Wa iz anjainaakum min Aali Fir'awna yasoomoo nakum sooo'al 'azaab, yuqattiloona abnaaa'akum wa yastahyoona nisaaa'akum; wa fee zaalikum balaaa'um mir Rabbikum 'azeem
(இஸ்ராயீலின் சந்ததிகளே!) உங்களுக்கு மிகக் கொடிய துன்பங்களை விளைவித்துக் கொண்டிருந்த ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிலிருந்து நாம் உங்களை பாதுகாத்துக் கொண்டதை நீங்கள் நினைத்துப் பாருங்கள். அவர்கள் உங்கள் ஆண் பிள்ளைகளைக் கொலை செய்துவிட்டு உங்கள் பெண் பிள்ளைகளை (மட்டும்) உயிருடன் வாழவிட்டு வந்தார்கள். இதில் உங்களுக்கு உங்கள் இறைவனால் பெரியதொரு சோதனை ஏற்பட்டிருந்தது.
Wa waa'adnaa Moosaa salaaseena lailatanw wa at mamnaahaa bi'ashrim fatamma meeqaatu Rabbihee arba'eena lailah; wa qaala Moosaa liakheehi Haaroonakh lufnee fee qawmee wa aslih wa laa tattabi' sabeelal mufsideen
மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்திருந்தோம். பின்னர் அத்துடன் பத்து (இரவுகளைச்) சேர்த்தோம். ஆகவே, அவருடைய இறைவனின் வாக்குறுதி நாற்பது இரவுகளாகப் பூர்த்தியாயிற்று. ஆகவே, அதுசமயம் மூஸா தன் சகோதரர் ஹாரூனை நோக்கி "நீங்கள் நம்முடைய மக்களிடையே என்னுடைய இடத்திலிருந்து அவர்களைச் சீர்திருத்துங்கள். அன்றி விஷமிகளுடைய வழியை நீங்கள் பின்பற்றாதீர்கள்" என்று கூறினார்.
Wa lammaa jaaa'a Moosa limeeqaatinaa wa kallamahoo Rabbuhoo qaala Rabbi arineee anzur ilaik; qaala lan taraanee wa laakininzur ilal jabali fa inistaqarra makaanahoo faswfa taraanee; falammaa tajallaa Rabbuhoo liljabali ja'alahoo dakkanw wa kharra Moosaa sa'iqaa; falammaaa afaaqa qaala Subhaanaka tubtu ilaika wa ana awwalul mu'mineen
நாம் (குறிப்பிட்ட இடத்திற்கு) குறிப்பிட்ட நேரத்தில் மூஸா வந்தபொழுது அவருடைய இறைவன் அவருடன் பேசினான். (அப்பொழுது மூஸா தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! நான் உன்னை (என் கண்ணால்) பார்க்க (விரும்புகின்றேன்.) நீ உன்னை எனக்கு காண்பி" என்று கூறினார். (அதற்கு இறைவன் "நேர்முகமாக) என்னைக் காண உங்களால் ஒருக்காலும் முடியாது. எனினும் இம்மலையை நீங்கள் நோக்குங்கள். அது தன்னுடைய இடத்தில் நிலைத்திருந்தால் பின்னர் நீங்கள் என்னைக் காண்பீர்கள்" என்று கூறினான். அவருடைய இறைவன் அம்மலை மீது தோற்றமளிக்கவே அது தவிடு பொடியாயிற்று. மூஸா திடுக்கிட்டு (மூர்ச்சையாகி) விழுந்தார். அவர் தெளிவுபெறவே (இறைவனை நோக்கி) "நீ மிகப் பரிசுத்தமானவன். நான் (உன்னைப் பார்க்கக் கோரிய குற்றத்திலிருந்து விலகி) உன்னிடம் மன்னிப்புக் கோருகின்றேன். அன்றி, உன்னை நம்பிக்கை கொள்பவர்களில் நான் முதன்மையானவன்" என்று கூறினார்.
Qaala yaa Moosaaa innis tafaituka 'alan naasi bi Risaalaatee wa bi kalaamee fakhuz maaa aataituka wa kum minash shaakireen
(அதற்கு இறைவன்) "மூஸாவே! என்னுடைய தூதராக அனுப்புவதற்கும், என்னுடன் பேசுவதற்கும் (உங்களது காலத்தில் உள்ள) மனிதர்கள் அனைவரிலிருந்தும் நிச்சயமாக நான் உங்களைத் தேர்ந்தெடுத்து இருக்கின்றேன். ஆகவே, நான் உங்களுக்குக் கொடுப்பதை (பலமாக)ப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். மேலும், (அதற்காக) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராக) நீங்களும் இருங்கள்" என்று கூறினான்.
Wa katabnaa lahoo fil alwaahi minkulli shai'immaw 'izaanw wa tafseelal likulli shai'in fakhuzhaa biquwwatinw waamur qawmaka yaakhuzoo bi ahsanihaa; wa ooreekum daaral faasiqeen
(நாம் அவருக்குக் கொடுத்த கற்)பலகைகளில் நல்லுபதேசங்கள் அனைத்தையும், ஒவ்வொரு கட்டளையின் விவரத்தையும் அவருக்காக நாம் எழுதி "நீங்கள் இதனைப் பலமாகப் பற்றிப் பிடித்துக்கொண்டு அதிலிருக்கும் மிக அழகியவைகளை எடுத்து நடக்கும்படி உங்களுடைய மக்களுக்கு நீங்கள் கட்டளையிடுங்கள். (உங்களுக்கு மாறு செய்யும்) பாவிகள் தங்கும் இடத்தை அதிசீக்கிரத்தில் நாம் உங்களுக்குக் காண்பிப்போம்" என்றும் (நாம் மூஸாவுக்குக் கூறினோம்.)
