'Abasa wa tawallaa.
(நமது நபி) கடுகடுத்தார்; புறக்கணித்தார். (எதற்காக?)
An jaa-ahul 'a-maa
தன்னிடம் ஓர் பார்வையற்றவர் வந்ததற்காக.
Wa maa yudreeka la'allahu yaz zakkaa.
(நபியே! உங்களிடம் வந்த) அவர் பரிசுத்தவானாக இருக்கலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா?
Au yaz zak karu fatanfa 'ahuz zikraa.
அல்லது (உங்களுடைய) நல்லுபதேசம் அவருக்குப் பயனளிக்கலாம் (என்பதை நீங்கள் அறிவீர்களா? அவ்வாறிருக்க, அவரை நீங்கள் ஏன் கடுகடுத்துப் புறக்கணித்தீர்கள்?)
Amma manis taghnaa
(நபியே! மார்க்கத்தை) எவன் அலட்சியம் செய்கின்றானோ,
Fa-anta lahu tasaddaa
அவனை வரவேற்பதில் நீங்கள் அதிக சிரமத்தை எடுத்துக் கொள்கின்றீர்கள்.
Wa ma 'alaika allaa yaz zakka.
அவன் பரிசுத்தவானாக ஆகாவிட்டால் அதைப் பற்றி உங்கள் மீது யாதொரு குற்றமும் இல்லை(யே)!
Wa amma man jaa-aka yas'a
எவர் (தானாகவே) உங்களிடம் ஓடி வருகின்றாரோ,
Fa-anta 'anhu talah haa.
எனினும், நீங்கள் அவரை அலட்சியம் செய்துவிடுகின்றீர்கள்.
القرآن الكريم: | عبس |
---|---|
ஸஜ்தா (سجدة): | - |
ஸூரா (latin): | 'Abasa |
ஸூரா: | 80 |
வசனம்: | 42 |
Total Words: | 130 |
Total Characters: | 533 |
Number of Rukūʿs: | 1 |
Classification (Revelation Location): | மக்கீ |
Revelation Order: | 24 |
Starting from verse: | 5758 |