Skip to main content
bismillah

إِذَا جَآءَكَ
உம்மிடம் வந்தால்
ٱلْمُنَٰفِقُونَ
நயவஞ்சகர்கள்
قَالُوا۟
கூறுவார்கள்
نَشْهَدُ
நாங்கள் சாட்சி பகருகிறோம்
إِنَّكَ
நிச்சயமாக நீர்
لَرَسُولُ
தூதர்தான் என்று
ٱللَّهِۗ
அல்லாஹ்வின்
وَٱللَّهُ
அல்லாஹ்
يَعْلَمُ
நன்கறிவான்
إِنَّكَ
நிச்சயமாக நீர்
لَرَسُولُهُۥ
அவனது தூதர்தான் என்று
وَٱللَّهُ
அல்லாஹ்
يَشْهَدُ
சாட்சி பகருகின்றான்
إِنَّ
நிச்சயமாக
ٱلْمُنَٰفِقِينَ
நயவஞ்சகர்கள்
لَكَٰذِبُونَ
பொய்யர்கள்தான்

Izaa jaaa'akal munaafiqoona qaaloo nashhadu innaka la rasoolul laah; wallaahu ya'lamu innaka la rasooluhoo wallaahu yashhadu innal munaafiqeena lakaaziboon

(நபியே! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்) நயவஞ்சகர்கள் உங்களிடம் வந்து, "நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுடைய தூதர்தான் என்று நாங்கள் சாட்சி கூறுகின்றோம்" என்பதாகக் கூறுகின்றனர். நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுடைய தூதர் என்பதை அல்லாஹ் நன்கறிவான். எனினும், இந்த நயவஞ்சகர்கள் நிச்சயமாகப் பொய்யையே கூறுகின்றனர் என்று அல்லாஹ் சாட்சியம் கூறுகின்றான்.

Tafseer

ٱتَّخَذُوٓا۟
ஆக்கிக் கொண்டனர்
أَيْمَٰنَهُمْ
தங்கள் சத்தியங்களை
جُنَّةً
கேடயமாக
فَصَدُّوا۟
தடுத்தனர்
عَن سَبِيلِ
பாதையை விட்டு
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
سَآءَ
மிகக் கெட்டுவிட்டன
مَا كَانُوا۟
அவர்கள் செய்துகொண்டிருந்தவை

Ittakhazoo aymaanahum junnatan fasaddoo 'an sabeelil laah; innahum saaa'a maa kaanoo ya'maloon

(தவிர, இவர்கள்) தங்களுடைய (பொய்ச்) சத்தியங்களை ஒரு கேடயமாக வைத்துக் கொண்டு (மக்களை) அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து தடுக்கின்றனர். நிச்சயமாக இவர்கள் செய்து கொண்டிருக்கும் காரியம் மகாகெட்டது.

Tafseer

ذَٰلِكَ
அதற்கு காரணம்
بِأَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
ثُمَّ
பிறகு
كَفَرُوا۟
நிராகரித்தனர்
فَطُبِعَ
ஆகவே, முத்திரை இடப்பட்டுவிட்டது
عَلَىٰ قُلُوبِهِمْ
அவர்களின் உள்ளங்கள் மீது
فَهُمْ
ஆகவே, அவர்கள்
لَا يَفْقَهُونَ
புரிய மாட்டார்கள்

Zaalika bi annahum aamanoo summa kafaroo fatubi'a 'alaa quloobihim fahum laa yafqahoon

(இதற்குரிய) காரணமாவது: இவர்கள் "நம்பிக்கைக் கொண்டோம்" என்று (வாயினால்) கூறிப் பின்னர் அதனை நிராகரித்துவிட்டதுதான் (காரணம்). ஆகவே, அவர்களுடைய உள்ளங்களில் முத்திரையிடப்பட்டுவிட்டது. (எதையும்) அவர்கள் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்..

