொண்டோம்.

Tafseer

إِلَّا
தவிர
عَجُوزًا
ஒரு மூதாட்டியை
فِى ٱلْغَٰبِرِينَ
தங்கி விடுபவர்களில் (தங்கிவிடுகின்ற)

Illaa 'ajoozan fil ghaabireen

ஆயினும், அவருடைய கிழ மனைவியைத் தவிர; அவள் (அந்தப் பாவிகளுடன்) தங்கிவிட்டாள்.

Tafseer

ثُمَّ
பிறகு
دَمَّرْنَا
நாம் அழித்தோம்
ٱلْءَاخَرِينَ
மற்றவர்களை

Summa dammarnal aakhareen

(அவளுடன் பாவம் செய்த) மற்றவர்களை நாம் அழித்து விட்டோம்.

Tafseer

وَإِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
لَتَمُرُّونَ
கடந்து செல்கிறீர்கள்
عَلَيْهِم
அவர்களை
مُّصْبِحِينَ
காலையிலும்

Wa innakum latamurroona 'alaihim musbiheen

ஆகவே, (மக்காவாசிகளே! நீங்கள் ஷாம் தேசத்திற்கு வர்த்தகத்திற்குப் போகும்பொழுதும், வரும்பொழுதும்) காலையிலோ மாலையிலோ, நிச்சயமாக நீங்கள் (அழிந்துபோன) அவர்களின் (ஊரின்) மீதே நடந்து செல்கின்றீர்கள்.

Tafseer

وَبِٱلَّيْلِۗ
இரவிலும்
أَفَلَا تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?

Wa billail; afalaa ta'qiloon

(இதனைக் கொண்டு நீங்கள்) நல்லறிவு பெற வேண்டாமா?

Tafseer

وَإِنَّ
நிச்சயமாக
يُونُسَ
யூனுஸ்
لَمِنَ ٱلْمُرْسَلِينَ
தூதர்களில் உள்ளவர்தான்

Wa inna Yoonusa laminal mursaleen

நிச்சயமாக யூனுஸும் நம்முடைய தூதர்களில் ஒருவர்தான்.

Tafseer

إِذْ أَبَقَ
அவர் ஓடிய சமயத்தை நினைவு கூர்வீராக
إِلَى ٱلْفُلْكِ
கப்பலை நோக்கி
ٱلْمَشْحُونِ
நிரம்பிய(து)

Iz abaqa ilal fulkil mash hoon

(மக்களால்) நிறைந்த கப்பலின் பக்கம் அவர் தப்பி ஓடிய சமயத்தில் (அதில் ஏறிக்கொண்டார்).

Tafseer