Sabbaha lillaahi maa fissamaawaati wal ardi wa Huwal 'Azeezul Hakeem
வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகள் அனைத்துமே அல்லாஹ்வைப் புகழ்ந்து துதி செய்கின்றன. அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
Lahoo mulkus samaawaati wal ardi yuhyee wa yumeetu wa Huwa 'alaa kulli shai'in Qadeer
வானங்கள் பூமியின் ஆட்சியும் அவனுக்குடையதே! அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணிக்கச் செய்கின்றான். அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவன்.
Huwal Awwalu wal'Aakhiru waz Zaahiru wal Baatinu wa huwa bikulli shai'in Aleem
அவனே முதலானவன்; அவனே இறுதியானவன்; அவனே வெளிப்படையானவன்; அவனே மறைவானவன்; அவனே ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன்.
Huwal lazee khalaqas samaawaati wal arda fee sittati ayyaamin summas tawaa 'alal 'Arsh; ya'lamu maa yaliju filardi wa maa yakhruju minhaa wa maa yanzilu minas samaaa'i wa maa ya'ruju feeha wa Huwa ma'akum ayna maa kuntum; wallaahu bimaa ta'maloona Baseer
அவன்தான் வானங்களையும் பூமியையும் ஆறு நாள்களில் படைத்தான். பின்னர், அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தகுந்தாற் போல்) உயர்ந்துவிட்டான். (வித்து முதலியவை) பூமியில் விதைக்கப் படுவதையும் அவை முளைத்து வெளிப்படுவதையும், வானத்தில் இருந்து இறங்குபவைகளையும், (பூமியிலிருந்து) ஏறுபவைகளையும் அவன் நன்கறிவான். நீங்கள் எங்கிருந்தபோதிலும், அவன் உங்களுடன் இருக்கின்றான். நீங்கள் செய்பவைகளையும் (அந்த) அல்லாஹ் உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான்.
Lahoo mulkus samaawaati wal ard; wa ilal laahi turja'ul umoor
வானங்கள் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! எல்லா விஷயங்களும் (அந்த) அல்லாஹ்விடமே கொண்டு வரப்படும்.
Yoolijul laila fin nahaari wa yoolijun nahaara fil lail; wa Huwa 'Aleemum bizaatis sudoor
அவனே, இரவைப் பகலில் புகுத்துகின்றான்; பகலை இரவில் புகுத்துகின்றான். மனதிலுள்ள எல்லா எண்ணங்களையும் அவன் நன்கறிவான்.
Aaaminoo billaahi wa Rasoolihee wa anfiqoo mimmaa ja'alakum mustakh lafeena feehi fallazeena aamanoo minkum wa anfaqoo lahum ajrun kabeer
ஆகவே, (மனிதர்களே! நீங்கள்) அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள். இன்னும், அல்லாஹ் உங்களுக்கு முன் சென்றவர்களின் எப்பொருள்களுக்கு உங்களைப் பிரதிநிதிகளாக ஆக்கினானோ அப்பொருள்களிலிருந்து நீங்கள் தானம் செய்யுங்கள். உங்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு தானம் செய்கின்றார்களோ, அவர்களுக்குப் பெரியதொரு கூலி உண்டு.
Wa maa lakum laa tu'minoona billaahi war Rasoolu yad'ookum lituu'minoo bi Rabbikum wa qad akhaza meesaaqakum in kuntum mu'mineen
(மனிதர்களே!) நீங்கள் அல்லாஹ்வை ஏன் நம்பிக்கை கொள்வதில்லை? உங்களைப் படைத்து காக்கும் உங்கள் இறைவனைத்தான் நீங்கள் நம்பிக்கை கொள்ளுமாறு, உங்களை நம்முடைய தூதர் அழைக்கின்றார். (இதைப்பற்றி, இறைவன்) உங்களிடம் நிச்சயமாக வாக்குறுதி பெற்றிருக்கின்றான். நீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் (இதன் உண்மையை நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்.)
Huwal lazee yunazzilu 'alaa 'abdiheee Aayaatim baiyinaatil liyukhrijakum minaz zulumaati ilan noor; wa innal laaha bikum la Ra'oofur Raheem
உங்களை(ப் பாவத்தின்) இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் கொண்டு வரும் பொருட்டே, அவன் தனது அடியார் மீது தெளிவான வசனங்களை இறக்கி வைத்திருக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக கிருபையுடையவனும் மிக இரக்கம் உடையவனாகவும் இருக்கின்றான்.
Wa maa lakum allaa tunfiqoo fee sabeelil laahi wa lillaahi meeraasus samaawaati wal-ard; laa yastawee minkum man anfaqa min qablil fat-hi wa qaatal; ulaaaika a'zamu darajatam minal lazeena anfaqoo mim ba'du wa qaataloo; wa kullanw wa'adallaahul husnaa; wallaahu bimaa ta'maloona Khabeer
உங்களுக்கென்ன! அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் செலவு செய்ய வேண்டாமா? வானங்கள், பூமியிலுள்ளவைகளின் உரிமை அல்லாஹ்வுக்குரியதுதானே! உங்களில் எவர் (மக்காவை) வெல்வதற்கு முன்னர் தன் பொருளைச் செலவு செய்து போர் புரிந்தாரோ, அவர் மகத்தான பதவி உடையவர். ஆகவே, அதற்குப் பின்னர், தன் பொருளைச் செலவு செய்து போர் புரிந்தவர் அவருக்குச் சமமாக மாட்டார். எனினும், இவ்விருவருக்கும் அல்லாஹ் நன்மையையே வாக்களித்திருக்கின்றான். அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
القرآن الكريم: | الحديد |
---|---|
ஸஜ்தா (سجدة): | - |
ஸூரா (latin): | Al-Hadid |
ஸூரா: | 57 |
வசனம்: | 29 |
Total Words: | 544 |
Total Characters: | 2476 |
Number of Rukūʿs: | 4 |
Classification (Revelation Location): | மதனீ |
Revelation Order: | 94 |
Starting from verse: | 5075 |