Tafseer

وَإِذَا رَأَيْتَهُمْ
நீர் அவர்களைப் பார்த்தால்
تُعْجِبُكَ
உம்மைக் கவரும்
أَجْسَامُهُمْۖ
அவர்களின் உடல்கள்
وَإِن يَقُولُوا۟
அவர்கள் கூறினால்
تَسْمَعْ
நீர் செவியுறுவீர்
لِقَوْلِهِمْۖ
அவர்களின் கூற்றை
كَأَنَّهُمْ خُشُبٌ
அவர்கள் மரப்பலகைகளைப் போல்
مُّسَنَّدَةٌۖ
சாய்த்து வைக்கப்பட்ட
يَحْسَبُونَ
எண்ணுவார்கள்
كُلَّ
ஒவ்வொரு
صَيْحَةٍ
சப்தத்தையும்
عَلَيْهِمْۚ
தங்களுக்கு பாதகமாகவே
هُمُ
அவர்கள்தான்
ٱلْعَدُوُّ
எதிரிகள்
فَٱحْذَرْهُمْۚ
ஆகவே அவர்களிடம் கவனமாக இருப்பீராக!
قَٰتَلَهُمُ
அவர்களை அழிப்பான்
ٱللَّهُۖ
அல்லாஹ்
أَنَّىٰ
எவ்வாறு
يُؤْفَكُونَ
அவர்கள் திருப்பப்படுகின்றார்கள்

Wa izaa ra aytahum tu'jibuka ajsaamuhum wa iny yaqooloo tasma' liqawlihim kaannahum khushubum musannadah; yahsaboona kulla saihatin 'alaihim; humul 'aduwwu fahzarhum; qaatalahumul laahu annaa yu'fakoon

(நபியே!) அவர்களை நீங்கள் பார்த்தால், அவர்களுடைய தேகங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும். அவர்கள் பேச ஆரம்பித்தால், அவர்களுடைய வார்த்தையையே நீங்கள் கேட்கும்படி ஏற்படும். (நீங்கள் பேசுவதற்கு வாய்ப்பளிக்காது பேசுவார்கள்.) சுவற்றில் சாய்ந்த மரங்களைப்போல் அவர்கள் (அசையாது) இருப்பார்கள். (அவர்கள் செவியுறும்) எந்தச் சப்தத்தையும் தங்களுக்கு விரோதமாகப் பேசுவதாகவே எண்ணிக்கொள்வார்கள். (நபியே!) இவர்கள்தாம் (உங்களுடைய உண்மையான) எதிரிகள். ஆகவே, இவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். அல்லாஹ் அவர்களை அழித்துவிடுவான். (சத்தியத்திலிருந்து) அவர்கள் எங்கு செல்கின்றனர்?

Tafseer

وَإِذَا قِيلَ
கூறப்பட்டால்
لَهُمْ
அவர்களிடம்
تَعَالَوْا۟
வாருங்கள்
يَسْتَغْفِرْ
மன்னிப்புத் தேடுவார்
لَكُمْ
உங்களுக்காக
رَسُولُ
தூதர்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
لَوَّوْا۟
வேகமாக அசைக்கிறார்கள்
رُءُوسَهُمْ
தங்கள் தலைகளை
وَرَأَيْتَهُمْ
இன்னும் அவர்களை நீர் பார்ப்பீர்
يَصُدُّونَ
புறக்கணிப்பவர்களாகவே
وَهُم
அவர்கள்
مُّسْتَكْبِرُونَ
கர்வம் கொள்பவர்கள்

Wa izaa qeela lahum ta'aalaw yastaghfir lakum rasoolul laahi lawwaw ru'oo sahum wa ra aytahum yasuddoona wa hum mustakbiroon

அவர்களை நோக்கி, "வாருங்கள்; அல்லாஹ்வுடைய தூதர் உங்களுடைய குற்றங்களை மன்னிக்க, (இறைவனிடம்) கோருவார்" என்று கூறப்பட்டால், அவர்கள் தங்கள் தலைகளை அசைத்துக் கர்வம் கொண்டு (உங்களைப் பார்க்காதவர்களைப் போல்) திரும்பிச் செல்வதை நீங்கள் காண்பீர்கள்.