Sa asrifu 'an Aayaatiyal lazeena yatakabbaroona fil ardi bighairil haqq; wa iny-yaraw kulla Aayatil laa yu'minoo bihaa wa iny-yaraw sabeelar rushdi laa yattakhizoohu sabeelanw wa iny-yaraw sabeelal ghaiyi yatta khizoohu sabeelaa; zaalika bi annahum kazzaboo bi Aayaatinaa wa kaanoo 'anhaa ghaafileen
நியாயமின்றி பூமியில் கர்வம் கொண்டலைபவர்கள் நம் கட்டளைகளைப் புறக்கணிக்கும்படிச் செய்து விடுவோம். ஆகவே, அவர்கள் நம்முடைய அத்தாட்சிகள் அனைத்தையும் (தங்கள் கண்ணால்) கண்டபோதிலும் அவைகளை நம்பவே மாட்டார்கள். அவ்வாறே நேரான வழியை அவர்கள் கண்டபோதிலும் அவர்கள் அதனை (தாங்கள்) செல்லும் வழியாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். எனினும், தவறான வழியைக் கண்டாலோ அதனையே (தாங்கள்) செல்லும் வழியாக எடுத்துக் கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கி, அவைகளைப் புறக்கணித்து பராமுகமாயிருந்ததே இதற்குரிய காரணமாகும்.
Wallazeena kazzaboo bi Aayaatinaa wa liqaaa'il Aakhirati habitat 'amaaluhum; hal yujzawna illaa maa kaanoo ya'maloon
ஆகவே, எவர்கள் நம்முடைய வசனங்களையும், மறுமையில் (நம்மைச்) சந்திப்பதையும் பொய்யாக்குகின்றார்களோ அவர்களுடைய (நற்)காரியங்கள் அனைத்தும் அழிந்துவிடும். (நம் வசனங்களைப் பொய்யாக்கி) அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயல்களுக்குத் தவிர (வேறெதற்கும்) கூலி கொடுக்கப் படுவார்களா?
Wattakhaza qawmu Moosaa mim ba'dihee min huliyyihim 'ijlan jasadal lahoo khuwaar; alam yaraw annahoo laa yukallimuhum wa laa yahdeehim sabeelaa; ittakha zoohu wa kaanoo zaalimeen
(தன் இறைவனிடம் உரையாட மூஸா சென்றதற்குப்) பின்னர் மூஸாவுடைய மக்கள் தங்கள் ஆபரணங்களைக் கொண்(டு செய்யப்பட்)ட கன்றுக் குட்டியின் சிலையை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டார்கள். அதற்கு (மாட்டின் சப்தத்தைப் போன்ற) சப்தமிருந்தது. எனினும் (அது உயிரற்ற வெறும் சிலை.) நிச்சயமாக அது அவர்களுடன் பேசுவதுமில்லை; அவர்களுக்கு யாதொரு வழியை அறிவிப்பதுமில்லை என்பதையும் அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா? எனினும், அவர்கள் அதனையே (தெய்வமாக) எடுத்துக் கொண்டு (அதனால் தங்களுக்குத்தாமே) தீங்கிழைத்துக் கொண்டவர்கள் ஆனார்கள்.
Wa lammaa suqita feee aideehim wa ra aw annahum qad dalloo qaaloo la'il lam yarhamnaa Rabbunaa wa yaghfir lanaa lanakoonanna minal khaasireen
அவர்கள் நிச்சயமாகத் தாங்கள் வழிகெட்டு விட்டோம் என்பதைக் கண்டு கைசேதப்பட்டபொழுது "எங்கள் இறைவன் எங்களுக்கு அருள்புரிந்து எங்கள் குற்றங்களை மன்னிக்காவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" என்று கூறினார்கள்.
Wa lammaa raja'a Moosaaa ilaa qawmihee ghadbaana asifan qaala bi'samaa khalaftumoonee mim ba'dee a-'ajiltum amra Rabbikum wa alqal alwaaha wa akhaza biraasi akheehi yajurruhoo ilaih; qaalab na umma innal qawmas tad'afoonee wa kadoo yaqtu loonanee; falaa tushmit biyal a'daaa'a wa laa taj'alnee ma'al qawmiz zaalimeen
(இதனைக் கேள்வியுற்ற) மூஸா கோபத்துடனும் துக்கத்துடனும் தன் மக்களிடம் திரும்பி வந்தபொழுது (அவர்களை நோக்கி) "நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த இக்காரியம் மிகக் கெட்டது. உங்கள் இறைவனின் கட்டளை(யாகிய வேதனை)யை நீங்கள் அவசரப்படுத்துகிறீர்களா?" என்று கூறி (இறைவனின் கட்டளைகள் எழுதப்பட்ட கற்)பலகைகளை எறிந்துவிட்டு தன் சகோதரரின் தலை (முடி)யைப் பிடித்துத் தன் பக்கம் இழுத்தார். அ(தற்க)வர் "என் தாயின் மகனே! இந்த மக்கள் நிச்சயமாக என்னை பலவீனப்படுத்தி என்னைக் கொலை செய்து விடவும் முற்பட்டனர். (ஆதலால் நான் ஒன்றும் செய்ய முடியாமலாகிவிட்டது. ஆகவே, என்னை அவமானப்படுத்தி) எதிரிகள் சந்தோஷப்படுமாறு நீங்கள் செய்து விடாதீர்கள். (இந்த) அநியாயக்கார மக்களுடனும் என்னை சேர்த்து விடாதீர்கள்" என்று கூறினார்.