Tafseer

سَوَآءٌ
சமம்தான்
عَلَيْهِمْ
அவர்களுக்கு
أَسْتَغْفَرْتَ
நீர் பாவமன்னிப்புத் தேடினாலும்
لَهُمْ
அவர்களுக்காக
أَمْ لَمْ
நீர் பாவமன்னிப்புத் தேடவில்லை என்றாலும்
لَهُمْ
அவர்களுக்காக
لَن يَغْفِرَ
மன்னிக்கவே மாட்டான்
ٱللَّهُ
அல்லாஹ்
لَهُمْۚ
அவர்களை
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
لَا يَهْدِى
நேர்வழி செலுத்த மாட்டான்
ٱلْقَوْمَ
மக்களை
ٱلْفَٰسِقِينَ
பாவிகளான

Sawaaa'un 'alaihim as taghfarta lahum am lam tastaghfir lahum lany yaghfiral laahu lahum; innal laaha laa yahdil qawmal faasiqeen

(நபியே!) நீங்கள் அவர்களுக்குப் பிழைபொறுக்கத் தேடுவதும் அல்லது, அவர்களுக்குப் பிழை பொறுக்கத் தேடாதிருப்பதும் அவர்களுக்குச் சமமே. அல்லாஹ் அவர்களுக்குப் பிழை பொறுக்கவே மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் பாவம் செய்யும் இத்தகைய மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை.

Tafseer

هُمُ ٱلَّذِينَ
இவர்கள்தான்
يَقُولُونَ
கூறுகிறார்கள்
لَا تُنفِقُوا۟
தர்மம் செய்யாதீர்கள்
عَلَىٰ
மீது
مَنْ عِندَ
அல்லாஹ்வின் தூதரிடம் இருப்பவர்கள்
حَتَّىٰ
இறுதியாக
يَنفَضُّوا۟ۗ
பிரிந்து விடுவார்கள்
وَلِلَّهِ
அல்லாஹ்விற்கே
خَزَآئِنُ
பொக்கிஷங்கள்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
وَٱلْأَرْضِ
இன்னும் பூமியின்
وَلَٰكِنَّ
என்றாலும்
ٱلْمُنَٰفِقِينَ
நயவஞ்சகர்கள்
لَا يَفْقَهُونَ
புரிய மாட்டார்கள்

Humul lazeena yaqooloona laa tunfiqoo 'alaa man inda Rasoolil laahi hatta yanfaddoo; wa lillaahi khazaaa' inus samaawaati wal ardi wa laakinnal munaafiqeena la yafqahoon

இவர்கள்தாம் (மற்ற மக்களை நோக்கி,) "அல்லாஹ்வுடைய தூதருடன் இருக்கும் மக்களுக்கு நீங்கள் யாதொரு தானமும் செய்யாதீர்கள். அதனால், அவர்கள் அவர்களை விட்டும் விலகி விடுவார்கள்" என்று கூறுகின்றனர். (நபியே! நீங்கள் கூறுங்கள்:) "வானங்கள் பூமியிலுள்ள பொக்கிஷங்கள் அனைத்தும் அல்லாஹ் வுக்குச் சொந்தமானவையே; எனினும், இந்த நயவஞ்சகர்கள் (இதனை) உணர்ந்து கொள்ள மாட்டார்கள்."

Tafseer

يَقُولُونَ
கூறுகின்றனர்
لَئِن رَّجَعْنَآ
நாம் திரும்பினால்
إِلَى ٱلْمَدِينَةِ
மதீனாவிற்கு
لَيُخْرِجَنَّ
நிச்சயமாக வெளியேற்றவேண்டும்
ٱلْأَعَزُّ
கண்ணியவான்கள்
مِنْهَا
அதிலிருந்து
ٱلْأَذَلَّۚ
தாழ்ந்தவர்களை
وَلِلَّهِ
அல்லாஹ்விற்கு(ம்)
ٱلْعِزَّةُ
கண்ணியம்
وَلِرَسُولِهِۦ
அவனது தூதருக்கும்
وَلِلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கும்தான்
وَلَٰكِنَّ
என்றாலும்
ٱلْمُنَٰفِقِينَ
நயவஞ்சகர்கள்
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்

Yaqooloona la'ir raja'naaa ilal madeenati la yukhrijanal a'azzu minhal azall; wa lillaahil 'izzatu wa li Rasoolihee wa lilmu'mineena wa laakinnal munaafiqeena laa ya'lamoon

அன்றி, "நாங்கள் மதீனாவிற்குத் திரும்ப வந்தால், கண்ணியமுள்ள நாங்கள் (நம்பிக்கைக் கொண்ட இந்த) இழிவானவர்களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றி விடுவோம்" என்றும் கூறுகின்றனர். (நபியே! நீங்கள் கூறுங்கள்:) கண்ணிய மெல்லாம், அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் சொந்தமானது. எனினும், இந்த நயவஞ்சகர்கள் (அதனை) அறிந்து கொள்ளவில்லை.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே!
لَا تُلْهِكُمْ
உங்களை ஈடுபடுத்தி விடவேண்டாம்
أَمْوَٰلُكُمْ
உங்கள் செல்வங்களும்
وَلَآ أَوْلَٰدُكُمْ
உங்கள் பிள்ளைகளும்
عَن ذِكْرِ
அல்லாஹ்வின் நினைவை விட்டும்
وَمَن
யார்
يَفْعَلْ
செய்துவிடுவார்களோ
ذَٰلِكَ
அப்படி
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
ٱلْخَٰسِرُونَ
நஷ்டவாளிகள்

Yaaa ayyuhal lazeena aamanoo la tulhikum amwaalukum wa laa awlaadukum 'anzikril laah; wa mai-yaf'al zaalika fa-ulaaa'ika humul khaasiroon

நம்பிக்கையாளர்களே! உங்களுடைய பொருள்களும், உங்களுடைய சந்ததிகளும் அல்லாஹ்வுடைய ஞாபகத்தை உங்களுக்கு மறக்கடித்துவிட வேண்டாம். எவரேனும், இவ்வாறு செய்தால் அத்தகையவர்கள் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள்தாம்.

Tafseer

وَأَنفِقُوا۟
தர்மம் செய்யுங்கள்
مِن مَّا
நாம் உங்களுக்கு கொடுத்தவற்றில் இருந்து
مِّن قَبْلِ
முன்னர்
أَن يَأْتِىَ
வருவதற்கு
أَحَدَكُمُ
உங்களில் ஒருவருக்கு
ٱلْمَوْتُ
மரணம்
فَيَقُولَ
அவர் கூறுவார்
رَبِّ
என் இறைவா!
لَوْلَآ أَخَّرْتَنِىٓ
நீ என்னை பிற்படுத்தி வைக்கமாட்டாயா!
إِلَىٰٓ أَجَلٍ
தவணை வரை
قَرِيبٍ
கொஞ்சம் சமீபமான
فَأَصَّدَّقَ
நான் தர்மம் செய்வேனே
وَأَكُن
இன்னும் ஆகிவிடுவேனே
مِّنَ ٱلصَّٰلِحِينَ
நல்லவர்களில்

Wa anifqoo mim maa razaqnaakum min qabli any-yaatiya ahadakumul mawtu fa yaqoola rabbi law laaa akhkhartaneee ilaaa ajalin qareebin fa assaddaqa wa akum minassaaliheen

உங்களுக்கு மரணம் வருவதற்கு முன்பாகவே, நாம் உங்களுக்குக் கொடுத்தவைகளிலிருந்து தானம் செய்யுங்கள். (அவ்வாறு செய்யாதவன் மரணிக்கும் சமயத்தில்,) "என் இறைவனே! ஒரு சொற்ப காலத்திற்கு என்னை விட்டுவைக்க வேண்டாமா? (அவ்வாறு விட்டால்,) நான் தானமும் செய்வேன்; (நன்மைகளைச் செய்து) நல்லோர்களிலும் ஆகிவிடுவேன்" என்று கூறுவான்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் முனாஃபிஃகூன்
القرآن الكريم:المنافقون
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-Munafiqun
ஸூரா:63
வசனம்:11
Total Words:80
Total Characters:976
Number of Rukūʿs:2
Classification
(Revelation Location):
மதனீ
Revelation Order:104
Starting from verse:5188